ஃபீலாகாத குமாரு…

By குமார்

காலேஜ், செமஸ்டர் எல்லாம் தள்ளிட்டுப் பார்த்தா, நம்ம குமாருக்கு விண்டர் சீசன்னா ரொம்ப பிடிக்கும். பட்டாசா இருக்கும். அதிகமா ஃபெஸ்டிவல்ஸ் வர்றதும் இந்த சீசன்லதான். இயர் எண்டு அப்படிங்கிறதாலா, ஆஃபர்ஸ் நிறைய இருக்கும். அவன் வச்சுருக்கிற ஓட்ட போனை மாத்தி ஒரு ஆப்பிள் வாங்கலாம். புது ஜீனு, டிசர்ட்ஸ் எடுக்கலாம். வூட்ல எதைக் கேட்டாலும் “இயர் எண்ட்ல வாங்கித் தாறேம்பாங்க. இயர் எண்ட்ல வாங்கித் தாறேம்பாங்க” அதான் வந்துடுச்சுன்னு அவன் டாடியோட சட்டைய, சாரி சாரி கையப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கலாம்.

ஃபெஸ்டிவல்ஸ், பர்சேஸை வுட்டுட்டு இப்ப இந்த டிசம்பரோட வேற ஒரு ஸ்பெஷலும் இருக்கு; லைஸ். அதாம்பா பொய். ஏமாத்துறது; டபாய்க்கிறது; உங்களுக்குப் புரியுற மாதிரி சொன்னா பல்பு கொடுக்கிறது. பொதுவா வீட்ல அம்மா சின்ன வயசுல நிறைய பொய் சொல்லிக் கேட்டிருப்பீங்க. குமாரோட அம்மா அது மாதிரி நிறைய வுடுவாங்க. “உங்க தாத்தாதான்டா ஜெமினி ப்ரிட்ஜ கட்டுனது” “உங்க ஆயாதான்டா நிலாவுல வடை சுட்டுனு இருக்கிறது” “உங்க மாமா பெரிய அப்பாடக்கர்” “அங்க போய் விளையாடாதே. பூச்சாண்டி பிடிச்சுட்டுப் போயிருவான்” அப்டி இப்டினு அவுத்து வுடுவாங்க.

குமாரும் கொழந்தைய இருக்கச்சுல இத நம்பி, “அப்ப எதுக்கும்மா, தாத்தா பேரு வைக்காம ‘ஜெமினி’னு வச்சுருக்காங்க” அப்படினு டவுட்டா கொஸ்டின் கேட்டிருக்கான். பெரிய பையனானவுட்டு பொய் சொல்றத அவுங்க அம்மா வுட்ருச்சு. குமாருக்கும் பொய் சொல்ல ஆளே இல்லாமப் போச்சு. குமாரு ப்ரெண்ட்ஸ் அப்ப லைஸ் வுட்டு பல்பு கொடுப்பாங்க. ஆனா அந்த மொக்கைகள பொய்னு சொன்னா லைஸே அவன மன்னிக்காது.

லைஸ்காகத்தான் இப்ப டிசம்பர். 2012ல இன்னா பண்ணாங்க? 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்காவுல வாழ்ந்த மாயன் அப்டிங்கிற ஒரு குரூப்ப சிமெட்டரியில் இருந்து தட்டி எழுப்பிக் கூப்ட்டு வந்தாங்க. அவுங்க இப்ப இருக்கிற அப்பாடக்கருக்கெல்லாம் பெரிய அப்பாடக்கர்னு சொன்னாங்க. முன்னாடியே ராக்கெட் விட்டிருக்காங்க. ஏலியன்ஸ் கூடயெல்லாம் மெயில் அனுப்பி காண்டக்ல இருந்தாங்க அப்படினு அள்ளிவுட்டாங்க. அப்படிப்பட்ட மாயன்ஸ் ஒரு காலண்டர் வச்சுருந்தாங்க.

நம்ம வீட்ல வச்சுருக்கிற மாதிரியான காலண்டர் இல்ல. அது பூமியோட காலண்டர். பூமி எத்தினி வருஷம் இருக்கும் அப்படிங்கிறத சொல்ற காலண்டர். அந்தக் காலண்டர்ல 2012வரைதான் இருக்குதாம். இத படிச்ச நம்ம குமாரு நம்பிட்டான். ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணான். அதாவது 2012 டிசம்பர் 21னுடன் ‘பூமி தேவி வாய்க்குள்ள எல்லோரும் போகப் போறீங்க’ அப்டினு எஃப்.பில ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு ஜாலி பண்ணான். பட் ஃபைனலி பழைய தமிழ்ப் படம் மாதிரி எல்லாம் சுபமாகத்தான் முடிஞ்சது.

இந்த இயர் இன்னா ஸ்பெஷல்ன்னா, ‘பல்பு கொடுக்கிறது. பல்பு கொடுக்கிறது’ அப்படினு சொல்லுவாங்கல்ல. இது உண்மையிலேயே பல்பு மேட்டர்தான். ஆனா பல்பு கொடுக்கிறதில்ல. பல்பு புடுங்கிற மேட்டர். புரிய மாதிரி சொன்னா, நம்ம வீட்டுக்கு ஒரு பல்பு இருக்கும்ல. அதுபோல எர்த்துக்கு சூரியன்தான் பல்பு. அந்த பல்பயே புடுங்கிட்டாங்காபா. டிசம்பர் 16ல இருந்து 6 நாளைக்குச் சூரியனே தெரியாம போயிருமாம். முழுக்க நைட்ஸ்தானாம். இதக் கேட்டு நம்மாளு குஷியாய்ட்டாப்ல. டேஸ்ஸ கவுண்ட் பண்ண ஆடம்பிச்சுட்டான். செய்தி அவுங்க ப்ரெண்ட்ஸ் மத்தில பரபரப்பாச்சு.

ஆனாலும் குமாருக்கு டவுட்டு இருந்துச்சு. குமாரு ரொம்ப ப்ரில்லியண்ட். நாசா சொன்னாதான் நம்புவான். அடுத்து ‘நாசா கன்பார்ம்’ நியூஸ் வந்துச்சு. அவ்ளோதான் நம்ம குமாரு ஜாலி ஆயிட்டான். அதுவும் டிசம்பர்ல வந்தா கேக்கவா வேணும்? இந்த நைட்ஸோட சேர்த்து நியூ இயரையும் செலிபிரேட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிட்டான். ஆனா கடைசில ‘இத நம்பாதீங்கோ’ன்னு நாசாவே சொல்லிருச்சு.

சூப்பர் ஸ்டார் படம்னு டிக்கெட் எடுத்துப் போன, பவர் ஸ்டார் படம் போட்டா எப்டி இருக்கும்? ஒரு பல்பு பியூஸான பரவாயில்ல. இருக்கிற பல்பெல்லாம் பியூஸானா எப்டி இருக்கும்? பிரியாணின்னா ஊசிப் போறதும் ஃபீவர்னா ஊசி போடுறதும் சகஜம்தான் குமாரு அழாத. ஆம்பள அழக் கூடாது. கண்ணாடியப் போடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்