களைகட்டும் தமிழ் நாடகங்கள்

By என்.கெளரி

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘தி இந்து நாடக விழா’வில் இடம்பெறும் நாடகங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் நாடக விழாவில் முதன்முறையாக மூன்று தமிழ் நாடகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று நாடகங்களும் பொழுதுபோக்கு, நகைச்சுவை, சமூகப் பிரதிபலிப்புகள் என ஒரு புதுமையான கலவையுடன் களமிறங்கவிருக்கின்றன.

ஆயிரத்தியொரு இரவுகள்

நாடக ஆசிரியர், இயக்குநர்: வினோதினி வைத்தியநாதன்

குழு: ‘தியேட்டர் ஜீரோ’

இந்த நாடகம் ‘அரேபிய இரவுகள்’ கதைகளைப் பின்னணியாக வைத்து நையாண்டி, நகைச்சுவை என இரண்டையும் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சமகாலப் பிரச்சினையான ஆண்-பெண் உறவில் இருக்கும் பாலின அரசியலை முற்றிலும் புதிய கோணத்தில் இந்த நாடகம் அணுகியிருக்கிறது. நாடக மேடையில் பல சோதனை முயற்சிகளை ‘ஆயிரத்தியொரு இரவுகள்’ மேற்கொள்ளவிருக்கிறது. வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்க வைப்பதற்கும் இந்த நாடகத்தில் நிறைய அம்சங்கள் இருக்கின்றன.

முந்திரிக்கொட்ட

நாடக ஆசிரியர்: சுனந்தா ரகுநாதன்

இயக்குநர்: அனிதா சந்தானம்

குழு: குடுகுடுப்பைக்காரி

பரங்கிப்பேட்டை என்னும் கடலோர கிராமத்தில் வாழும் ஓர் உப்பளத் தொழிலாளி பவுனு, அவளுடைய பன்னிரண்டு வயது மகன் ‘கேபி’. இவர்கள் இரண்டு பேரின் வாழ்க்கையையும் நாடகம் பின்தொடர்கிறது. இந்நாடகத்தின் கதைக்களம் தீவிரமானதாகத் தெரிந்தாலும் நகைச்சுவைக்கும் சுவாரசியத்துக்கும் குறைவிருக்காது.

வண்டிச்சோடை

நாடக ஆசிரியர்: ந. முத்துசாமி

இயக்குநர்: ஆர்.பி. ராஜநாயஹம்

குழு: கூத்துப்பட்டறை

தமிழ் நாடக உலகின் முக்கியமான நாடக ஆளுமையான ந. முத்துசாமி 1968 -ல் எழுதிய நாடகமிது. இந்த நாடகம் அடித்தட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளை அலசுவதோடு மட்டுமல்லாமல் குரு - சிஷ்ய அமைப்பையும் கேள்வி கேட்கிறது. இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாடகத்தில் உருமாற்ற உத்தியும் கையாளப்பட்டிருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய ஒரு புதுமையான பயணமாக இந்நாடகம் இருக்கும்.

தி இந்து நாடக விழா

தமிழ் நாடகங்கள் நடைபெறும் இடம்: அருங்காட்சியக அரங்கம் (Museum Theatre), எழும்பூர், சென்னை.

நிகழ்ச்சிகள்:

ஆகஸ்ட் 26 - ஆயிரத்தியொரு இரவுகள்

ஆகஸ்ட் 27 - முந்திரிக்கொட்ட

ஆகஸ்ட் 28 - வண்டிச்சோடை

‘தி இந்து நாடக விழா’ நாடகங்களைப் பார்க்க டிக்கெட்களுக்கு - >thehindu.com/tickets2016

நாடகங்களுக்கான டிக்கெட்டுகள் தி இந்து அலுவலகத்தில் (மவுண்ட் ரோட்) கிடைக்கும். நேரம் - காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை.

தொடர்புக்கு: 98402 36367 / 98406 12333

மேலும் தகவல்களுக்கு: thehindu.com/theatrefest

இந்நிகழ்ச்சியை வழங்குவது ‘யெஸ் பேங்க்’. இணைந்து வழங்குவது காவேரி மருத்துவமனை, இந்துஸ்தான் இன்டர்நெஷனல் பள்ளி, தெலுங்கானா டூரிஸம். இந்நிகழ்ச்சியின் ஹாஸ்பிடாலிடி பார்ட்னர் தாஜ் கோரமண்டல். நிகழ்ச்சி மேலாளர் - இவம்.

நாடகங்களுக்கான டிக்கெட் விலை : ரூ. 250

சீசன் பாஸ் விலை : ரூ. 600

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்