கல்யாணம் என்றாலே இளைஞர்கள் மனசுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். அது காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அது பற்றிக் கவலை இல்லை. மொத்தத்தில் கல்யாணத்தை ஆர்வத்துடன் உற்சாகத்துடனுமே இளைஞர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கல்யாணச் செலவு என்று சொல்லத் தொடங்கியதுமே மனம் பதறத் தொடங்கிவிடும். ஏனெனில் கல்யாணச் செலவுக்கான கடனை அடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். தனக்கு மிஞ்சிய செலவு செய்து கல்யாணத்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை, என்றாலும் சமூக அந்தஸ்து என்ற வறட்டு கௌரவம் எளிய கல்யாணத்தை நடத்த விடுவதில்லை.
இது நமது நாட்டு அனுபவம் என்று எண்ணிவிடாதீர்கள், தென்கொரியாவிலும் இப்படித்தான் இருந்தது நிலைமை. ஆனால் அங்கே இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அவர்கள் எளிய திருமணங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார்கள்.
முன்பெல்லாம் அங்கே திருமணச் செலவு அமெரிக்கத் திருமணச் செலவைவிட அதிகமாக இருந்தது. திருமணச் செலவு கடந்த ஆண்டுவரை சராசரியாக சுமார் 64,000 அமெரிக்க டாலர் இருந்ததாம். இந்தச் செலவில் பெற்றோர் பாரம்பரியமாக வழங்கிவரும் வீட்டுக்கான செலவு சேர்க்கப்படவில்லையாம். என்றால் கல்யாணச் செலவு எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
திருமணத்துக்கு நூற்றுக் கணக்கானவர்களை அழைப்பது, விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் அளிப்பது, விருந்து என்னும் பெயரில் அநேக வகைகளை அடுக்குவது எனத் திருமணங்களில் ஆடம்பரங்கள் அணிவகுத்தன. ஆடம்பரத் திருமணங்களின் அநாவசிய செலவுகளால் பெரும்பாலான இளைஞர்களின் திருமணம் தள்ளிப்போனது. உரிய வயதில் திருமணம் ஆகாததால் குழந்தைப் பேறும் பாதிக்கப்பட்டது.
இப்போது அங்கே இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள். ஏன் திருமணத்துக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். மிகவும் எளிமையான திருமணமே போதுமே என்று முடிவு செய்துவிட்டார்கள். ஆடம்பரமான மண்டபங்களை ஒதுக்கிவிட்டார்கள். அரசும் அரசுக் கட்டிடங்களைக் கல்யாணத்துக்காக மலிவான கட்டணத்தில் வாடகைக்கு விடுகிறது.
சமீபத்தில், 32 வயதான சோ-சின்-ஓ, 34 வயதான கிம்-க்வாங்க்-யூனை இப்படி எளிமையாக மணமுடித்துக்கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு 10,000 டாலர் மட்டுமே செலவானது. சியோல் நகரின் அரசுக் கட்டிடம் ஒன்றில் நடந்தது இவர்களது திருமணம். அந்தக் கட்டிடத்தின் வாடகை அறுபது டாலர் மட்டுமே. திருமண உடைக்கென நூறு டாலர்களைச் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் திருமணத்தின் பின்னே பாரிஸுக்கு ஹனிமூன் செல்வதற்குச் செலவு சிறிது அதிகமாகிவிட்டதாம்.
கடந்த ஆண்டிலிருந்து தென் கொரியாவில் எளிய திருமணங்களை நடத்தும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம். சாமானியர்கள் என்றில்லாமல் பிரபலங்களும்கூட எளிமையான திருமணத்தைச் செய்துகொள்கிறார்கள். ஒன்-பின், லீ-நா-யங் என்ற நட்சத்திர தம்பதி தங்கள் திருமணத்துக்கு வெறும் 50 பேரை மட்டுமே அழைத்து மிகவும் எளிமையாகத் தங்கள் கல்யாணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
எளிமைத் திருமணங்களை இளைஞர்கள் தேர்வு செய்வதால் அவர்களின் பெற்றோரும் ஆசுவாசம் அடைந்திருக்கிறார்கள். வெட்டிங் கன்சல்ட்டண்டாகச் செயல்படும் டுயோ என்பவர் தன்னிடம் திருமண உதவி வேண்டு வரும் பெரும்பாலானோர் எளிய திருமணத்தைத் தேர்வு செய்கிறார்கள் என்கிறார். மேலும் இந்த எண்ணிக்கை முன்பைவிடச் சுமார் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறார்.
கல்யாணம் செய்தே கடனாளி ஆகும் நம்மூரிலும் இப்படி எளிய திருமணம் செய்துகொள்வதைப் பற்றி இளைஞர்கள் யோசிக்கலாம். ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையாகத் திருமணத்தை நடத்தினால் இல்லற வாழ்வை இனிமையாக நடத்த அது பெரிதும் உதவும். பணக் கஷ்டமும் பட வேண்டியதில்லை. ஜாலியாகத் தொடங்க வேண்டிய மண வாழ்வு சங்கடத்தில் தொடங்க வேண்டிய அவசியம் இருக்காது. இளைஞர்கள் யோசிப்பார்களா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago