இந்தியாவில் 125 கோடிக்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள். 2014-ம் ஆண்டுக்கான முக்கிய ஆளுமைகள் நூறு பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்தால் நடிகர்கள் ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆகியோர் இடம்பிடிப்பார்களா? இடம்பிடித்தால் இவர்கள் என்ன வரிசையில் இடம்பெறுவார்கள்? யோசித்துவையுங்கள்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை 2014-ம் ஆண்டில் இந்திய அளவில் முதல் நூறு இடங்களைப் பிடித்த ஆளுமைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதை இப்போது பாருங்கள்.
இந்தப் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான். காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் இந்திய அளவில் அதிகம் கவனிக்கப்பட்டிருப்பாரோ?
இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார் அமிதாப் பச்சன். மூன்றாம் இடத்தில் ஷாரூக் கான் இருக்கிறார்.
அடுத்த இடத்துக்கு வந்திருக்கிறார் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரது இடம் 4. இவருக்குப் பின்னால் தான் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.
நடிகைகளில் டாப்பில் உள்ளார் தீபிகா படுகோன். இவரது இடம் 8.
இந்திய அளவில் 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் நடிகர்களை எல்லாம் முந்திவிட்டார் அவர். பட்டியலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் நடிகர்களைவிட முன்னணியில், 39-ம் இடத்தில் உள்ளார். ஆனால் பண மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் 17-ம் இடத்தில் இருக்கும் இவர் புகழ் அடிப்படையில் 97-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் நடிகர்களில் முதலிடம் பிடிப்பவர் விஜய் (இந்திய அளவில் 41-ம் இடம்). பண மதிப்பு அடிப்பையில் இவர் 23-ம் இடம்பிடித்தாலும் புகழ் அடிப்படையில் 80-ம் இடத்தைத்தான் இவரால் பிடிக்க முடிந்துள்ளது. அதன் பின்னர் ரஜினி (45-ம் இடம்), பண மதிப்பு அடிப்படையில் ரஜினியின் இடம் 21.
அந்த விஷயத்தில் இவர் விஜய்யை முந்திவிட்டார். அஜீத் (51-ம் இடம்) எனப் பட்டியல் தொடர்கிறது. தனுஷ் (78-ம் இடம்) இறுதியாக வருகிறார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு நடிகர், இயக்குநர் பிரபு தேவா. இவருக்குக் கிடைத்திருக்கும் இடம் 88. பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்துக்கு இந்தப் பட்டியலில் 58-ம் இடம் கிடைத்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 mins ago
சிறப்புப் பக்கம்
27 mins ago
சிறப்புப் பக்கம்
38 mins ago
சிறப்புப் பக்கம்
42 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago