சென்னை தாம்பரத்தில் உள்ளது ‘ஆபீசர்ஸ் ட்ரெய்னிங் அகாடமி'. இந்திய ராணுவத்துக்கு வேண்டிய அதிகாரிகளை ஒவ்வொரு 6 மாதமும் தயார்படுத்தி அனுப்புகிறது இது. நாட்டில் இதுபோன்ற அகாடமிகள் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. சென்னை தவிர அகாடமி உள்ள இதர இடங்கள் பிஹார் மற்றும் டெஹ்ராடூன். எனினும் சென்னை அகாடமிக்கு இன்னொரு பெருமை உண்டு. இங்கு மட்டும்தான் பெண் அதிகாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்.
1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த அகாடமி. அப்போது இந்திய சீனப் போர் நடந்துகொண்டிருந்தது. அதில் இந்திய தரப்பில் பல வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த எண்ணிக்கையைச் சரிகட்ட ‘எமர்ஜென்ஸி கமிஷன்' என்ற பெயரில் இந்த அகாடமி தொடங்கப்பட்டது. பின்னர் 1965-ம் ஆண்டு ‘ஆபீசர்ஸ் ட்ரெய்னிங் அகாடமி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு இங்குள்ள மாணவர்கள், இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர்க்கப்படுவார்கள். அப்போது ‘பாஸிங் அவுட் பரேட்' எனும் அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு அந்த அணிவகுப்புக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 10-ம் தேதி வருகை தருகிறார். வெங்கட்ராமன், பிரதீபா பாட்டீல் ஆகியோருக்குப் பிறகு இந்த அகாடமிக்கு வருகை தரும் மூன்றாவது குடியரசுத் தலைவர் இவர். இதுவரை 25 ஆயிரம் ஆண் அதிகாரிகளையும், 2 ஆயிரத்து 500 பெண் அதிகாரிகளையும் உருவாக்கி யிருக்கும் இந்த அகாடமிக்கு, இந்தியாவின் நட்பு நாடுகளிலிருந்து ராணுவ வீரர்கள் வந்து பயிற்சி பெறுவார்கள். இந்த ஆண்டு முதன்முறையாக பூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் 27 வயதான அவர் பெயர் டஷி யாங்ஸோம், இங்கே பயிற்சி பெற்றிருக்கிறார். அவரின் வீரதீர சாகசங்கள் இங்கே காணலாம்.

முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago