பாய் ஃப்ரெண்ட்ஸ் சொல்லும் பொய்கள்

By கனி

உங்கள் பாய் ஃப்ரெண்ட் உங்களிடம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே அர்த்தப்படுத்திக்கொண்டால் நீங்கள் ஏமாந்துபோக நேரிடும். அவர்களுடைய அகராதியில் ஒரு வார்த்தைக்கு எப்போதும் இரண்டு அர்த்தங்கள் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது அர்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்தால், பாய் ஃப்ரெண்டை உங்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பாய் ஃப்ரெண்ட்ஸ் அதிகமாகச் சொல்லும் பொய்கள்:

10. “நாம் வெறும் நண்பர்கள்தான்”

உண்மையான அர்த்தம்: நான் உன்னுடைய பாய் ஃப்ரெண்டு மாதிரிதான், ஆனால் உண்மையான பாய் ஃப்ரெண்டு கிடையாது.

ஏன் சொல்கிறார்: இப்படிச் சொல்வது ஒரு பாதுகாப்புத் தந்திரம்தான். உங்களுடைய நட்பு, அடுத்த கட்டத்துக்குச் செல்லுமா, செல்லாதா என்று தெரிந்துகொள்வதற்கான நேரத்தை இந்த நிலை கொடுக்கும். ஒருவேளை, உங்கள் நட்பு அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லையென்றால், பிரச்சினையில்லாமல் உங்கள் நட்பைத் தொடர்வதற்கான எளிமையான வழி இது. அத்துடன், இதில் நட்புவட்டத்துக்கும் பதில்சொல்ல வேண்டியதில்லை என்பதால் இந்தத் தந்திர வாக்கியத்தைத்தான் பலரும் அதிகமாகச் சொல்கின்றனர்.

9. “நாம் தொடர்பில் இருப்போம்”

உண்மையான அர்த்தம்: என் நட்பைத் தொடர விரும்பினால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நீ தான் எடுக்க வேண்டும்.

ஏன் சொல்கிறார்: ஒரு நட்பைத் தொடர்வதற்கும், வளர்ப்பதற்கும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். அதுவும் வெவ்வேறு நகரங்களில் வசித்தால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் இரவு போன் செய்து, “எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டாயா?” என்று கேட்க வேண்டும் என பாய்ஸ் நிச்சயம் யோசிக்கக்கூட மாட்டார்கள். ஒரு நட்பை உணர்ப்பூர்வமாக வைத்திருப்பவர்கள் பெண்கள்தான். கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு, நட்பு தொடர்வதற்கு ஆண்கள் பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கமாட்டார்கள்.

8. “இதுதான் கடைசி”

உண்மையான அர்த்தம்: கடைசி என்றொரு வார்த்தை அவர்கள் அகராதியில் கிடையாது.

ஏன் சொல்கிறார்: பொதுவாக, ஒரு பழக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும்போது அதை அவர்களால் எளிதில் விடமுடியாது. அதனால்தான், புகைப்பிடிப்பதாக இருந்தாலும் சரி, மதுப்பழக்கமாக இருந்தாலும் சரி, “இதுதான் கடைசி” என்ற சொன்னபிறகு அதை அவர்களால் கடைபிடிக்க முடியவில்லை.

7. “நான் ரொம்ப நேரம் வெளியில் இருக்கமாட்டேன்”

உண்மையான அர்த்தம்: நான் வெளியே போகிறேன். திரும்பி வருவதற்கு நேரம் ஆகும். என்னைத் தொந்தரவு செய்யாதே!

ஏன் சொல்கிறார்: நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அதிகமாக அவர்கள் பயப்படுவது கேர்ள் ஃப்ரெண்ட்டிடம் இருந்து வரும் போன்களைப் பற்றித்தான். அக்கறையாக நினைத்து உங்கள் பாய் ஃப்ரெண்டு வெளியில் இருக்கும்போது அடிக்கடி போன் செய்தால், அது எதிர்விளைவைதான் உண்டாக்கும்.

6. “நான் எதற்கும் அடிமை கிடையாது”

உண்மையான அர்த்தம்: அதற்கு அர்த்தம் ஒவ்வொரு ஆணும் ஏதாவது ஒரு விஷயத்துக்கு அடிமைதான்.

ஏன் சொல்கிறார்: உங்களுடைய பாய் ஃப்ரெண்டு கிரிக்கெட், கேமிங், சினிமா என ஏதாவது ஒன்றுக்கு நிச்சயமாக அடிமையாகத்தான் இருப்பார்கள். ஆனால், அதை உங்களிடம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், அது நடக்காது.

5. “நேற்று ஞாபகம் இருந்தது”

உண்மையான அர்த்தம்: நான் உன்னுடைய காலண்டர் கிடையாது. உனக்கு முக்கியமான நாட்களை நான் ஏன் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்?

ஏன் சொல்கிறார்: ஆண்களுக்குப் பிறந்தநாள், திருமண நாள், காதல் சொன்ன நாள் என எதுவுமே ஞாபகத்தில் இருக்காது என்பது பல யுகங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம். ஆனால், அதற்கு அர்த்தம் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு என்பதில்லை. அவர்கள் குறைவான முக்கியத்துவம் இருக்கும் நாட்களை மறந்துவிடுவார்கள்.

4. “நான் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டேன், வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன், மீட்டிங்கில் இருந்தேன்”

உண்மையான அர்த்தம்: நான் பிஸியாக இல்லை. ஆனால், அதற்காக உன் போனை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஏன் சொல்கிறார்: “நான் இப்போது உன்னிடம் பேசும் மனநிலையில் இல்லை” என்பதை உங்கள் பாய் ஃப்ரெண்டால் அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. அதைத்தான் மறைமுகமாக இப்படிச் சொல்கிறார்.

3. “அது ஒரு பெரிய கதை”

உண்மையான அர்த்தம்: அது ஒரு பெரிய கதைதான். ஆனால், உன்னால் அதைக் கேட்க முடியாது.

ஏன் சொல்கிறார்: எல்லாவற்றையும் உங்கள் பாய் ஃப்ரெண்டு உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், அது நடக்காது.

2. “நான் நன்றாக இருக்கிறேன்”

உண்மையான அர்த்தம்: நான் இங்கே மிக மோசமான நிலையில் இருக்கிறேன். ஆனால், என் ‘ஈகோ’ அதை உன்னிடம் பகிர்ந்துகொள்ளாது.

ஏன் சொல்கிறார்: ஆண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தனியாகக் கையாள வேண்டும் என்று நினைப்பார்கள். பிரச்சினையின் ஆரம்பத்தில் கிடைக்கும் உதவிகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரச்சினையை எதுவுமே செய்ய முடியாது என்று தெரிந்தாலும், அதை உங்களிடம் சொல்லமாட்டார்கள்.

1. “நிச்சயமாக/ சரி/ ஆமாம்”

உண்மையான அர்த்தம்: இதற்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா?

ஏன் சொல்கிறார்: ஒரு நீண்ட விவாதம் சென்று கொண்டிருக்கும்போது, அவ்வப்போது உங்களிடம் “சரி, ஆமாம், நிச்சயமாக” போன்ற தலையாட்டல்களைச் சொல்லிவைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை. அப்போதுதான் நீங்கள் விவாதத்தை முடிப்பீர்கள் இல்லையா? மற்றபடி, அதையெல்லாம் நீங்கள் உண்மையென்று நம்பக் கூடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்