அமெரிக்காவில் மெட்ராஸ் இசை!

By வா.ரவிக்குமார்

‘சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்’ எனும் பாடலைக் கேட்டால், நீங்கள் எந்த வயதில் இருப்பவராக இருந்தாலும் சரி, தென்றலின் இதமான தாலாட்டில், மயிலிறகால் வருடும் அனுபவம் உங்களுக்கு ஏற்படும். இந்தப் பாடல் இடம்பெற்ற படம், ‘பாதை தெரியுது பார்’. பாடலை எழுதியவர் கே.சி.எஸ்.அருணாசலம். இசையமைத்தவர் எம்.பி.சீனிவாசன். கர்னாடக இசைப் பாடகராகவும் சிறந்த பின்னணிப் பாடகராகவும் இன்றைக்குப் புகழின் உச்சியில் இருக்கும் கே.ஜே.யேசுதாஸை பின்னணிப் பாடகராக திரையில் அறிமுகப்படுத்தியவரும் சீனிவாசன்தான். தமிழ் இசை உலகுக்கு சீனிவாசனின் இன்னொரு கொடை... சேர்ந்திசை!

‘மெட்ராஸ் யூத் காயர்’ என்னும் பெயரில் 1971-ல் புதிய இசைப் பயணத்தைத் தொடங்கினார் சீனிவாசன். ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட பாடல்களுக்குச் சேர்ந்திசை வடிவில் இசையமைத்தார் எம்.பி.எஸ். இந்திய செவ்வியல் இசையோடு மேற்கத்திய பாணி இசை நுணுக்கங்களை ஒருங்கிணைத்துப் பாடும் சேர்ந்திசையின் மூலம் இசையை எல்லாத் தரப்புக்கும் பரவலாக்கிய பெருமை சீனிவாசனையே சேரும்.

சேர்ந்திசையின் பலம்

மெட்ராஸ் யூத் காயரின் மூலமாகப் தேச பக்திப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், மனித நேயத்தை, சமூகப் பொறுப்புகளை உணரவைக்கும் பாடல்கள், சமூகத்தில் பெண்களின் சக்தியைப் பரிபூரணமாக உணர்த்தும் உணர்ச்சி மிகுந்த பாடல்கள் எனப் பலவும் சீனிவாசனால் இசையமைக்கப்பட்டு சேர்ந்திசைப் பாடல்களாகப் பாடப்பட்டன. தென்னிந்திய மொழிகள் உட்படப் பத்து மொழிகளில் பாடல்களைப் பாடும் திறன் மிக்கவர்களாக மெட்ராஸ் யூத் காயரின் சீரான பயிற்சியில் குழந்தைகளும் பெண்களும் உருவாகினர். இந்திய அளவில் பிரபலமான சேர்ந்திசைக் குழுவாக அறியப்படும் மெட்ராஸ் யூத் காயர் குழு சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு இம்மாதம் அமெரிக்காவுக்குச் செல்கிறது.

கென்னடி நூற்றாண்டு விழா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் நூற்றாண்டையொட்டி, வாஷிங்டன் நகரில், ‘செரினெட்’ எனும் பெயரில் நடக்கும் சேர்ந்திசைத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காகத்தான் மெட்ராஸ் யூத் காயர் குழு அமெரிக்காவுக்குச் செல்கிறது. இந்த விழாவில் 14 நாடுகளைச் சேர்ந்த 18 சேர்ந்திசைக் குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதில் மெட்ராஸ் யூத் காயர் குழுவும் ஒன்று என்பதிலேயே இந்த விழாவின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் உணர முடியும்.

வாஷிங்டன் நகர் தவிர வர்ஜினியா, மேரிலேண்ட் போன்ற பல இடங்களில் நடக்கவிருக்கும் 14 நிகழ்ச்சிகளில் 6 நிகழ்ச்சிகள் புகழ்பெற்ற கென்னடி சென்டரில் நடக்கவிருக்கின்றன. ஜூலை 3 அன்று அங்கு புகழ்பெற்ற டல்லாஸ் சிம்பொனி மையத்தின் இயக்குநர் ஜோஷ்வா ஹெபர்மென் இசை வழிநடத்துதலில் எல்லாக் குழுக்களிலிருந்தும் வந்திருக்கும் பாடகர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஏழிசைப் பாடல்கள்

`இந்த நிகழ்வையொட்டி அன்பு, சுதந்திரம், வீரம், ஒற்றுமை, தேசப்பற்று, அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் ஏழு பாடல்களைப் பாட இருக்கிறோம். ஆத்திச்சூடி, கிராமியப் பாடல்கள், சுப்பிரமணிய பாரதி (பாருக்குள்ளே நல்ல நாடு, சுட்டும் விழிச்சுடர்தான், வாழ்க நீ எம்மான்), பாரதி தாசன் (அம்மா உந்தன் கை வளையாய் ஆகமாட்டேனா), மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் பாடல்களைப் பாட இருக்கிறோம்’ என்றனர் மெட்ராஸ் யூத் காயர் குழுவினர்.

தேர்ந்திசை..!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்