உணவு தயாரிக்கும் 3D பிரிண்டர்

குழந்தைகளுக்குச் சாப்பாடு தருவது என்பது தாய்மார்களின் சிரமமான வேலை. குழந்தைகளுக்குப் புதுப் புது வடிவங்கள், புதுப் புது வண்ணங்கள் ஆகியவை விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன.

தாய்மார்களில் சிலர் தங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்குத் தகுந்தமாதிரி யானை மாதிரி, பறவை மாதிரி குட்டிக் குட்டித் தோசை சுட்டுத் தருவார்கள். குழந்தைகளும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். ஆனாலும் குழந்தைகளின் இதுபோன்ற விருப்பங்களைத் தொடர்ந்து பூர்த்திசெய்யும் அளவுக்குத் தாய்மார் களிடம் தொழில்நுட்பம் இருக்காது. அதே உணவு வகைகள்; அதே வடிவம்; அதே நிறம்; அதே சுவை. இவை எல்லாம் குழந்தைகளை உணவைவிட்டுத் தூரத்திற்கு விரட்டி விடுகிறது.

அடுத்ததாக ஊட்டச் சத்துகளை எப்படிச் சரிவிகிதத்தில் கலந்து குழந்தைகளுக்குத் தருவது என்பது ஒரு சிக்கலே. இந்த இரண்டையும் களையும் விதத்தில் செயல்படுகிறது உணவுக்கான 3டி பிரிண்டர். இதெற்கெல்லாமா 3 டி பிரிண்டர் என்றுதான் தோன்றும். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கும் கருவியைக் கொண்டு வந்துவிட்டது.

அரிசியையும் உளுந்தையும் நன்கு அரைத்து புளிக்கவைத்து அவித்து சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி தயாரிக்கிறோம். 3டி பிரிண்டரில் மாவு ஊற்றிவிட்டால் அது இட்லியைத் தந்துவிடுமா? அதைத்தான் குக்கரே தந்துவிடுமே. அப்படியானால் 3 டி பிரிண்டரால் என்ன பயன்? அவசரப்படாதீங்க. பயன் இருக்கிறது.

இட்லியை ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறத்தில் வட்ட வடிவமாகவே பார்க்கச் சலிப்பாக இல்லையா? அதை மாற்றிவிடும் இந்த 3டி பிரிண்டர். விதவிதமான வடிவங்களில் வண்ணங்களில் இட்லி மாவை வடிவமைக்க இது உதவும். குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்பைடர்மேன் வடிவத்தில், சிவப்பு நிறத்தில் இட்லி வரவேண்டுமா? கவலையே இல்லை. தேவையான மாவில் வண்ணங்களைச் சேர்த்து 3டி பிரிண்டரில் இட்டுத் தேவையான வடிவத்தையும் உள்ளீடு செய்தால் போதும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் இட்லி தயார். ஆனால் அதை அப்படியே எடுத்துச் சாப்பிட முடியாது. ஏனெனில் இட்லியின் வடிவத்தைத் தான் 3டி பிரிண்டர் உருவாக்கித் தரும். ஆனால் அதை அவிக்கும் வேலையை அது செய்யாது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.

இட்லி என்பது வெறும் உதாரணத் திற்குத்தான். அனைத்துவித உணவு வகைகளையும் இதில் உருவாக்கலாம் என்னவொன்று, எல்லாவற்றையும் பேஸ்ட் வடிவத்தில் மாற்றித்தான் பிரிண்டரின் கேப்சுயூல்களில் உள்ளீடு செய்ய வேண்டும். பெண்கள் தங்களை அழகுபடுத்த மெஹந்தி கோன்களில் மெஹந்தியை இட்டு கைகளையும் பாதங்களையும் வண்ண வண்ணமாக நுட்பமான உருவங்களால் மெருகேற்றிக் கொள்வது போல் உணவையும் கண்களைக் கவரும் வகையில் மாற்றிக்கொள்ள 3 டி பிரிண்டர் உதவும்.

பூப்போன்ற மிருதுவான இட்லி என்பதை உண்மை யிலேயே பூப்போன்ற வடிவத் திலும் வண்ணத்திலும் பெறலாம் என்பது சுவையாகத்தானே இருக்கும். இவற்றை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக் கிறது ஆனால் பயன் படுத்த முடியுமா என்னும் சந்தேகம் எழத்தான் செய்யும். அந்தச் சந்தேகங்கள் எல்லாம் களையப் பட்டு எதிர்காலத்தில் எல்லோரது வீடுகளிலும் ஒரு 3 டி பிரிண்டர் இருக்கலாம். எல்லாம் சரி இதன் விலை என்ன? இப்போது 3,000 அமெரிக்க டாலர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்