ஏழாண்டுகளாகப் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட பாலினச் சிறுபான்மையினருக்கான கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வழக்கம் போல ஜூன் மாதத்தில் பரவலாக நடக்கவில்லை. தன்பாலின உறவாளர்களுக்கும், அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் எதிரான இந்தியத் தண்டனைச் சட்டம் 377-ஐ நீக்கக் கோரிய வழக்கில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் ஒரு முக்கியக் காரணம்.
பெருநகரங்களில், சிற்றூர்களில் பாலினச் சிறுபான்மையினரின் நலனுக்காகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பல தன்னார்வ அமைப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாமல்போயிருக்கின்றன. உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை ‘மூன்றாம் பாலினம்’ என்று 2014-ல் அறிவித்ததைத் தங்களின் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றியாகக் கருதினாலும், இதை முழுதாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களில் பலருக்கும் இல்லை.
“மூன்றாவது பாலினம் நாங்கள் என்றால், முதல் பாலினம் என்பது ஆணா? இன்னும் எங்களில் இருக்கும் பல பிரிவினரை நான்காவது, ஐந்தாவது பாலினம் என்று சொல்ல முடியுமா? என்றெல்லாம் கேள்விவருகிறது. ‘மாற்றுப் பாலினம்’ என்பதையே எதிர்காலத்தில் நாங்கள் வலியுறுத்துவோம்” என்கிறார் பாலினச் சிறுபான்மையினரைப் பற்றிய அறிமுகத்தை கல்லூரி மாணவர்களுக்கு பவர்-பாயிண்ட் பிரசண்டேஷன் மூலமாக விளக்கிய ‘நிறங்கள்’ அமைப்பின் தலைவி, திருநங்கை சங்கரி. பாலினச் சிறுபான்மையினருக்கு உதவும் தன்னார்வ அமைப்புகளான சகோதரன், சினேகிதி, சின்டேக் நிறுவனத்தின் முயற்சியில் மாணவர்களுடன் பாலினச் சிறுபான்மையின் பல பிரிவுகளைச் சேர்ந்த மயூரன், ராம், யுவராஜ், டெல்பினா, சங்கரி ஆகியோர், சமூகத்துடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பாலின நெகிழ்வு நிலை
தன்பாலின உறவு, இரு பாலின உறவு என்பதைக் கடந்த பாலின நெகிழ்வு நிலை (gender fluidity) என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நான் சில சமயங்களில் என் உடலை ஆணாக உணர்கிறேன். சில சமயங்களில் பெண் உடலாக உணர்கிறேன். அதனால் என்னுடைய பாலின நிலையைத் திரவ நிலை என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்றார் குழு விவாதத்தில் ஒருவர்.
உறுப்புகள் முக்கியமில்லை
குழுவில் இன்னொருவர், “உறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே நான் உணர்ச்சிகளை நினைக்கிறேன். என்னை ஒரு பான் செக்ஸுவல் (Pan Sexual) என்று வகைப்படுத்திக்கொள்ளவே நான் விரும்புகிறேன்” என்றார்.
கதை சொல்லும் சிவப்பு யானை
பால் சிறுபான்மையினரின் துயரம் தோய்ந்த கதைகளைச் சொல்லும் பணியைச் செய்கிறது ரெட் எலிஃபென்ட் ஃபவுண்டேஷன். இதன் இயக்குநராக இருக்கும் கீர்த்தி ஜெயக்குமாரும் அவருடன் இயங்கும் தன்னார்வலர்களும் கல்லூரி மாணவர்களிடையேயும், சமூகத்தின் பல அடுக்குகளில் இருக்கும் மக்களிடமும் பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கதை வடிவில் கொண்டுசேர்க்கின்றனர்.
இலங்கையில் என்ன நிலை?
சென்னை, தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மையத்தில் தமிழ், ஆங்கில இதழாளர்கள், ஊடகவியலாளர்களுடன் இலங்கையைச் சேர்ந்த இதழாளர்களின் கலந்துரையாடல் நடந்தது. அதில், இந்தியாவைவிட பாலினச் சிறுபான்மையினர் குறித்த விழிப்புணர்வு இலங்கையில் குறைவாகவே இருப்பதை அங்கிருக்கும் இதழாளர்கள் குறிப்பிட்டனர். இலங்கையில் பாலினச் சிறுபான்மையினரின் நிலை குறித்து விளக்குவதற்கும் அவர்களைக் குறித்த செய்திகளை எப்படி அணுகுவது என்பது குறித்தும் பல யோசனைகளை சென்னையைச் சேர்ந்த இதழாளர்கள் முன்வைத்தனர்.
தீர்ப்பு எழுதிய திரைப்படம்
பாலினச் சிறுபான்மையினரின் சுயமரியாதையை அறிவிக்கும் மாதமாகக் கொண்டாடப்படும் ஜூன் மாதத்தில் (LGBTQI PRIDE MONTH) பல நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் நடக்கும். அதன் ஓர் அங்கமாகச் சென்னை, அமெரிக்கத் தூதரக அரங்கில் பாலினச் சிறுபான்மையினருக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு ஆவணப்படத்தைத் திரையிட்டனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ பகுதியிலிருக்கும் தன்பாலின உறவாளர்களுக்கான ஒரு இரவு விடுதியில் உமர் மட்டீன் என்பவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் 49 பேர் மரணமடைந்ததற்கு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.
சிரிக்கும் கண்கள், நெற்றியில் படரும் முடிக் கற்றையை மெலிதாக ஒதுக்கும் ஸ்டைல், பேச்சில் தெறிக்கும் நகைச்சுவை, ஓவியம், இசை மற்றும் பல கலைகளிலும் இருக்கும் ஈடுபாடு. அத்துடன் துடிப்பும் துறுதுறுப்பும் போட்டி போடும் பருவத்தில் இருந்த மேட் ஷெப்பர்டிடம் பார்ப்பவர்கள் எல்லோருமே நட்பு பாராட்டினார்கள்.
வியோமிங் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார். ஏகப்பட்ட கனவுகளைச் சுமந்தபடி கல்லூரியில் அடியெடுத்துவைத்த மேட் ஷெப்பர்டின் கனவைத் தகர்த்தனர் இருவர். அவர்களால் மேட் ஷெப்பர்ட் கொடூரமான முறையில் கொல்லப்பட்டான். காரணம் மேட் ஷெப்பர்ட் தன் பாலின உறவாளர்.
சிரிக்கும் கண்கள், நெற்றியில் படரும் முடிக் கற்றையை மெலிதாக ஒதுக்கும் ஸ்டைல், பேச்சில் தெறிக்கும் நகைச்சுவை, ஓவியம், இசை மற்றும் பல கலைகளிலும் இருக்கும் ஈடுபாடு. அத்துடன் துடிப்பும் துறுதுறுப்பும் போட்டி போடும் பருவத்தில் இருந்த மேட் ஷெப்பர்டிடம் பார்ப்பவர்கள் எல்லோருமே நட்பு பாராட்டினார்கள்.
வியோமிங் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார். ஏகப்பட்ட கனவுகளைச் சுமந்தபடி கல்லூரியில் அடியெடுத்துவைத்த மேட் ஷெப்பர்டின் கனவைத் தகர்த்தனர் இருவர். அவர்களால் மேட் ஷெப்பர்ட் கொடூரமான முறையில் கொல்லப்பட்டான். காரணம் மேட் ஷெப்பர்ட் தன் பாலின உறவாளர்.
இந்தத் துயரச் சம்பவம் 1998-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. மாணவர்களையும், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களையும், பாலினச் சமத்துவத்துக்காக வெள்ளை மாளிகையின் முன்னால் திரண்டு போராட வைத்தது. தேசிய அளவில் பாலினச் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான குரல் ஒலித்தது.
2009-ல் (Matthew Shepard and James Byrd, Jr. Hate Crimes Prevention Act) பாலினச் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
மேட் ஷெப்பர்டின் தாயார் ஜுடி ஷெப்பர்ட், மேட் ஷெப்பர்ட் அறக்கட்டளையை நிறுவி பாலினச் சமத்துவத்துக்காகப் போராடிவருகிறார். மேட் ஷெப்பர்டின் தோழி மிச்சேல் ஜோஸுவின் இயக்கத்தில் ஜுடி ஷெப்பர்ட் தயாரித்திருக்கும் ஆவணப்படம் மேட் ஷெப்பர்ட் என்னுடைய நண்பன் (Matt Shepard is a Friend of Mine). உலகம் முழுவதும் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஆவணப்பட வரிசையில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு பரிசுகளையும் பெற்றது.
இந்தத் திரையிடலை அடுத்து, படத்தின் இயக்குநர், ஜுடி ஷெப்பர்ட், அமெரிக்காவின் பாலினச் சிறுபான்மையினருக்கான மனித உரிமை அமைப்பின் சிறப்பு அதிகாரி ரான்டி பெரி ஆகியோர் உலகின் பல பகுதிகளில் இருக்கும் பாலினச் சிறுபான்மையினர், அவர்களி்ன் நலம் விரும்பிகள், மாணவர்கள் ஆகியோரின் கேள்விகளுக்குக் காணொலிக் காட்சியின் மூலம் பதில்களை அளித்தனர்.
சென்னை, அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதர் பிலிப் மின், “உலகில் பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா முனைப்போடு இருக்கிறது” என்றார்.
மேட் ஷெப்பர்டின் மரணத்துக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் உலகம் முழுவதும் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன.
தோழிகளுடன் மேட் ஷெப்பர்ட்
பங்கேற்ற மாணவர்கள்
வி.எச்.எஸ். மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு
மாணவர்களுடன் கலந்துரையாடிய பாலின சிறுபான்மையினர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago