அரூபங்களின் தூரிகை!

By என்.கெளரி

தக்ஷினி ஜெகந்நாதனின் ‘ஆர்ட் ஸ்டியோ’ முழுவதும் அரூப‌ (அப்ஸ்டராக்ட்) ஓவியங்களால் நிறைந்திருக்கிறது. லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருக்கும் இவர், தன்னுடைய ஒன்பதாவது வயதில் ஓவியங்கள் வரையத் தொடங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு, பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்துகொண்டிருக்கிறார். இவருடைய ஓவியங்களில் பெரும்பாலானவை சமூகத்தின் பழமைவாத விதிகளைக் கேள்வி கேட்பதாக அமைந்திருக்கின்றன.

பள்ளி செல்ல வேண்டாம்

பொதுவாக, எல்லோருக்கும் சிறு வயதில் ஓவியம் வரைவதில் ஆர்வமிருக்கும். ஒரு கட்டத்தில், பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு என்று கல்விச் சுமை அதிகரித்தவுடன் பலரும் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் வரைவதையே நிறுத்திவிடுவார்கள். ஆனால், தக்ஷினி அப்படியில்லை. ஓவியங்கள் வரைவதற்கு நேரமில்லை என்பதால் ஒன்பதாவது வகுப்போடு பள்ளிக்குச் செல்வதையே நிறுத்தியிருக்கிறார். பத்தாவது, பன்னிரண்டாவது பொதுத் தேர்வுகளை ‘ஹோம் ஸ்கூலிங்’ மூலம் எழுதித்தான் பள்ளிப் படிப்பையே முடித்திருக்கிறார்.

“என்னுடைய அப்பா மலேஷியாவில் ஓவியராக இருக்கிறார். அவர் எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது, ‘போர்ட்ரெய்ட்’ வரைவதற்கு ‘போஸ்’ கொடுக்க அழைத்துச்சென்றார். என்னால் அந்த உருவப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்க முடியவில்லை. அப்போது எல்லோரும் அங்கே உருவப்படங்களை வரைந்துகொண்டிருப்பதைப் பார்த்து நானும் வரையத்தொடங்கினேன். அதற்குப் பிறகு, நான் சோகமாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி வரையத் தொடங்கிவிடுவேன். நான் வரைந்து முடித்ததும் என்னுடைய கோபமும், சோகமும் காணாமல் போய்விடும். அடிப்படையில், நான் ஒரு ‘இன்ட்ரோவெர்ட்’. அதனால், எனக்குத் துணையாக ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். அத்துடன், நான் மலேஷியாவில் பிறந்திருந்தாலும், என் படிப்புக்காக நானும் அம்மாவும் இந்தியா வந்துவிட்டோம். அதனால், என் அப்பாவைப் பெரும்பாலும் பிரிந்துதான் இருந்தேன். அதனால், விடுமுறைக்கு அவரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் அந்தப் பிரிவைத் தீவிரமாக உணர்வேன். என்னுடைய தீவிரமான உணர்வுகளை யெல்லாம் ஓவியங்களாக மாற்றுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என்று சொல்கிறார் தக்ஷினி.

தக்ஷினி ஜெகந்நாதன்

ஓவியங்களும் நானும்

ஆரம்பத்தில் இவர் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் அமர்ந்து ஓவியங்கள் வரைவதைப் பார்த்து இவருடைய அம்மா கோபப்பட்டிருக்கிறார். ஆனால், சீக்கிரமே தக்ஷினியின் கலை மீதான ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அவரை நகரில் நடக்கும் ஓவியக் காட்சிகளுக்கும், நாடகங்களுக்கும் தொடர்ந்து அழைத்துச் சென்றிருக்கிறார். இவர் பதினான்கு வயதில் மலேஷியாவில் ஓர் ஓவியக் கண்காட்சியை நடத்தியதற்கு இவருடைய பெற்றோர்களின் இந்தப் புரிதலும் ஒரு காரணம். “அந்த ஓவியக் கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. அந்தக் கண்காட்சியில், அரூப ஓவியங்களைப் பாதுகாப்பதற்காக நான் வரைந்த ‘அப்ஸ்ட்ராக்ட் ஏஞ்சல்’ என்ற ஓவியத்தைப் பலரும் பாராட்டினார்கள். ஆனால், எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமாக இருப்பது என்னுடைய பத்து வயதில் நான் வரைந்த என் முதல் ஓவியம்தான். அது ஒரு ‘டாம்பாயிஷ் கேர்ள்’ பற்றிய ஓவியம். மாற்று ஆர்வங்களைக் கொண்ட பெண், சமூகத்தின் வழக்கமான விதிகளால் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறாள் என்பதை மனதில் வைத்து அந்த ஓவியத்தை வரைந்தேன்” என்று சொல்கிறார் இவர்.

கவிதைகள் எழுதி அதை ஓவியங்களாக வடிப்பது, பயண அனுபவத்தை ஓவியமாக்குவது, திரைப்படப் பாடல்களை ஓவியமாக்குவது என தக்ஷினி பல புதுமையான வழிகளில் ஓவியங்களைப் படைக்கிறார்.

நடனமாடும் ஓவியங்கள்

தற்போது தன்னுடைய படைப்புகள் நடனமாட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்கிறார் தக்ஷினி. அதற்காக குச்சிப்புடி நடனமும் வீணை வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். “என்னுடைய ஓவிய பாணி மாறிவருவதை என்னால் உணரமுடிகிறது. இதற்கு முன்னால் அரூபமான ஓவியங்கள் மட்டுமே வரைந்தவந்த நான் இப்போது யதார்த்தமான ஓவியங்கள் வரைய ஆரம்பித்திருக்கிறேன். அதனால் என் ஓவியங்கள் இனிமேல் நடனமாடப் போகின்றன” என்கிறார் இவர்.

ஓவியங்களைப் போலவே நாடகம் எழுதுவதிலும் தக்ஷினிக்கு ஆர்வமிருக்கிறது. இப்படி தன்னுடைய மாற்று ஆர்வங்களைத் தொடர்வதற்குப் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படித்ததுதான் காரணம் என்று சொல்கிறார் அவர். “என்னைப் பொறுத்தவரை, பள்ளியில் எல்லோரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் நான் ஒரு பெரிய சுதந்திரத்தை உணர்ந்தேன். அதுதான் என்னை நிறைய வரைய வைத்தது. இதுவரை என்னுடைய ஓவியங்களைச் சென்னையில் காட்சிக்கு வைக்கவில்லை. ஏனென்றால், அவற்றை எனக்காக மட்டும்தான் வரைந்தேன். ஆனால், இப்போது என் ஓவியங்கள் மூலமாக மக்களுடன் பேச விரும்புகிறேன். அதனால், கல்லூரியில் நடக்கவிருக்கும் ஓவியக் காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறேன்” என்று சொல்கிறார் தக்ஷினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்