வாழ்க்கையில் புதுசு புதுசா ஏதாவது கிடைச்சுட்டே இருக்குது. லேண்ட் லைன் போன் தனிக்காட்டு ராஜாவா இருந்துச்சு. லோக்கல் பிசிஓக்கள்தான் கொடிகட்டிப் பறந்தன. பிசிஓவின் ஆதிக்கத்தை ஒடுக்க மொபைல் போன் வந்துச்சு. லேண்ட் லைனுக்கும் மொபைலுக்கும் இடையில் வந்த பேஜர்தான் பாவம் அல்பாயுசுல போயிருச்சு. மொபைல் போனிலே ஃபோட்டோ எடுக்கும் வசதியும் பாட்டுக் கேட்கும் வசதியும் கிடைச்சுது.
மொபைலின் அடுத்த அவதாரமான ஸ்மார்ட் போன் வந்த பின்னர் கேட்கவே வேண்டாம். ஸ்மார்ட் போனில் விதவிதமாக ஃபோட்டோ எடுக்கும் வசதி கிடைச்சுது. அது மட்டுமல்ல தரமான வீடியோ எடுக்கவும் முடிஞ்சுது. பார்க்கும் காட்சிகளைப் படம் எடுப்பதுடன் தங்களைத் தாங்களே படமெடுத்துக்கொள்ளும் வகையில் வந்துசேர்ந்தது செல்ஃபி.
செல்ஃபியாலும் திருப்தி பெறாதவர்களுக்காக வந்ததுதான், கடந்த நவம்பரில் அறிமுகமான டப்ஸ்மாஷ் என்னும் ஆப். இப்போது எல்லோரும் விதவிதமான வீடியோவாகப் படம்பிடித்துப் பரப்புகிறார்கள். சின்னப் பையனிலிருந்து சினிமா ஸ்டார் சிம்புவரை சாதாரணமானவர்களிலிருந்து சாதனையாளர்கள்வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது டப்ஸ்மாஷ். மனசுக்குப் பிடிச்ச வசனத்துக்குத் தாங்களே வாயசைத்து ஏதோ தாங்களே அந்தப் படத்துல நடித்ததைப் போன்ற சந்தோஷத்தை அடைஞ்சுக்கிறாங்க.
தேவர் மகனின் பிரபல வசனமான ‘உனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற மிருகம்’ என்பதை பிரபல நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். ‘அசோக் இதுவரைக்கும் நீ இந்த அண்ணாமலையை நண்பனாத்தான் பார்த்திருக்க இனிமே இந்த அண்ணாமலையை விரோதியாப் பார்க்கப்போற, இந்த நாள் உன்னோட காலண்டரில் குறிச்சு வச்சுக்கோ’ என்று அண்ணாமலை திரைப்படத்தில் ஆக்ரோஷமாக ரஜினி கர்ஜிக்கும் வசனத்தைப் பேசி வீடியோவாக்கியிருக்கிறார் நடிகர் ஜெய்.
‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா’ என்ற சூரியாவின் மிரட்டல் வசனத்தை பிரேம்ஜி சொல்கிறார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் நம்ம பவர் ஸ்டாரின் டப்ஸ்மாஷ், டப்ஸ்மாஷுக்கு ‘ஆர்.ஜ.பி’யாக அமைந்துவிட்டது. இவ்வளவு ஏங்க, ஒரு குழந்தையின் டப்ஸ்மாஷ் வீடியோவை சுமார் 5 லட்சம் பேர் பார்த்திருக்காங்க.
குழந்தைகள், ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் டப்ஸ்மாஷில் பொளந்து கட்டியிருக்காங்க. வடிவேல், தனுஷ், கவுண்டமணி, நயன்தாரா இப்படி அநேக நடிகர்களின் வசனங்களுக்கு வாயசைத்து டப்ஸ்மாஷ் ஆகியிருக்கார்கள் பெண்கள். அதையும் யூடியூப்ல லட்சக்கணக்கானவங்க பார்த்திருக்காங்க.
இந்த ஒரு மாதத்தில் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் விறுவிறுன்னு பெருகிருச்சு. இப்போதைக்கு டப்ஸ்மாஷ் கிடைச்சிருக்கு. இதுக்கு அடுத்தபடியே என்ன கிடைக்குமோ தெரியல, அதுவரைக்கும் டப்ஸ்மாஷ் வீடியோவுல மாஸக் காட்டுவோம். வாழ்க்கையில வேற என்னங்க வேணும். எல்லோரும் சந்தோஷமா இருந்தாச் சரிதான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
35 mins ago
சிறப்புப் பக்கம்
45 mins ago
சிறப்புப் பக்கம்
56 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago