வெகுளி வெள்ளச் சாமியோட புரோகிராம் கிண்டலா, கேலியாவுக்கு நல்ல டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க.
வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள, ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.
தன்னோட அறிவுக்கு வேலை கிடைப்பதே சந்தேகமோன்னு அவனுக்கே கஷ்டமாப் போச்சு. அந்த நேரத்தில தான் புதுசா ஆரம்பிச்ச அந்த சேனலில் வேலை காலியா இருக்குன்னு அங்க போனான். சம்பளம் கொறையா கேட்டா யாரானாலும் வேலைக்கு எடுக்கலாம் அப்படிங்கிற முடிவுல சேனல் இருந்ததால, அவன வேலையில் சேத்துக்கிட்டாங்க. ஏவுற நேரமெல்லாம் ஏசி போடணும், டீ வாங்கியாரணும் இப்படியான எடுபிடி வேலைதான்.
புரொடக்ஷன் சாப்பாடு உண்டு. இதுக்கு மேல சம்பளம்னு வேற ஐஞ்சோ பத்தோ கொடுத்தாங்க. வெள்ளக்குச் செம குஷியாயிருச்சு. ஸ்டுடியோவுக்கு வர்ற எல்லாருடனும் நின்னு போட்டா எடுத்துக்குவான். அப்பதான், அங்க ‘கிண்டலா கேலியா’ன்னு ஒரு புரோகிராம் ஆரம்பிச்சாங்க. நாட்டு நடப்புகள கிண்டல் பண்ற புரோகிராம் அது. புத்திசாலித்தனத்தோட யாரும் பேசிறக் கூடாது, முட்டாள்தனமாத்தான் பேசனுங்கிறது நிகழ்ச்சியோட முக்கிய நோக்கம்.
இத ஒருங்கிணைக்கிறதுக்கு ஒருத்தர் தேவைப்பட்டார். நிறைய பேரக் கூப்பிட்டுப் பேசினாங்க. மாதிரி ஷோவெல்லாம் நடத்துனாங்க. முட்டாள்தனமா பேசுற நிகழ்ச்சியில் பங்கெடுக்கிற ஆளுங்களுக்குத் தமிழ்நாட்டுல பஞ்சமே இல்லங்கிற மாதிரி நிறையப் பேரு வந்து சேர்ந்தாங்க. ஆனா ஒருங்கிணைக்கத்தான் ஆளே இல்ல.
புரோகிராம் புரொடியூசர் பயங்கர கடுப்பா திரிஞ்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவரோட நல்ல நேரமோ அல்லது வெள்ளையோட நல்ல நேரமோ தெரியல அவன் ஒரு கூறுகெட்ட வேலையைப் பாத்துட்டான். இதக் கவனிச்ச புரோகிராம் புரொடியூசர் இம்ப்ரஸாயிட்டார். நமக்கேத்த ஆளு இவன் தான்னு முடிவு பண்ணிட்டார்.
வெள்ளைக்கு வேர்த்துப்போச்சு. அதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது சார்னு மறுத்துப் பார்த்தான். ஆனா இதைச் செய்யாட்டி வேலையை விட்டே எடுத்துருவோம்னு புரொடியூசர் மிரட்டினாரு. ஒரு நிமிஷம் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். புரொடக்ஷன் சாப்பாடு போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சான். எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் பண்ணிருவோம்னு கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டுச் சரின்னு ஒத்துக்கிட்டான்.
புரொகிராம் பயங்கர கிண்டலா இருக்கணும்னு நினச்ச புரொடியூசர் வெள்ளைக்குத் தொள தொளன்னு ஒரு கோட்ட போட்டுவிட்டார். அந்த கோட்ட போட்டுட்டு கேமரா முன்னால வந்து நிக்க, வெள்ளைக்கே கூச்சமாயிருந்துச்சு. சார்லி சாப்ளினுக்குப் பெருமையே அவரோட கோட்டுதான்டா, நல்ல வாய்ப்ப கோட்ட விட்டுடாதடா மடையான்னு புரொடியூசர் உரிமையா வெள்ளைய கண்டிச்சாரு. ஒண்ணுமே பண்ண முடியல வெள்ளையால.
துணிஞ்சவனுக்குத் தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைங்கிற மாதிரி வெள்ள துணிஞ்சுட்டான். ஆனா வெள்ளையும் சும்மா வெளுத்து வாங்குனான். புரொடியூசர் என்னவெல்லாம் சொல்றாரோ, அதையெல்லாம் அப்படியே சொன்னான். காதுக்குப் பின்னால உள்ள மைக்க கடவுள் மாதிரி நினைச்சுக்குவான் வெள்ள. ஷூட்டிங் போறதுக்கு முன்னால கடவுள் படத்துக்கு முன்னாடி அத வச்சு தொட்டுக் கும்பிட்டுட்டுதான், அத காதுக்குப் பின்னால மாட்டுவான். ஆனா பார்வையாளர் யாருக்கும் அது தெரியாது. அவனே முட்டாள்தனமாப் பேசுறதாத்தான் நினைப்பாங்க. அவ்வளவு தத்ரூபமா அவன் பேசுவான்.
புரோகிராமுக்கு வர்ற பலர் வெள்ளைகூட நின்னு போட்டோ எடுத்துக்குவாங்க. படிச்சவங்க பலரும் அவனோட இன்னொசன்ஸ ரசிச்சாங்க. ஒரு முறை புக் ஃபேருக்குப் போனான் வெள்ள. ஒரு ஸ்டாலில் போய் அறிவுஜீவி ஒருத்தரு எழுதுன புத்தகம் ஒண்ண எடுத்து வச்சுப் படிச்சிக்கிட்டிருந்தான். அத ஒரு பத்திரிகையாளர் போட்டோ எடுத்து கவர் ஸ்டோரியா எழுதுனாரு.
அந்த இஷ்யூ வந்த உடனே அறிவுஜீவியோட புத்தகம் ஆயிரக்கணக்கா விற்பனை ஆச்சு. இதுல என்ன ஹைலைட்டுன்னா புத்தகத்தை வெள்ள தலைகீழா பிடிச்சிட்டு இருப்பான். புத்தகம் விற்றதுக்குச் சந்தோஷப்படவா, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுருச்சேன்னு வருத்தப்படவான்னு தெரியாம தண்ணியப் போட்டுட்டு பாருல தலகீழ கெடந்தாரு அறிவுஜீவி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago