சொலவடைக் கதை: ஏமாந்துபோன பனங்காட்டு நரி

By மண்குதிரை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு பேச்சு மொழிகள் இருக்கின்றன. சென்னை, கோவை, மதுரை, நெல்லை எனத் தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மக்கள் பேசும் பாஷைகள் வித்தியாசமானவை. நெல்லை என்றால் ‘ஏலேய்’, மதுரைக்குப் ‘பூடா’, சென்னையில் ‘ன்னா?’ கோவைக்குச் சென்றால் ‘ஏணுங்க’ எனப் பாஷைகள் தனித்துவமானவை. இதை வட்டார வழக்கு என்பார்கள். வேலைக்காக மக்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் குடியேறத் தொடங்கிய பிறகு இந்த மாதிரி வட்டார பாஷையைப் பேசுவது குறையத் தொடங்கிவிட்டது. பொதுமொழி என்ற பிரயோகம் வந்துவிட்டது. வட்டார பாஷை பேசுவது டீசண்ட் (decent) இல்லை என்றாகிவிட்டது.

இன்றும் கிராமங்களுக்குச் சென்றால் வட்டார வழக்குப் பாஷைகளைக் கேட்டு ரசிக்கலாம். சுவாரஸ்யமாக இருக்கும். இந்த வட்டார வழக்குப் பாஷைகளுக்கு அழகு சேர்ப்பவை சொலவடைகள் (சொல் வழக்குக் கதைகள்). புரியும்படிச் சொல்வதென்றால் பழமொழிக் கதைகள் (Proverbs Stories) எனலாம். இம்மாதிரியான சொலவடைகள் இல்லாமல் கிராம மக்களால் பேசவே முடியாது. குறிப்பாகப் பெண்களால்.

பனை மரக் காடுகள்

உதாரணமாக ஒரு சோம்பேறியைக் குறித்துப் பேசுகிறார்கள் என்றால், ‘நடக்க மாச்சப்பட்டவன் சித்தப்பன் வீட்டுல பொண்ணு எடுத்தானாம் அந்தக் கதையால்ல இருக்கு இந்தக் கூத்து’ என்பார்கள். தனக்கு உரிமைப்பட்ட ஒருவரிடம் ஒரு வேலையைச் சொல்லியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த நபரோ அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு துணையாக நான்கைந்து பேரைக் கூட்டிச் சென்றால், ‘கிழவி தண்ணீ எடுக்கப் போக, ஒம்போது பேர் தொணைக்குப் போன கதையால்ல இருக்கு’ எனச் சொலவடை சொல்வார்கள்.

நெல்லைச் சீமைதான் சொலவடைகளின் மையம். அதிலும் கரிசல் பகுதியின் சொல வடைகள், சங்க இலக்கியப் பாட்டில் உள்ள அர்த்தச் செறிவும் ரஸமும் கொண்டவை. கரிசல்காட்டின் கிழக்குப் பகுதிதான் அசலான கரிசல் காடு என்பார்கள். பனைகளும் ஒட மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தவை. வேலிக் கருவைகள் பெருத்துவிட்ட இந்தக் காலத்தில் பனைகளும் ஒட மரங்களும் கைவிடப்பட்ட பழைய வீடுகளைப் போல் ஆங்காங்கே நிற்கின்றன. இந்தப் பனை மரக் காடுகள் மயில்கள், நரிகள், முயல்கள் போன்ற சில முக்கியமான ஜீவராசிகளின் வாழிடமாக இருக்கின்றன. இவற்றில் பனங்காட்டு நரிகள் தந்திரத்திற்குப் பெயர் பெற்றவை. ‘பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சாதவை’ எனச் சொல்வார்கள். இந்தப் பின்னணியை வைத்து உருவான சொல்வடைதான்; ‘நான் ஏய்ச்ச நரி தண்ணீ குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’ என்பது. ‘ஏய்ச்ச’ என்ற சொல் ஏமாற்றிய என்ற சொல்லின் வட்டார வழக்கு.

தண்ணீர் தேடி வந்த நரியைச் சம்சாரி ஒருவன் பார்த்திருக்கிறான். நரி அவனிடம் நான் இந்த மாதிரி தண்ணீர் தேடி வந்தேன் எனச் சொல்லியது. பக்கத்தில் உள்ள சம்சாரியின் ஆட்டுத் தொழுவத்திலேயே தண்ணீர் இருந்தது. ஆனால் நரி தண்ணீரைக் குடித்தால் தேவலை. ஆனால் ஆடுகளை இழுத்துப் போய்விட்டால்? சம்சாரி யோசனை பண்ணினான். அந்த நரியைக் கொஞ்சம் காட்டுக்குள் கூட்டிப் போய், “அங்க தூரத்துல பாரு தண்ணி ஆறா ஓடுது. போய்க் குடிச்சுக்கோ” எனச் சொல்லியிருக்கிறான். ஆனால் உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது வெறும் கானல் நீர். நரி, தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் ஆற்றோட்டம் இல்லை. ஆனால் இன்னும் தூரத்தில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது. நரிக்கு அது ஆற்றோட்டம் போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது ஏமாந்து போனது. ஆசை வெட்கம் அறியாது என்பார்களே நரியும் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருந்தது. கானல் நீர் நரிக்குக் குடிக்க கிடைக்குமா என்ன? அந்த நரி தண்ணீர் குடிக்காமல் கரிசல் காடுகளில் அலைந்து கொண்டே இருந்தது.

தந்திரத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் நரியையே ஒரு சம்சாரி ஏமாற்றிவிட்டான். இந்தக் கதையை வைத்துத்தான், ‘நான் ஏமாற்றிய நரியே இன்னும் தண்ணீர் குடிக்காமல் அலைகிறது. அப்பேர்ப்பட்ட என்னை நீ ஏமாற்ற நினைக்கிறாயா?’ (‘நான் ஏய்ச்ச நரி தண்ணீ குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’)எனச் சொல்வார்கள்

நெல்லைச் சீமைதான் சொலவடைகளின் மையம். அதிலும் கரிசல் பகுதியின் சொல வடைகள், சங்க இலக்கியப் பாட்டில் உள்ள அர்த்தச் செறிவும் ரஸமும் கொண்டவை. கரிசல்காட்டின் கிழக்குப் பகுதிதான் அசலான கரிசல் காடு என்பார்கள். பனைகளும் ஒட மரங்களும் நிறைந்த பகுதியாக இருந்தவை. வேலிக் கருவைகள் பெருத்துவிட்ட இந்தக் காலத்தில் பனைகளும் ஒட மரங்களும் கைவிடப்பட்ட பழைய வீடுகளைப் போல் ஆங்காங்கே நிற்கின்றன. இந்தப் பனை மரக் காடுகள் மயில்கள், நரிகள், முயல்கள் போன்ற சில முக்கியமான ஜீவராசிகளின் வாழிடமாக இருக்கின்றன. இவற்றில் பனங்காட்டு நரிகள் தந்திரத்திற்குப் பெயர் பெற்றவை. ‘பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சாதவை’ எனச் சொல்வார்கள். இந்தப் பின்னணியை வைத்து உருவான சொல்வடைதான்; ‘நான் ஏய்ச்ச நரி தண்ணீ குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’ என்பது. ‘ஏய்ச்ச’ என்ற சொல் ஏமாற்றிய என்ற சொல்லின் வட்டார வழக்கு.

கரிசல் பகுதி முழுக்க மழையை நம்பிய மானவாரி நிலங்கள். கோடைக் காலத்தில் மக்களுக்கே குடிநீருக்குத் திண்டாட்டமாக இருக்கும். அதனால் கிழக்குப் பகுதியில் குடி தண்ணீருக்கெனத் தனிக் கண்மாய்கள் இருக்கும். அதை விவசாயத்திற்கு உபயோகப்படுத்த மாட்டார்கள். மக்களுக்கே குடி தண்ணீர்த் திண்டாட்டமாக இருக்கும்போது காட்டிற்குள் இருக்கும் ஜீவராசிகளின் பாடு இன்னும் மோசமாகத்தான் இருக்கும். இம்மாதிரியான காலத்தில் ஊருக்குள் வரும் நரிகள் தண்ணீருடன் ரெண்டு ஆடுகளை இழுத்துச் சென்றுவிடும். அப்படிப்பட்ட தந்திரமான நரி ஒன்றை ஒரு சம்சாரி (விவசாயி)ஏமாற்றிய கதை இதுதான்:

சம்சாரியும் நரியும்

தண்ணீர் தேடி வந்த நரியைச் சம்சாரி ஒருவன் பார்த்திருக்கிறான். நரி அவனிடம் நான் இந்த மாதிரி தண்ணீர் தேடி வந்தேன் எனச் சொல்லியது. பக்கத்தில் உள்ள சம்சாரியின் ஆட்டுத் தொழுவத்திலேயே தண்ணீர் இருந்தது. ஆனால் நரி தண்ணீரைக் குடித்தால் தேவலை. ஆனால் ஆடுகளை இழுத்துப் போய்விட்டால்? சம்சாரி யோசனை பண்ணினான். அந்த நரியைக் கொஞ்சம் காட்டுக்குள் கூட்டிப் போய், “அங்க தூரத்துல பாரு தண்ணி ஆறா ஓடுது. போய்க் குடிச்சுக்கோ” எனச் சொல்லியிருக்கிறான். ஆனால் உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது வெறும் கானல் நீர். நரி, தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் ஆற்றோட்டம் இல்லை. ஆனால் இன்னும் தூரத்தில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது. நரிக்கு அது ஆற்றோட்டம் போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது ஏமாந்து போனது. ஆசை வெட்கம் அறியாது என்பார்களே நரியும் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருந்தது. கானல் நீர் நரிக்குக் குடிக்க கிடைக்குமா என்ன? அந்த நரி தண்ணீர் குடிக்காமல் கரிசல் காடுகளில் அலைந்து கொண்டே இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்