கண் கவரும் ஹெல்மெட்டுகள்

By டி.கார்த்திக்

ஜூலை முதல் தேதியிலிருந்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுதான் தாமதம்; பரணில் தூங்கிக்கொண்டிருந்த பழைய ஹெல்மெட்டை எடுத்துத் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் நடுத்தர வயதினர். ஆனால், யூத்களுக்கு தங்களுடைய தாத்தாவோ, அப்பாவோ பயன்படுத்திய ஓல்டு ஸ்டைல் ஹெல்மெட்டெல்லாம் வேலைக்கு ஆகுமா? கலர்புல்லாக, வித்தியாசமாக, ஸ்டைலான ஹெல்மெட் கிடைக்குமா என்று பல கடைகளில் ஏறி இறங்கவே செய்கிறார்கள்.

ஆன்லைனிலும் வாங்க இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். நம் ஊரில் மட்டுமல்ல, ஹெல்மெட் அணியும் விழிப்புணர்வு அதிகமுள்ள நாடுகளில்கூட ஸ்டைலான ஹெல்மெட் அணியவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். உலகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் மற்றும் பிரபலமாகி வரும் வித்தியாசமான ஹெல்மெட்டுகளைப் பார்ப்போமா?

ஸ்பைடர் ஹெல்மெட்

ஸ்பைடர்மேன் ரசிகர்களாக இருப்பவர்கள் விரும்பி அணியும் ஹெல்மெட் இது. ஸ்பைடர்மேன் தலை ஸ்டைலில் இருப்பது இந்த ஹெல்மெட்டின் சிறப்பு. இதை அணிந்துகொண்டு சாலையில் பைக்கில் வந்தால் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். அமெரிக்காவில் இந்த ஹெல் மெட்டை இளைஞர்கள் விரும்பி அணிகிறார்கள். பைக் ரேஸுக்குப் போகும் இளைஞர்களின் சாய்சும் இந்த ஹெல்மெட்தான்.

சிரிச்ச முக ஹெல்மெட்

குழந்தைகள் வித்தியாசமான முக மூடியைப் போட்டுக்கொண்டு சுற்றுவார்களே, அதுபோலவே இருக்கிறது சிரிச்ச முக ஹெல்மெட். கண், மூக்கு, வாய், சிரித்த பல் வரிசை என அதகளப்படுத்துகிறது இந்த ஹெல்மெட். வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும்கூட இந்த ஹெல்மெட்டுக்கு வரவேற்பு இருக்கிறது. ஆன்லைனிலும் இந்த ஹெல்மெட் கிடைக்கிறது.

பயமுறுத்தும் ஹெல்மெட்

பிரீடேடார் (Predator) எனப்படும் வேட்டை முக ஹெல்மெட் கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலம். குறிப்பாக தாய்லாந்து நாட்டில் இந்த வகையான ஹெல்மெட்டுகளை இளைஞர்கள் அணிய விரும்புகிறார்கள். பயமுறுத்தும் தோற்றத்தில் இந்த ஹெல்மெட் இருக்கும். பயமுறுத்துவதிலேயே பல ரகங்கள் உள்ளன. ஆன்லைனில் விற்பனையில் இந்த ஹெல்மெட்டுக்குத் தனி வரவேற்பு உள்ளது.

கறுப்பு பேய் ஹெல்மெட்

இதுவும் ஒரு முகமூடி ஹெல்மெட் போன்றதுதான். அண்மைக் காலமாக பைக் ஓட்டும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஹெல்மெட்டுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். பயமுறுத்தும் பேய் தோற்றத்தில் இந்த வகையான ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சாலையில் இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு போனால் பயத்தில் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவது நிச்சயம்.

கிரியேட்டிவ் ஹெல்மெட்

சாலையில் ஹெல்மெட் அணியாமல் வரும் இளைஞர் ஒருவர், டிராபிக் போலீஸ்காரரிடம் இருந்து தப்பிக்க தர்ப்பூசணிப் பழத்தை ஹெல்மெட் போல் தலையில் கவிழ்த்துகொண்டு செல்லும் டி.வி. விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமானது. இப்போது உண்மையிலேயே தர்ப்பூசணி பழ ஸ்டைலில் ஹெல்மெட்டும் வந்துவிட்டது. இதுமட்டுமல்ல டென்னிஸ் பந்து, கோல்ஃப் பந்து, கால்பந்து, மூளை வடிவிலும்கூட கிரியேட்டிவ் ஹெல்மெட்டுகள் கஜஸ்கஸ்தான் நாட்டு இளைஞர்களிடம் பிரபலமாகி வருகின்றன.

இப்படி இன்னும் பல புதுமையான, ஸ்டைலான யூத்புல் ஹெல்மெட்டுகள் விதவிதமாக வெளி நாடுகளில் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன. இவை ஆன்லைனிலும் சாதரணமாகக் கிடைக்கின்றன. இருந்தாலும், நம் நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்டு உயிர்காக்கும் வடிவிலான ஹெல்மெட்டுகளை அணிவதே உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்