காதலர்களுக்குள் ஏற்படும் பிரிவு துயரமானதுதான். ஆனால், காதலில் பிரிவு வரக் கூடாது என்பதற்காக அந்த உறவைக் கஷ்டப்பட்டுத் தொடரக் கூடாது. காதலிப்பது எப்படி இனிமையானதோ, அதே மாதிரி சில நேரங்களில் ‘விட்டு விடுதலையாகி’ விலகி நிற்பதும் இனிமையானதுதான். காதலில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடலாம் என்ற கருத்துக்கு வந்துவிட்ட பின், அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதுதான் நல்லது.
அதை விட்டுவிட்டு, உலகத்துக்காகப் போலியாகக் காதலிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்கள் காதல் ‘பிரேக் அப்’பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி? உங்கள் ரிலேஷன்ஷிப்பில் இந்த ‘பிரேக் அப்’ அறிகுறிகள் இருக்கின்றனவா, இல்லையா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தொடர்பு எல்லைக்கு அப்பால்...
எந்த ஒரு ஆரோக்கியமான உறவிலும் தகவல் பரிமாற்றத்தில் பிரச்சினை வராது. ஒருவேளை, உங்கள் காதலர் உங்களிடம் பேசுவதை எந்தவொரு வலுவான காரணமும் இல்லாமல் தொடர்ந்து தவிர்த்துத்கொண்டிருக்கிறார் என்றால், நீங்கள் நிச்சயமாக உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றிப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நண்பர்கள், பணியிடம் என இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும் உங்கள் காதலர், உங்களிடம் பேசுவதை மட்டும் தவிர்த்தால் உங்கள் உறவு ஆபத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பரஸ்பரம் பேசுவதில் வரும் சிக்கல்தான் ‘பிரேக் அப்’புக்கான முதல் முக்கியமான அறிகுறி.
எங்கும் பொய், எதிலும் பொய்
உங்கள் காதலர் தொடர்ந்து எல்லா விஷயங்களிலும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால், அதுவும் முக்கியமான பிரச்சினைதான். காதலில் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டிருந்தால் நம்பகத்தன்மை போய்விடும். அத்துடன், உங்கள் காதலர் உங்களுடைய உறவை மதிக்கவில்லை என்பதுதான் தொடர் பொய்களாக வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் போன் கால்களைத் தொடர்ந்து அலட்சியப் படுத்துவது, அதற்காக ஏதாவது பொய் சொல்வது போன்றவை உங்கள் காதலருக்கு நீண்ட கால வழக்கமாக இருந்தால் அதுவும் பிரிவுக்கான அறிகுறிதான்.
முடிவற்ற சண்டைகள்
உங்கள் கேர்ள் ஃப்ரெண்டோ, பாய் ஃப்ரெண்டோ தொடர்ந்து உங்களிடம் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே வேண்டும். ஏனென்றால், தினமும் சண்டைகளோடு மட்டும் வாழ முடியாது. தொடர் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஆரோக்கியமான உறவுக்கான அம்சங்கள் அல்ல.
மரியாதை முக்கியம்
உறவின் அடிப்படையே பரஸ்பர மரியாதைதான். ஒருவேளை, இருவருக்கும் பரஸ்பர மரியாதை இல்லையென்றால் அதற்குப் பிறகு அந்த உறவைத் தொடர்வது வீண்தான்.
அதிகமான கட்டளைகள்
காதலில் கட்டளைகளுக்கு இடமில்லை. உங்கள் காதலர் உங்களுக்குத் தொடர்ந்து கட்டளைகள் மட்டுமே பிறப்பித்துக்கொண்டிருந்தால் அதுவும் தவறானதுதான். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்கள் காதலர் நீங்கள் முடிவெடுக்க உதவலாம். ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், தொடர்ந்து அவருடைய முடிவை உங்கள் மீது திணிக்கும் வழக்கம் இருந்தால், அதுவும் ஆபத்தானதுதான்.
நான்.. நான்.. நான்
உங்கள் காதலர் எப்போதும் தன்னைப் பற்றி மட்டும் யோசித்து எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் என்றால் அது சுயநலம். ஒரு ரிலேஷன் vஷிப்பில் எடுக்கப்படும் முடிவுகள் இரண்டு பேருக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், தன் நலனை மட்டுமே முன்வைத்து உங்களிடம் பேசுகிறார் என்றால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பைத் தொடர்வதைப் பரிசீலிக்க வேண்டும்.
ஏமாற்றுதல்
உறவில் ஒருமுறை நம்பகத்தன்மை இழந்துவிட்டால் அதற்குப் பிறகு அதைச் சரிசெய்வது சுலபமானதல்ல. உங்கள் காதலர் உங்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது தெரிந்த பிறகும் நீங்கள் ரிலேஷன்ஷிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தால் அது நல்லதல்ல.
நம்பிக்கை, அன்பு, மரியாதை, விட்டுக்கொடுத்தல், மகிழ்ச்சி போன்ற அம்சங்கள் இல்லாதபோது அந்த ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை. பிரிவு ஏற்படுத்தப்போகும் வலிகளுக்குப் பயந்து ஆரோக்கியமில்லாத ரிலேஷன்ஷிப்பைத் தொடர்வதும் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். பிரிந்து செல்வது மூலமாக இருவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்றால், அதைச் செய்வதில் தவறில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago