மாடர்ன் மொபெட்

ஜி.பி.எஸ். ட்ராக்கிங் சிஸ்டம், அலாய் வீல், எல்.இ.டி. நம்பர் பிளேட் இதெல்லாம் ஏதோ புதிதாக அறிமுகமான கார் அல்லது பைக்கில் இருந்தால் வியப்பொன்றும் இல்லை. ஆனால், 1994-ம் ஆண்டு மாடல் டி.வி.எஸ்-50-யில் இந்த வசதியெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்.

திருச்சியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் வீரபாண்டியன் என்கிற ஸ்பீடு கார்த்தி. “ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்டுவேன்னு நினைக்காதீங்க, யூத்துன்னா பெயருலேயே ஒரு வித்தியாசம் வேணும்ல” என்கிறார். ஸ்பீடு கார்த்திக்குப் பழைய மாடல் டூவீலர் என்றாலே அலாதிப் பிரியம். டிப்ளமோ முடித்து வேலைக்குப் போனவுடன் முதல் வேலையாக, ரூ.3 ஆயிரத்து 500-க்கு 1994-ம் ஆண்டு மாடல் பழைய டி.வி.எஸ்-50 வண்டியை வாங்கியவர், தெரிந்த மெக்கானிக்கிடம் கொடுத்து, வண்டியைத் தனக்குப் பிடித்த மாதிரி மாற்றத் தொடங்கினார்.

அப்போது முதல் இன்று வரை வரைக்கும் ஏதாவது மாற்றிக்கொண்டே இருக்கிறார். முதலில் 50 சிசி இன்ஜினை 80 சிசி ஆக மாற்றியவர் இதற்காக இன்ஜினுக்கு எக்ஸெல் ‘ஃபோர்’ பொருத்தினார்.

அப்புறம் புல்லட்டில் இருக்கும் கிளட்ச் வயர், சுசூகியின் சாவி இன்டிகேஷன், யமஹா பைக்கின் ஹெட்லைட், லாரியின் டேஞ்சர் லைட், மகேந்திரா வேனின் இண்டிகேட்டர், ஸ்கூட்டியின் செல்ப் ஸ்டார்ட் என லாரி முதல் லேட்டஸ்ட் பைக் வரை பலதரப்பட்ட வாகனங்களின் பழைய பாகங்களை வாங்கிப் புதுப்பித்தும், சைலன்சர், வீல், பெட்ரோல் டேங்க் ஆகியவற்றைச் சுயமாக வடிவமைத்தும் பொருத்தியுள்ளார்.

மேலும், எவர்சில்வர் டிபன் பாக்ஸில் ஸ்பீடா மீட்டரை வடிவமைத்துள்ளார். இந்தளவுக்கு வண்டியைத் தயார் செய்ய நான்கு மாதங்கள் ஆனதாம். இதுவரை ஆன செலவு மட்டும் ரூ.75 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறார். இன்னும் கொஞ்சம் சம்பாதித்தவுடன் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இரண்டு சக்கரங்களிலும் ‘டிஸ்க்’ பொருத்தும் ஜடியாவில் இருக்கிறார்.

இதையெல்லாம்விட ஹைலைட்டான விஷயம், ஜி.பி.எஸ். சிஸ்டம் பொருத்தித் தன்னுடைய மொபைல் போனில் இணைத்து வண்டியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்.

நீல நிறத்தில் பளிச்செனத் திருச்சி சாலைகளில் பறக்கும் கார்த்தியின் மொபெட்டைப் பார்க்கும் பலரும் ‘சூப்பரா ஆல்டர் செஞ்சுருக்கீங்க’எனப் பாராட்டுகின்றனர். அப்படியே எவ்வளவு செலவாச்சு எனக் கேட்கும்போது, தொகையைக் கேட்டவுடன் ஏக்கத்துடன் பெருமூச்சு விடுகின்றனர். ரூ.70 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை செலவு செய்து புது பைக் வாங்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், பழைய வண்டிக்கு இவ்வளவு செலவு செய்து வலம் வரும் ஸ்பீடு கார்த்தி வித்தியாசமான இளைஞர்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

15 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்