பயணங்கள் முடிவதில்லை

By வா.ரவிக்குமார்

சுற்றுலா செல்வதன் முக்கியத்துவத்தை ‘இன்விஸிபிள் விங்க்ஸ்’ என்னும் பத்து நிமிட ஆவணப் படத்தில் நச்சென்று சொல்லியிருக்கிறார் ஹரி எம். மோகனன் என்னும் இளைஞர்.

பயணத்தின் பலம்

எர்ணாகுளம், கத்ரிகடவு, காந்திநகர் பகுதியில் ஸ்ரீ பாலாஜி காபி ஷாப் நடத்திவருபவர் கே.ஆர்.விஜயன். அவரின் மனைவி மோகனா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இருவருக்கும் திருமணம் நடத்திவிட்டனர். விஜயனுக்கும் அவரின் மனைவி மோகனாவுக்கும் சினிமா பார்ப்பது, டிவி பார்ப்பது, நகைகளை வாங்கிக் குவிப்பது, மனை, வீடுகளை வாங்குவது இப்படி எதிலும் ஆர்வம் கிடையாது.

விஜயனுக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம், அவரின் மனைவி மோகனாவுடன் அவ்வப்போது டூர் கிளம்பிவிடுவதுதான். டூர் என்றால் அடுத்த மாநிலத்தில் நடக்கும் தசராவுக்கும், கும்பமேளாவுக்கும் செல்வது அல்ல, நாடு விட்டு நாடு பறக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என 16 நாடுகளுக்கு இதுவரை பறந்திருக்கின்றனர். தற்போது அமெரிக்காவுக்குப் பயணிக்க இருக்கிறார்கள்.

ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் மேலாகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாவுக்கென்று செலவு செய்திருக்கும் விஜயன், “இன்னும் பல நாடுகளுக்கும் பயணிப்போம் அதற்கான பலத்தை நாங்கள் செய்யும் பயணங்களே எங்களுக்கு அளிக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.

எங்களின் பயணங்களுக்கு எல்லைகள் இல்லை. பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனக் கேட்கிறார்கள். நேர்மையாக காபி ஷாப்பில் கிடைக்கும் வருமானம்தான். பயணங்கள்தான் நாங்கள் பறப்பதற்கான சிறகுகளைக் கொடுக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் ஆவணப் படத்தில் விஜயன்.

நம்பிக்கையைப் படம்பிடித்த இளைஞர்

விஜயனின் அசாத்தியமான இந்த நம்பிக்கையை ஆவணமாக்கி இருக்கிறார் ஹரி எம். மோகனன். 2005-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த எஸ்ஏஎப் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குநர் பயிற்சியை முடித்திருக்கிறார். மலையாளத் திரைப்பட இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் சில ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். நான்கு படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். எண்ணற்ற விளம்பரப் படங்களை எடுத்திருக்கிறார் ஹரி.

“என்னுடைய குடும்பத்தினரின் உதவியுடனும் நண்பர்களின் உதவியோடும் ஏறக்குறைய 20 லட்சம் செலவில் இந்த ஆவணப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். பயணங்களின் மேன்மையைச் சொல்லும் இந்தப் படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதையும் எளிமையான பயணத்தின் மூலம் செய்ய நினைத்தேன்.

பிரேக்வேரைட் என்னும் பெயரில் தென்னிந்தியா முழுவதும் சைக்கிளிலேயே பயணித்துக் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களில் இந்த ஆவணப் படத்தைத் திரையிட மார்ச் 30-ம் தேதி கேரளத்திலிருந்து கிளம்பினேன். ஆகஸ்ட் வரை ஏறக்குறைய 4 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளிலேயே சுற்றப் போகிறேன். கிரவுட் ஃபண்டிங் மூலம் படத்தின் தயாரிப்புச் செலவு கிடைத்தவுடன் இது எல்லாருக்குமான படமாக யூடியூபில் திரையிடப்படும்” என்கிறார் ஹரி.

குழுவாக ஆவணப் படத்தைப் பார்க்க விரும்புவோர் ஹரியைத் தொடர்பு கொள்ளலாம்: 09946989298.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்