தலைக்கு மேலே வேலையா பாஸு?

By மிது கார்த்தி

அது என்னான்னு தெரியல. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வந்தால்தான் தலைக்கு மேலே முடி மொளைச்சிருக்கிறதே தெரியுது. சரின்னு முடி வெட்ட சலூனுக்குப் போனா அங்க கிட்ஸ்ல இருந்து அங்கிள் வரை நிறைய பேரு வந்து அலப்பறை பண்ணிட்டு இருப்பாங்க. இதனால முடி வெட்ட மணிக் கணக்குலகூட உட்கார வேண்டிய நிலை வந்துடும். அதனால ரொம்ப டென்ஷனா உட்கார்ந்து, ‘சீக்கிரம் பா... இல்லைன்னா அப்புறம் வரட்டுமா’ என்று சலூன்காரரையும் பீதியாக்குவோம். சலூன் கடையில கோபப்படுற அளவுக்கு விஷயங்கள் இருக்க மாதிரி ரசிக்கவும் நிறைய விஷயம் இருக்கு பாஸு. என்னன்னு கேட்குறீங்களா?

50 இல்ல, 100 கிராம் முடிதான் தலையில் ஒட்டிக்கிட்டு இருக்கும். ஆனால், அந்த ஸ்டைல் வேணும், இந்த ஸ்டைல் வேணும்னு சலூன்காரரைப் படுத்தியெடுக்கன்னு சில பேரு வருவாங்க. முடியைத் தேடித் தேடி சலூன்காரர் வெட்டிக்கிட்டு இருப்பாரு. அப்போ பார்த்து அஞ்சான் படத்துல சூர்யா வைச்சிருக்குற ஹேர் ஸ்டைல பத்தி செமன்னு பேசுவாங்க.

யூத்ஸ் முடி வெட்டுறது, பெரிய வேலைதான். முடியைப் பக்காவாகக் கடைக்காரர் வெட்டியிருப்பார். ஆனால், கிருதாவைப் பார்த்துப் பார்த்து ஒரே அளவா வெட்ட சொல்லி படுத்தி எடுப்பாங்க. வெட்டி முடிச்சதும் விட மாட்டாங்க. சீட்டுல உட்கார்ந்துகிட்டு முடியை சீவி சீவி பார்ப்பாங்க. அங்கிள்ஸ் எல்லாம், “போதும்பா அடங்கு” என மனசுக்குள்ளே சொல்லிட்டு உட்கார்ந்தாலும், அதைப் பத்தி கவலையே படமாட்டாங்க. மாறி மாறி சீவி பார்த்துட்டு கடைசியில் முடியை கலைச்சு விட்டுட்டு கூடவந்த ப்ரெண்ட்ஸ்கிட்ட ‘எப்படி மாப்பு’அப்படினு கேப்பாங்க. அவ்ளோதான் அங்கிள்ஸ் எல்லாம் கோபத்தோட உச்சிக்கே போய்ருவாங்க.

சில பேரு முடியை வெட்டி, ஷேவிங் பண்ணி முடிச்சிருவாங்க. அப்பாடி, அடுத்து நாமதான் சீட்டுல உட்காருவோம்னு நினைச்சிக்கிட்டு இருப்போம். ஆனால், அடுத்ததா தலைமுடிக்கு கறுப்பு பெயிண்டு அடிக்க ஆரம்பிச்சிடுவாரு கடைக்காரு. ‘இப்படி அடி, அப்படி அடிப்பா’ன்னு இன்ஸ்ட்ரக்‌ஷன் வேற கொடுப்பாங்க. ‘போன தடவை அடிச்சது சரியில்லை’ன்னு வேற பேசிக்கிட்டே டெர்ரரர் ஆக்கிருவார். இன்ன பண்ண? கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்.

யூத்ஸ் முடியை வெட்ட உட்காரும்போதே, உச்சி மண்டையில் இருந்து நீளமான ஒரு முடியை மட்டும் இழுத்து வாயில் கவ்விக் கொண்டிருப்பார்கள். கேட்டா, இது யூத் ஸ்டைல்ன்னு சொல்வாங்க. இடைஇடையே, ‘ஷேவிங் மட்டும்தான், கொஞ்சம் பண்ணிவிட்டுருங்களேன்’ என்றும் கெஞ்சும் பார்ட்டிகளும் வரிசை கட்டுவார்கள். பொடிப் பசங்களை கூட்டிகிட்டு வந்து, கையை, காலை அமுத்திப் பிடித்துக்கொண்டு, அழுகைக்கு இடையே வேகவேகமா கடைக்காரர் முடி வெட்டுறப்ப, நீங்க சின்ன வயசுல நடந்துகிட்டது வட்டமா வட்டமா மனசுல வந்துட்டு போகும்.

இன்னும் சில பேரு பாயிண்ட் ஒண்ணுல வைச்சு முடியை ட்ரிம் பண்ணுங்கன்னு சொல்லி உட்காருவாங்க. ‘ஏப்பா, அதுக்கு எங்கேயாவது ஒரு கோயில்ல போய் மொட்டை போட்டுக்க வேண்டியதுதானே’ன்னு சொல்லத் தோணும். ஆனாலும், சைலண்டா இருந்துதானே ஆகணும். ஏடாகூடமா பேசினா வைலண்டா ஏதாவது ஆகிடுமே!

இப்படி கோபப்படவும், டென்ஷனாகவும் மட்டுமில்லை, சிரிக்கவும், ப்ளாஷ்பேக்குகளில் மூழ்கடிக்கும் விஷயங்களையும் சலூன் கடையில பார்க்கலாம் பாஸு. எது எதற்கோ ஆட்டோமாடிக் மெஷின்கள் வருகிறது, முடி வெட்டவும் ஒன்று வந்துவிட்டால் போதும்னு நினைக்கிறீங்கதானே? விடுங்க, அப்புறம் நம்மளோட நவரச உணர்வுகளை நாம எப்படி தெரிஞ்சுக்குறது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்