பழைய மெட்ராஸும் பாரம்பரிய விளையாட்டும்

By என்.கெளரி

செ

ன்னையின் பாரம்பரியமான விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாக ‘ஃபாரம் ஆர்ட் கேலரி’யும் ‘கிரீடா கேம்ஸ்’நிறுவனமும் இணைந்து ஒரு வித்தியாசமான மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தை வடிவமைத்திருக்கின்றன. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையின் பாரம்பரிய விளையாட்டுகளையும் கலைப் படைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு காட்சியை நடத்திவருகிறார்கள். இந்தக் காட்சியில், சென்னையின் பாரம்பரிய விளையாட்டுகளின் கூறுகளைப் பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

“இந்த ஓவியக் காட்சியில், 12 ஓவியர்களின் 22 படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறோம். இந்தப் படைப்புகள் அனைத்தும் ஏதோவொரு விதத்தில் சென்னையின் பாரம்பரிய விளையாட்டுகளின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன” என்று சொல்கிறார் ஃபாரம் ஆர்ட் கேலரியின் ஒருங்கிணைப்பாளர் ஷாலினி பிஸ்வஜித். அத்துடன், பாரம்பரிய விளையாட்டுகளைத் தயாரிக்கும் ‘கிரீடா கேம்ஸ்’ நிறுவனத்தின் பல்வேறு விளையாட்டுகளை விளையாடவும் இந்தக் காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“பாரம்பரியமான விளையாட்டுகள் என்றாலே ஏதோ குழந்தைகளுக்கானது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அந்த விளையாட்டுகள் அனைவரும் விளையாடுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுகள் அனைத்திலும் தத்துவரீதியான, உளவியல்ரீதியான பல நிலைகள் உள்ளன. இந்தக் காட்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஆர்வமுடன் விளையாடுகிறார்கள். இந்தப் பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்துவதுதான் இந்தக் காட்சியின் நோக்கம்” என்கிறார் கிரீடா நிறுவனர் வினிதா சித்தார்த்தா.

பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், தாயக் கட்டம், கில்லி தண்டா, பரமபதம், கோலி உள்ளிட்ட இருபது விளையாட்டுகள் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. சென்னை அடையாரிலிருக்கும் ‘ஃபாரம் ஆர்ட் கேலரி’யில் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கிய இந்தக் காட்சி, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்புக்கு: ஃபாரம் ஆர்ட் கேலரி,

தொலைபேசி: 044 42115596

நேரம்: காலை 10.30 முதல் 6.30 வரை

(திங்கள் முதல் சனி வரை)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்