ஒரு காலத்தில் ஃபிரேம் பாக்டரியே வெச்சிருந்தோம்!

பழைய மெட்ராஸின் மூர்மார்க்கெட் இருந்த பகுதியில் 1920-ம் ஆண்டு வாக்கில் ‘தவே அண்ட் சன்ஸ்’ மூக்குக் கண்ணாடிகளை விற்பனை செய்யும் ஆப்டிகல் கடையைத் தொடங்கினர். ஏறக்குறைய 1920-களில் அன்றைய மெட்ராஸில் ஆப்டிகல் உலகில் புகழ்பெற்றிருந்த நிறுவனமாக இருந்தது ‘கால்வின் அண்ட் சன்ஸ்’.

“கால்வின் அண்ட் கம்பெனி 1927-ம் ஆண்டில் அன்றைய வாலாஜா சாலையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இது பின்னாளில் 1932-ல் ‘சி.ஜி.வாசுதேவன் ஆப்டிகல் அண்ட் ஆப்தல்மிக் ஆப்டீஷியன்’ என்னும் பெயரில் அன்னபூர்ணா ஹோட்டலுக்கு எதிரில் செயல்படத் தொடங்கியது. இன்றைக்கும் இதே இடத்தில் ஏறக்குறைய 82 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் மூன்றாவது தலைமுறையாக இந்த ஆப்டிகல் கடையை நடத்திவரும் பி.ஜி. எதிராஜ், பி.ஜி. லக் ஷ்மண் ராஜ், சி.வி.சந்தான கிருஷ்ணன் சகோதரர்கள்.

ஃபிரேம் பாக்டரி

“எங்களின் தாத்தாவான நாராயணசாமி தொடங்கியதுதான் இந்தக் கடை. அவர் தொடங்கிய போது, ஜெர்மனியிலிருந்து மூலப் பொருட்கள் வரும். அதைக் கொண்டு பவர் கிளாஸ்களைப் பொருத்தித் தரும் ஃபிரேம் பாக்டரியே அந்நாளில் செயல்பட்டது. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அன்றைக்குப் பணியிலிருந்தனர்.

நாளடைவில் ஃபிரேம்களே இறக்குமதி ஆனதால் இந்தத் தொழில் நலிவடைந்தது. 30 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறேன். இதுதான் என்னுடைய தொழில் என்னும் முடிவுக்கு சிறு வயதிலேயே வந்துவிட்டேன். அதனால் அப்போதே ‘ஆப்தல்மாலஜி’ படித்து முறையான சான்றிதழ் பெற்றேன்.

மிகச்சிறிய மூக்குக் கண்ணாடி

கண் மருத்துவர்கள் குறிப்பிட்டுத் தரும் லென்ஸ் பவருக்கு ஏற்ற ஃபிரேம்களையும், கண்ணாடியையும் எந்த வித சமரசமும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்குத் தருவதற்கு முயற்சிப்பேன். வாடிக்கையாளர்கள் சில சமயங்களில் அவர்களின் முகத்துக்குப் பொருத்தமில்லாத ஆனால் கவர்ச்சியான ஃபிரேம்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களிடம் பொறுமையாக அதில் இருக்கும் சிக்கல்களை விளக்கிக் கூறுவேன். பெரும்பாலும் இப்போதெல்லாம் எடை குறைவாக இருக்கும் என்பதால் ஃபைபர் கண்ணாடிகளை அணிவதையே பலரும் விரும்புகின்றனர். ஆனால் என்னுடைய அனுபவத்தில் கிளாஸில் கண்ணாடிகளை அணிவதே சிறந்தது” என்னும் லஷ்மண் ராஜ், தங்களிடம் உள்ள 80 ஆண்டுகளுக்கும் மேலான சில ஃபிரேம்களைக் காட்டினார். அவற்றைத் தன் ‘பொக்கிஷங்கள்’ என்கிறார் அவர்.

விதவிதமான ஃபிரேம்கள்

கோல்ட் பாலீஷ் பளபளப்போடு இருக்கும் ஒரு ஃபிரேம் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாம். காந்தி ஃபிரேம்கள், ஆமையோட்டில் செய்யப்பட்ட கலை அம்சத்துடன்கூடிய ஃபிரேம்கள், அரை இஞ்ச் அளவுள்ள லென்ஸ்களைப் போட்டு, மூக்கில் மாட்டிக் கொள்ளும் ஃபிரேம்கள் என வேறு எங்கும் பார்க்க முடியாத சேகரிப்புகள் இங்கு உள்ளன.

“இவை விற்பனைக்கு அல்ல. ஃபிரேம் சேகரிப்பில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பார்ப்பதற்கு மட்டும் இவற்றை வைத்துள்ளோம்” என்றார் லக் ஷ்மண் ராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்