குறைந்த பட்ஜெட்டில் நிறைவான திருமணம்

By எல்.ரேணுகா தேவி

திருமணம் நமது வாழ்வின் முக்கிய நிகழ்வு. மணமக்களின் சிகை அலங்காரம் முதல் மண்டபத்தின் தோற்றம் உட்பட அனைத்திலும் புதுமைகளைப் புகுத்துவது என்பது இன்றைய திருமண நிகழ்ச்சிகளின் பாணி. எல்லோருக்குமே தங்கள் திருமணத்தை வெகுவிமரிசையாகவும் புதுமையாகவும் நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அனைவராலும் தங்களுடைய திருமணத்தைத் தாங்கள் நினைத்ததைப் போல் நடத்த முடிவதில்லை. பொருளாதார வசதி இருந்தாலும் திருமண நிகழ்வுகளைப் பழைய நடைமுறைகளிலேயே நடத்தி முடித்துவிடும் ஏற்பாடுகளே இங்கு அதிகம்.

கப்பலில் திருமணம், விமானத்தில் திருமணம் என விதவிதமாக நடத்தப்படும் திருமணம் பலரது ஆசைக் கனவுகளைத் தூண்டிவிடுகிறது. இதைப் போன்று மிகப் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவு வித்தியாசமாக பட்ஜெட்டுக்குள் தங்களின் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் அநேகர். திருமணம் பற்றிய தங்கள் கனவை நிஜமாக்கத் துடிக்கிறார்கள் அவர்கள். இப்படியான விருப்பம் கொண்டவர்களுக்காகவே இருக்கிறார்கள் ‘mygrandwedding’ குழுவினர்.

நீங்கள் எப்படியெல்லாம் உங்களின் திருமணத்தை நடத்த வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் உங்கள் திருமணத்தை நடத்தித் தந்துவிடுகிறார்கள் இவர்கள்.

சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இக்குழுவினர் திருமண வீட்டார் கோரும் பட்ஜெட்டில் நடத்திக் கொடுக்கிறார்கள். உங்கள் பட்ஜெட் எவ்வளவோ அதற்குத் தகுந்தாற்போல் திருமணத்தை நடத்தித் தருகிறார்கள்.


ஜேன் கேத்தரின்

‘mygrandwedding’ தொடங்குவதற்கு முன்பு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், உணவு நிறுவனம் ஆகியவற்றை நடத்திவந்திருக்கிறார் இந்நிறுவனத்தின் மேலாளர் சரத் சிங். அந்த இரண்டிலும் கிடைத்த வெற்றி தந்த உற்சாகத்தில், தன்னுடைய மனைவி ஜேன் கேத்தரினுடன் சேர்த்து திருமண நிகழ்ச்சிகளுக்குத் தேவையான விஷயங்களைச் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்.

“எங்களின் ஐடியாவே குறைந்த பட்ஜெட்டில் நிறைவான திருமண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். சிகை அலங்காரம் செய்வோர், புகைப்படம் எடுப்பவர்கள் எனத் திருமண நிகழ்ச்சிக்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்கள் குறித்த தகவல்களைச் சேமித்து வைத்திருக்கிறோம். திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் எங்களின் இணையதள முகவரியைப் பார்த்தே தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஆட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் சரத் சிங். அதேபோல் மண்டபத்துக்குப் பதிலாக ரிசார்ட், ஹோட்டல் போன்ற இடங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தித் தருகிறார்கள்.

“சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு திருமண நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட முழுவதுமாக எல்.இ.டி. தொலைக்காட்சி, டிஜிட்டல் நுழைவாயில், டி.ஜே. இசை நிகழ்ச்சி எனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் திருமண நிகழ்ச்சிகளைச் செய்து கொடுக்கிறோம்.

அதேபோல் திருமண நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களுக்கு எஸ். எம்.எஸ்., வாட்ஸ் ஆப் ஆகிய தொழில்நுட்பங்கள் மூலமாகத் திருமண நிகழ்வு குறித்த தகவல்களையும் அனுப்புகிறோம்” என்கிறார் சரத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்