இன்றைய இளைஞர்களின் ஸ்டைல்களில் ஒன்றாக ‘சைக்கிளிங்’ மாறிவருகிறது. மோட்டார் பைக் ரேஸ்களின் தாக்கம் குறைந்து இப்போது பலரும் சைக்கிளில் மேஜிக் ரைட் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சைக்கிளை ‘ஃபிட்’டாக இருப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் அன்றாடப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. அதுவும், தனியாக சைக்கிளில் பயணிப்பதைவிடக் கும்பலாக நண்பர்களுடன் சேர்ந்து பயணிக்கும்போது கிடைக்கும் உற்சாகத்தின் அளவு அதிகமில்லையா?
‘வீ ஆர் சென்னை சைக்கிளிங் குருப்’ என்னும் அமைப்பு இந்த மாதிரி உற்சாகமான சைக்கிள் பயணங்களை ஏற்பாடு செய்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பேஸ்புக்கில் இயங்கிவரும் இந்த குரூப்பில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ‘சைக்கிளிஸ்ட்ஸ்’ இருக்கிறார்கள். இந்த குரூப்பில் இருப்பவர்கள் வாரத்துக்கு நான்கு முறையாவது ‘சைக்கிள் ரைட்’ செல்கிறார்கள். வீக் எண்ட்டில் நீண்ட பயணங்கள் செல்கிறார்கள். பல வழிகளிலும் ‘சைக்கிளிங்’கை ஊக்குவிக்குகிறார்கள்.
சென்னையில் மேற்கு சென்னை குழு (சேத்பட், அண்ணாநகர் பகுதி), மெரினா குழு, தாம்பரம் குழு மூன்று இடங்களில் சைக்கிள் ரைட்கள் நடைபெறுகின்றன. உங்களுக்கு சைக்கிளிங்கில் ஆர்வம் இருந்தால் நீங்களும் ‘வீ ஆர் சென்னை சைக்ளிங் குருப்’பில் இணைந்து சைக்கிளிங்கைத் தொடரலாம்.
ஆரோக்கியத்துக்கு சைக்கிளிங்
உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு சைக்கிளிங் ஒரு வரமாக இருக்கிறது என்றே சொல்லலாம். தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வதைவிட இப்போது பலரும் சைக்கிளிங் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ‘வீ ஆர் சென்னை சைக்கிளிங் குருப்’பில் இருப்பவர்கள் சைக்கிளிங்கை ஆரோக்கியமாகத் தொடர்வதற்கு வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
“அண்ணாநகர் டவர் பூங்காவில் ஒவ்வொரு புதன்கிழமையும் சைக்கிளிங் செய்ய தேவையான தசைப் பயிற்சியை அளிக்கிறோம். தனியாக சைக்கிள் ஓட்டுவதைவிட சைக்கிளிங் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து செல்லும்போது அது புதுவிதமான உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் குரூப் ‘சைக்கிளிங்’கை ஒரு தினசரி ஆரோக்கியமான பழக்கமாகத் தொடர நினைப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாய் இருக்கிறது” என்கிறார் இந்த குரூப்’பைத் தொடங்கியவர்களில் ஒருவரான திவாகரன். இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த குரூப்பில் இணைந்து ஏழு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து சைக்கிளிங் ரைட் சென்றுகொண்டிருக்கிறார் பொறியாளர் ராம் பிரகாஷ். “ஆரம்பத்தில், சைக்கிளிங்கை ‘ஃபிட்நெஸ்’க்காகத் தொடங்கினேன். ஆனால், ஒருகட்டத்தில் இயல்பாகவே சைக்கிளிங் மீது பெரிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. சென்னையின் பல பகுதிகளை சைக்கிளில் செல்லும்போது நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
எண்ணூர், காசிமேடு போன்ற பகுதிகளுக்கு சைக்கிளில் பயணிக்கும்போது சென்னையை இன்னும் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போதெல்லாம் அலாரம் வைக்காமலே தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்கிறேன். என்னைப் பார்த்து என் அம்மா, அப்பா, தங்கை எனக் குடும்பத்தில் அனைவரும் சைக்கிளிங் செல்கிறார்கள்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ராம் பிரகாஷ்.
அலுவலகத்துக்கும் சைக்கிள்
இந்தக் குழுவில் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறையாவது அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்கிறார்கள். குழுவில் இருப்பவர்கள் அனைவரையும் ஏதொவொரு விதத்தில் தினசரி பயணங்களுக்கும் சைக்கிளைப் பயன்படுத்த உற்சாகப்படுத்துகிறார்கள். “நான் அலுவலகத்துக்கு வாரத்தில் மூன்று முறையாவது சைக்கிளில் வந்துவிடுவேன். என் அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் இருப்பதால் டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவேன். ஆனால், வெளிநாடுகளில் இருப்பதுபோல் சைக்கிளிங் சாலைகள் இங்கே இல்லை. அதனால், சைக்கிள் ரைட்களுக்குப் பெரும்பாலும் அதிகாலைதான் பொருத்தமாக இருக்கிறது” என்கிறார் திவாகரன்.
சாகசப் பயணங்கள்
‘வீ ஆர் சென்னை சைக்ளிங் குருப்’பில் சைக்ளிஸ்ட்களுக்காக நீண்ட பயணங்களும் ஏற்பாடு செய்கிறார்கள். மெரினா, ரெட்ஹில்ஸ், பெசண்ட் நகர், செயிண்ட் தாமஸ் மவுண்ட், வட சென்னை, ஓஎம்ஆர் என வாரயிறுதியில் நீண்ட பயணங்களுக்குச் செல்கிறார்கள். ‘வீ ஆர் சென்னை சைக்ளிங் குருப்’பயணங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தே செல்கிறார்கள். “ஊட்டி மலைப்பாதையில் ஒரு சைக்கிளிங் ரைட் சென்றிருந்தோம். அதேமாதிரி, சென்னை - மதுரை, கொடைக்கானல், லடாக் போன்ற இடங்களிலும் சைக்கிளிங் ரைட் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் திவாகரன்.
பெட்ரோல் செலவில்லாமல் போக்குவரத்து நெருக்கடியையும் சமாளிக்க உதவும் இந்த சைக்கிள் பயணத்தின் பக்கம் இளைஞர்களின் பார்வை திரும்புவது அவர்கள் உடம்புக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்யமானதே.
‘வீ ஆர் சென்னை சைக்கிளிங் குருப்’ பற்றி மேலும் தகவல்களுக்கு: >https://www.facebook.com/groups/wccgisthebest/
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago