ஆண்கள் உலகம், பெண்கள் உலகமானால்?

By கனி

மந்தமான தொலைக்காட்சித் தொடர்களிடமிருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காக இப்போது புதுமையான இணையத் தொடர்கள் (Web-series) வரத் தொடங்கியிருக்கின்றன. இந்த இணையத் தொடர்களுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. அப்படியொரு இணையத் தொடர்தான் ‘ஒய்-ஃபிலிம்ஸ்’ உருவாக்கியிருக்கும் ‘மேன்’ஸ் வேர்ல்டு’ (Man's World). ஐநாவின் உலகளாவிய இலக்கான பாலின சமத்துவ வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த இணையத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாலின சமத்துவம் பற்றிப் பேசும் நகைச்சுவைத் தொடர் இது. ஆனால், நகைச்சுவையைப் பார்த்து ரசித்து சிரித்து முடித்தவுடன் நிச்சயமாக அது உங்களைப் பாலின சமத்துவத்தைப் பற்றி யோசிக்க வைக்கும்.

பாலிவுட் பிரபலங்களான பரிணீதி சோப்ரா, கல்கி கேக்கிலான், ரிச்சா சட்டா, பூமி பேட்நேகர், ஸ்வேதா திரிபாதி என ஒரு பெரிய பட்டாளமே இந்தத் தொடரில் நடித்திருக்கிறது. நான்கு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் கவுரவ் பாண்டே ஹீரோ கிரண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மேன்’ஸ் வேர்ல்டு’ டிரைலரே யூ டியூப் சேனலில் ஏகப்பட்ட லைக்ஸை அள்ளியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் எபிஸோட் வெளியாகி சமூக வலைதளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.

ஹீரோ கிரண் இந்த உலகம் ஆண்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று தீவிரமாக நம்புகிறார். “இதுவரை ஏன் யாரும் ‘ஃபாதர் இந்தியா’ படம் எடுக்கவில்லை? அப்பாவின் அன்பைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை” என்று வருத்தப்படுமளவுக்கு ஆண்கள் மீது கழிவிரக்கம் கொண்டவராக இருக்கிறார் ஹீரோ. பேருந்து இருக்கையில் ஆரம்பித்து அலுவலகம் வரை எல்லா இடங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால் தீவிரமாகப் பாதிக்கப்படுகிறார் கிரண். ஒரு கட்டத்தில், ஓர் ஆணாகத் தான் படும் அவஸ்தைகளைப் பொருக்க முடியாமல், கடவுளிடம் இப்படி வேண்டிக்கொள்கிறார் கிரண்: “ஆணாகப் பிறந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். போதும்! ஆண்களைப் பெண்கள் இடத்திலும், பெண்களை ஆண்கள் இடத்திலும் மாற்றுங்கள். அப்போதுதான் ஆண்கள் யாரும் பெண்ணியத்தைப் பற்றி நினைத்து கண்ணீர் வடிக்க மாட்டார்கள்”.

கடவுள் கிரணின் கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்துவிடுகிறார். அடுத்த நாளே எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. ஆண்களெல்லாம் பெண்கள் மாதிரியும், பெண்க ளெல்லாம் ஆண்களெல்லாம் மாதிரியும் நடத்தப்படுகிறார்கள். காலையில், கிரணின் அப்பா சமைத்துக்கொண்டிருக்கிறார். கிரணின் அம்மாவும், தங்கையும் சாப்பாட்டைக் குறை சொல்லிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படி நீளுகிறது முதல் எபிஸோட். அடுத்த பகுதிகள் அக்டோபர் 1, 6 மற்றும் 8ம் தேதிகளில் வெளியாகின்றன.

சமூகத்தின் முக்கியமான பிரச்சினையான பாலினப் பாகுபாட்டை நகைச்சுவையைப் பிரதானமான அம்சமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குப்தா. இந்த ‘மேன்’ஸ் வேர்ல்டு’ தொடரில் பிற்போக்கான சில வசனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால், அதைச் சமூகத்தின் வெளிப்பாடாகவே வைத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது தயாரிப்புக் குழு. எந்தவொரு சமூகம் ஆண், பெண் என இரு பாலினத்தையும் சமமாக நடத்துகிறதோ, அதுவே முன்னேறிய சமூகமாக இருக்க முடியும் என்று இந்தத் தொடருக்கு எதிராக சில விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

தொடரைப் பார்க்க

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்