“கல்லூரி மாணவிகளுக் கெல்லாம் சமையல் செய்யத் தெரியாது என்பதெல்லாம் வெறும் புரளிதான். நாங்க அதுலயும் புலிங்கதான்!" என்று களம் இறங்கினார்கள் கல்லூரி மாணவிகள்.
"அப்படியா..." என்று நாமும் கேமராவை சார்ஜ் ஏற்றினோம். ஸ்பாட்... பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி!
உலகச் சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், மாணவிகள் பங்கேற்ற நோர்டூர் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு பலதரப்பட்ட உணவு வகைகளைச் செய்து அசத்தினர்.
மொத்தம் 130 உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த உணவை சமைத்தபோதே மணம் அனைவரையும் சுண்டி இழுத்தது.
உணவுத் திருவிழாவில் பழமையான உணவு வகையான முடக்கத்தான் தோசை, தூதுவளைத் துவையல், மூலிகை ஜுஸ் வகைகள், மருந்தே உணவு பகுதியில் மூலிகை கொழுக்கட்டை, இஞ்சி பூண்டு ரசம் என வித்தியாசமான உணவு வகைள் இடம்பெற்றன.
அசைவத்தில் மட்டன், சிக்கன், மீன் என மாணவிகளின் கைவண்ணம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இவற்றை ருசித்துப் பார்த்த பிரபல ஹோட்டல் ஷெஃப்கள் முஸ்தபா, இளங்கோ, பிரித்வி ஆகியோர் சிறந்த ஆறு உணவு வகைகளுக்குப் பரிசு வழங்கினார்கள்.
இந்த அதகளத்திலும் மாணவிகள் ‘செல்ஃபி' எடுக்கத் தவறவில்லை. கேட்டால், “இது வரலாற்றுப் பதிவு இல்லையா?” என்று சொல்லி சிரித்தார்கள். ஆக, அந்த விழாவில் கிடைத்தது ருசியான உணவு! அட கேரமாவுக்குப்பா...
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago