பேச்சிலர் லைஃபின் முக்கியமான பகுதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். நம்ம தமிழ் சினிமாக்களில் ‘மச்சீ ஒரு குவார்ட்டர் சொல்லேன்!’ எனக் கொண்டாட்டத்தை மிகவும் சுருக்கிவிட்டார்கள். பாலிவுட்டும், ஹாலிவுட்டும் தாய்லாந்து, லாஸ் வேகஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நண்பர்கள் சும்மா கன்னா பின்னானு செலவு செய்து ஆட்டம் போடுவது மாதிரிக் காண்பித்து, பார்ப்பவர்களை ஏக்கப்பட வைத்துவிடுகிறார்கள்.
நாம் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இடங்கள் அவை எனச் சாதாரண மக்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றுதான் நீங்கள் பேச்சிலர் லைஃப்பைக் கொண்டாட வேண்டும் என்பது அவசியமல்ல. நமது நாட்டிலேயே அதைப் போன்ற அட்டகாசமான இடங்கள் இருக்கின்றன. சரியாகத் திட்டமிட்டால் பணத்திற்கு வேட்டு வைக்காமல் உங்கள் பாக்கெட் மணியிலேயே சொகுசுச் சுற்றுலாப் பயணம் போகலாம். உங்கள் நண்பர்களோடு ஒரு ஜாலி டிரிப் போக இதோ சில இடங்கள்...
ஒரே ஊரில் 5 பீச்
கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடலோர ஊரான கோகர்ணா உல்லாசச் சுற்றுலா மையமாகும். கோயில்களுக்குப் பிரசித்தி பெற்ற கோகர்ணாவுக்கு அனைத்து வயதினரும் வருவது வழக்கம். இருப்பினும் கோவா கடற்கரைகளோடு போட்டியிடும் அளவுக்கு அழகான ஐந்து கடற்கரைகள் இங்குள்ளன. குட்லே பீச், கோகர்ணா பீச், ஹாஃப் மூன் பீச், பாரடைஸ் பீச் மற்றும் ஓம் பீச் ஆகிய ஐந்து கடற்கரைகள் அனைவரையும் சுண்டியிழுக்கும் வகையில் அமைந்துள்ளன.
நீளமான பீச்
குட்லே பீச்தான் இங்குள்ள கடற்கரைகளில் மிகப் பெரிது. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்வரை அதிகமான அளவில் பயணிகள் இங்கு குவிகிறார்கள். இங்கே கடலில் நீந்துவது அபாயகரமானது. மஹாபலேஷ்வர் கோயிலுக்கு வரும் அனைவரும் கோகர்ணா பீச்சுக்கு வருவது வழக்கம்.
ஜாலியா குளிக்கலாம்
கோகர்ணாவிலிருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஓம் பீச். ஓம் பீச் என்பது ‘ஓம்’ என்ற எழுத்து வடிவில் அமைந்துள்ள கடற்கரையாகும். இந்த ஓம் பீச்சில் நீங்கள் உல்லாசமாக உலா வரத் தேவையான அத்தனை அம்சங்களும் உள்ளன. நீர்ச்சறுக்கு, படகுப் பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் அனுபவமிக்க பயிற்சியாளர்கள் துணையோடு ஈடுபடலாம். ‘ஓம்’ வடிவத்தில் காணப்படும் வளைவுப் பகுதியில் உருவாகியுள்ள குளம் போன்ற அமைப்பில் ஆழம் குறைவாக இருப்பதால் அதில் பயமின்றிக் குளித்து மகிழலாம். கடற்கரையை ஒட்டியே இருக்கும் தேநீர் உணவகங்கள் மற்றும் குடில்கள் சூழலின் அழகை மேலும் கூட்டுகின்றன். இவற்றில் உள்ளூர் உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம்.
பிறைச் சந்திரனும் சொர்க்கமும்
ஓம் கடற்கரையிலிருந்து 20 நிமிடம் நடந்தாலே அரை நிலாவைப் போன்ற வடிவம் கொண்ட ஹாஃப் மூன் பீச்சை வந்தடைந்து விடலாம். ஒரு குன்றைச் சுற்றியபடி இந்தக் கடற்கரைக்கு வர வேண்டும். தனிமையில் இனிமை காணச் சிறந்த தேர்வு பாரடைஸ் பீச்தான். பாறைகள் நிறைந்த இந்தக் கடற்கரையில் ஆவேசமாக அலைகள் மோதும். உங்கள் கனவுலகம் பக்கத்திலேயே இருக்கும்போது எதற்காகக் காத்திருக்கிறீர்கள், கிளம்ப வேண்டியதுதானே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago