ஜாலி பலன்: உங்க டைம் இப்டிக்கா? அப்டிக்கா?

By ஜெய்

மேஷ ராசி நேயர்ஸ்!

உங்க டைம் இப்போ மரண மாஸா இருக்கு. நீங்க தொட்டதெல்லாம் தூளாகும். பட்டதெல்லாம் பாலாகும். ரெண்டு செமஸ்டரா எடுக்க முடியாத அரியர்ஸ்ல அசால்ட்டு பண்ணுவீங்க. சினிமால டைரக்டருக்கே தெரியாத விஷயங்களைக் கண்டுபிடிச்சு பாராட்டுற மாதிரி, உங்க மொக்கை வாக்கைக்கூட, அவன் நடந்தா, ‘அய்யய்யய்யோ’, அவன் சிரிப்பு, ‘அம்மம்மம்மா’ அப்படிம்பாங்க. கார்ப்பரேசன் வாட்டர் மாதிரி இருந்த உங்க பர்ஸ் கடல் மாதிரி ஆகும்.

ராசியான டயலாக்:

மகிழ்ச்சி (கபாலி)

ராசியான திசை:

ஆல்ரூட்டு

ரிஷப ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இல்லை எனக் கட்டம் சொல்கிறது. அதாவது இரண்டாவது வீட்ல இருந்த குரு நாலாவது வீட்டுக்குக் குடிபோய், இரண்டாம் வீட்டுக்குப் புதுக் குடித்தனக்காரங்க வந்துட்டாங்க. இப்போ சனி வீடில்லாம சுத்துது. கொஞ்சம் நீங்க கேப் வீட்டாலும் உள்ள வந்துரும். அதனால வாரத்துக்கு மூணு வாட்டியாவது குளிங்க. ரூம கிளீனா வச்சுக்கோங்க. சனி இப்ப வைரஸ் காய்ச்சல் மாதிரி அப்டேட் ஆகியிருக்கு. ஸோ பி கேர்ஃபுல்.

ராசியான டயலாக்:

விடாது கருப்பு

ராசியில்லாத திசை:

ஞாயிற்றுக் கிழமைக்கு முந்துன நாள் திசை

மிதுன ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு டாஸ்மாக் கஸ்டமர் மாதிரி, அப்டிக்கா இப்டிக்கா தள்ளாடும். அதாவது பாக்கெட் மணிக்காகக் கடுகு டப்பாக்குள்ள கைவிட்டா 100 ரூபாய் கிடைக்கும். அத்தோடு போகாம இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு சர்க்கரை டப்பாக்குள்ள கைவிட்டா, ஸ்மால் எறும்புக் கூட்டத்தால கடிபடுவீங்க. பத்து நாளு துவைக்காத ஜீன்ஸ் போட்டுப் போனா ‘செமயா இருக்கு எங்க மச்சி வாங்குனேம்பாங்க?’. இத நம்பி ஓவரா சீன் போட்டா, கேன்டீன் பில் உங்க தலைல.

ராசியான டயலாக்:

இப்டிக்கா அப்டிக்கா

ராசியான திசை:

இப்டிக்கா போய் அப்டிக்கா

கடக ராசி நேயர்ஸ்!

உங்களுக்கு இது ரொம்ப பேட் டைம். பிவிஆர்ல போய் பிரியாணி சாப்டாலும் பீரியட்ஸ கட்டடிச்சிட்டு பிக்சர் போனதா ‘எனிமீஸ்’ வீட்ல போட்டுக்கொடுத் துருவாங்க. சின்சியரா லெசன்ஸ் கவனிக் கிறதா நினைச்சுக்கிட்டு ‘மொக்கை மொக்கை டவுட்டா’ கேட்டு பல்பு ஃபேக்டரியே தொறப்பீங்க. உங்க டைம் இப்படிக்கா இருக்கிறதால ஒருமாதிரி முன்னாடியே டியூன் ஆகிக்கோங்க.

ராசியான டயலாக்:

டியூன் ஆகு

ராசியான திசை:

டேக் டைவர்ஷன்

சிம்ம ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். குவாட்டர் ப்ளேட் குஸ்கா ஆர்டர் பண்ணாலும் லெக் பீஸும், முட்டையும் கிடைக்கும். இன்னைக்கு ரிலீஸ் ஆகிற சூப்பர் படத்துக்கு டிக்கெட் ஈஸியா ஓஸியா கிடைக்கும். மொக்கையா கமெண்ட் அடிச்சாலும் ‘செம காமெடி’ அப்படிம்பாங்க. ரெண்டு நாளா குளிக்காம, பத்து நாளா தொவைக்காத சட்டை போட்டுப் போனா ‘ஸ்பிரே சூப்பராருக்கு. எங்க வாங்கினே’னு கேப்பாங்க.

ராசியான டயலாக்:

ஈஸியா ஓஸியா

ராசியான திசை:

நார்த் வேஸ்ட் ஈஸ்ட், நாமெல்லாம் சவுத்

கன்னி ராசி நேயர்ஸ்!

இன்று உங்களுக்கு இனிதான நாளாக அமையும். நீங்க வாய் தொறந்தாலே திருப்புகழா வாய் மணக்கும். ஆனால் அதுக்குக் காலை எழுந்ததும் பல் விளக்கணும். ரொம்ப நாளா தொவைக்காம உங்க ஜீன்ஸ்ல சிறைவைக்கப்பட்டிருந்த (அதாம்பா பிரிஸன்) ஹேண்ட் கர்சீப்புக்கு ஃப்ரீடம் கொடுப்பீங்க. நீங்க எதிர்பார்த்த மாதிரி மொக்கை போடுற ப்ரொபசர்ஸ்/டீச்சர்ஸ் ஃபீவர்னு இன்னைக்கு லீவு போட்டிரு வாங்க.

ராசியான டயலாக்:

திருப்புகழைப் பாடப் பாட…

ராசியான திசை:

ஹேர்பின் பெண்ட்

துலாம் ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்கள் பாவங்களுக்கான நாளாக அமையும். சின்ன வயசுல உங்களால அடிபட்ட பையன் இறைவி பட எஸ்.ஜே. சூர்யா மாதிரி வந்து கனவுல கத்துவான். அப்பா, அம்மா, டீச்சர்ஸ்கிட்ட நீங்க ஏக்கர் கணக்கா சொன்ன பொய்யெல்லாம் ‘24’ பட சூர்யா மாதிரி பல ரோல் எடுத்து வந்து பயமுறுத்தும். ஸோ இனி பொய்யே சொல்லமாட்டேன்னு பொய் சொல்லா தீங்க.

ராசியான டயலாக்:

டெல்லிங் லைஸ் நோ பாப்பா

ராசியான திசை:

கரடுமுரடான திசை

விருச்சி ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு பேஜரா இருக்கும். ஏற்கெனவே வாங்குன பல்புஸ் எல்லாம் எந்த கடைல விக்கிறனு தெரியாமா இருக்கிறப்ப, இன்னைக்கு ஆந்திரா மீல்ஸ் மாதிரி அன்லிமிடடா பல்புஸா கிடைக்கும். மொக்கை சினிமாவ ஜட்ஜ் பண்ண முடியாம, ‘செம’ன்னு பல்பு வாங்குவீங்க.

‘இறைவி படத்துல இன்னா சொல்றாங்க’ன்னானு யாருக்குமே புரியாம லெக்சர் அடிச்சு பல்பு வாங்குவீங்க. 500 கோடி ரூபாய் கண்டெய்னர் மாதிரி வீட்டு முன்னாடி வாங்குன பல்புஸ் எல்லாம் வண்டி வண்டியா நிக்கும். (ஆமா அந்த கண்டெய்னர் எங்க போச்சு?)

இன்றைய நாள் உங்களுக்கு பேஜரா இருக்கும். ஏற்கெனவே வாங்குன பல்புஸ் எல்லாம் எந்த கடைல விக்கிறனு தெரியாமா இருக்கிறப்ப, இன்னைக்கு ஆந்திரா மீல்ஸ் மாதிரி அன்லிமிடடா பல்புஸா கிடைக்கும். மொக்கை சினிமாவ ஜட்ஜ் பண்ண முடியாம, ‘செம’ன்னு பல்பு வாங்குவீங்க. ‘இறைவி படத்துல இன்னா சொல்றாங்க’ன்னானு யாருக்குமே புரியாம லெக்சர் அடிச்சு பல்பு வாங்குவீங்க. 500 கோடி ரூபாய் கண்டெய்னர் மாதிரி வீட்டு முன்னாடி வாங்குன பல்புஸ் எல்லாம் வண்டி வண்டியா நிக்கும். (ஆமா அந்த கண்டெய்னர் எங்க போச்சு?)

ராசியான டயலாக் :

என்னமோ ஏதோ

ராசியான திசை:

டிராபிக் ஜாம்

தனுசு ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு டெஸ்ட்டிங் டே. அதாவது மேஜர் பாணியில சோதனை நாள். விஜய்சேதுபதி படத்துக்கு டிக்கெட் கேக்க போனா விஜய டி.ராஜேந்திரரோட படத்துக்கு டிக்கெட் கிடைக்கும். 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தாத்தாவோட ஓல்டு ஸ்டோரியெல்லாம் கேக்க வேண்டி இருக்கும். கலரப் பாத்து ஏமாந்துறாதீங்க. பிரியாணி மாதிரிதான் புளியோதரையும் இருக்கும்.

இன்றைய நாள் உங்களுக்கு டெஸ்ட்டிங் டே. அதாவது மேஜர் பாணியில சோதனை நாள். விஜய்சேதுபதி படத்துக்கு டிக்கெட் கேக்க போனா விஜய டி.ராஜேந்திரரோட படத்துக்கு டிக்கெட் கிடைக்கும். 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தாத்தாவோட ஓல்டு ஸ்டோரியெல்லாம் கேக்க வேண்டி இருக்கும். கலரப் பாத்து ஏமாந்துறாதீங்க. பிரியாணி மாதிரிதான் புளியோதரையும் இருக்கும்.

ராசியான கலர்:

ஏமாற்றாதே ஏமாறாதே

ராசியான திசை:

வளைவுகளில் கவனமாகச் செல்லவும்.

மகர ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு ஆசமா இருக்கும். FBல போட்டா சுமாரான கமெண்ட்டுக்கு 500 லைக்ஸ் கிடைக்கும். ரொம்ப நாளா பெண்டிங்ல இருந்த உங்க ரிக்வஸ்ட்ட ‘அந்தப் பொண்ணு’ அக்ஸப்ட் பண்ணும். லைக் கூட்ட என்ன வழின்னு இரவு பகலா யோசிங்க. முடிஞ்சா ஒரு புக் எழுதி ‘பின்னாடி வர்ற சந்ததிகளுக்கும்’ சொல்லுங்க. ஐடியா மணியா தீயா வேல செஞ்சு 5000 ப்ரெண்ட்ஸ் சேர்த்து உங்க பேஜ் லைக் பேஜா மாத்துங்க. ஃபேஸ்புக்லயே நாவல் எழுதி சாகித்திய அகாடமில்லாம் வாங்குவீங்க.

ராசியான டயலாக்:

லைக்ஸ் அள்ளு

ராசியான திசை:

டெல்லிக்குப் போற ரூட்டு (அவார்டு வாங்க)

கும்ப ராசி நேயர்ஸ்!

இன்று உங்களுக்கு ரொம்ப ராசியான நாள். ‘பீட்சாவுக்கு சட்னி வைச்சுச் சாப்டேன்’ அப்டினு ஃபேஸ் புக்ல ராத்திரி போட்ட மொக்கை ஸ்டேட்டஸுக்கு லைக்ஸும் ஷேர்ஸ்ஷும் அள்ளும். பலூன் விக்கிறவர் மாதிரி கலர் கலரா சட்டை போட்டு வந்தாலும் ‘டியூட் உன் டி-சர்ட் மரண மாஸ்’ அப்படினு சொல்வாங்க.

ராசியான டயலாக்:

மரண மாஸ்

ராசியான திசை:

நேஷனல் ஹைவேஸ்

மீனம் ராசி நேயர்ஸ்!

இன்றைய நாள் உங்களுக்கு டேஞ்சரஸா இருக்கும். போரடிச்சு டிவிய ஆன் பண்ணா டி.ஆர். வந்து சீரியஸா வசனம் பேசுவார். பயந்து போய் டிவிய ஆஃப் பண்ணிட்டு மேகசின தொறந்தா, ‘காதலை அழிக்க முடியாது’ மாதிரி ஒரு புதுப் பட வெளம்பரத்துல சாம் ஆண்டர்சன் தம்பி மாதிரி ஒருத்தர் ஆக்சன் ஹீரோ மாதிரி காலைத் தூக்கிட்டு நிப்பார். டெய்லி லைன் அடிக்கிற பிகர்ஸ் தெலுங்கு ஹீரோ மாதிரி மஞ்சள் கலர் பேண்ட், செவப்பு கலர் சட்டை போட்டு வந்து டெர்ரர் காட்டுவாங்க.

ராசியான டயலாக்:

டண்டணக்கா டணக்குணக்கா

ராசியான திசை:

நீங்க போறதுக்கு எதிர் திசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்