நமது மொபைலில் உள்ள டச் ஸ்க்ரீனைப் போல நம் முன் உலகமே மாறிவிட்டால் என்ன நடக்கும்? அப்போதும் அவன் தனிமையாகவே இருப்பான். அவனது காதலியைத் தேடுவான்.
ஒரு ஸ்டுடியோ வெளி போன்ற இடத்தில் மனிதன் நிற்கிறான். புரோக்ராம் ஸ்டார்ட் என்று எழுத்துகள் ஒளிர்கின்றன. அவன் முன் ஹோலோகிராபி படங்கள் சுழல்கின்றன. அந்தப் படத்தில் ஒரு அழகிய யுவதியின் முகம். அவனது இளம் மனைவியாக இருக்கலாம். அவனது கையில் மோதிரம் இருக்கிறது. திடீரென்று அவனது கையில் கடிகாரம் போன்ற எண்காட்டி ஒளிர்கிறது. ஒரு மணி நேரம் அவகாசம் தரப்படுகிறது.
அவன் வேலையைத் தொடங்குகிறான். தனது மெய் நிகர் உலகத்தில் ஒரு சதுரத்தை உருவாக்கி, கணினி நிகழ்ச்சி நிரலைப் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டத் தொடங்குகிறான். பெரிய தெரு, மாடமாளிகைகள், விடுதிகளை ஒரு சதுக்கத்தின் நடுவில் உருவாக்குகிறான். எல்லாவற்றுக்கும் வண்ணமும் சேர்க்கிறான். பருவ நிலையையையும் விருப்பம் போல அந்த இடத்துக்குக் கொடுக்கிறான். எல்லாவற்றையும் முடித்த பிறகு சிரத்தையுடன் ஒரு அழகிய மஞ்சள் மலரை உருவாக்குகிறான். நேரம் குறுக, வேகமாக அனைத்தையும் முடித்து ஒரு அறையின் கதவில் போய் ஒளிந்துகொள்கிறான்.
அவன் வடிவமைத்த இடம் மெய்யான அழகிய சதுக்கமாகிறது. கட்டிடங்கள் உயிர்பெறுகின்றன. ஒரு விடுதியின் கதவு திறக்கிறது. நாம் முதலில் பார்த்த யுவதி அதிலிருந்து வெளியேறி வருகிறாள். அவள் மருத்துவமனை நோயாளிகள் அணியும் கவுனில் இருக்கிறாள். அவன் உருவாக்கிய தெருவில் ஒரே ஒரு மாடி மட்டும் கணினியில் வரைந்த மாதிரிகள் போலவே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். நல்ல வேளை! அவள் அவன் உருவாக்கிய மஞ்சள் மலரைப் பார்த்து ஆச்சரியமடைந்து அருகில் போகிறாள்.
அவள் அதை உற்றுப் பார்த்து ரசித்து விட்டு அந்தத் தெருவை விட்டு அகல்கிறாள். அவள் போன பிறகு அவன் உருவாக்கிய நகரம் உருக்குலைந்து வெற்றிடமாகிறது. அவன் எதற்காக அந்தச் சதுக்கத்தை உருவாக்குகிறான்? அங்கே ஏன் தனது காதலியை உயிர்ப்பித்து உலவவிடுகிறான்? இதற்கான விடை படத்தின் இறுதியில் அவிழ்கிறது. அந்தப் பெண் பார்த்து ரசித்த மஞ்சள் மலர் தான் நேசம் என்பதை வேர்ல்ட் பில்டர் குறும்படம் சொல்லாமல் சொல்கிறது.
2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் யூடியூப் மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. இதன் இயக்குநரான ப்ரானிட் இதற்கு 2000 டாலர் செலவழித்ததாகச் சொல்கிறார். இவருடைய சகோதரர் ஒளிப்பதிவாளர். லைவ் ஆக்ஷன் உத்திகளைப் பயன்படுத்தி ஒரே நாளில் எடுக்கப்பட்ட படம் இது. நடிகர்கள் அனைவரும் இலவசமாய் நடித்துக் கொடுத்துள்ளனர். இதற்கு லைட்வேவ் த்ரீடி கிராபிக்சைப் பயன்படுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago