திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படலாம், திருமண ஏற்பாடுகளை நாம்தானே கவனித்தாக வேண்டும். திருமணத்தை நல்லபடியாக நடத்த ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நேரில் சென்று வாங்கிய காலம் எப்போதோ மாறிவிட்டது. இப்போது, அலட்டிக்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு திருமணத்தை நல்லபடியாக நடத்திவிடலாம். திருமணத்தை ஏற்பாடு செய்யும் இணையதளங்கள் இதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. திருமண மண்டபம், அழைப்பிதழ்கள், ஒளிப்படக் கலைஞர்கள், ஆடைகள், மேக்-அப், நகைகள், அலங்காரம் என எல்லாவற்றையும் இணையத்திலேயே திட்டமிட்டுவிடலாம். இந்தியாவில் பல திருமண ஏற்பாடுகள் இப்போது இணையதளங்களின் உதவியோடு நடைபெறுகின்றன. திருமணத்தைத் திட்டமிட உதவும் சில பிரபலமான இணையதளங்கள்:
வெட் மீ குட் (Wedmegood)
திருமணச் சேவைகளை வழங்கும் பல்வேறு விற்பனையாளர்களையும் மணமக்களையும் இணைக்கும் மிகப் பெரிய ஆன்லைன் போர்ட்டல் இது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் செயல்படுகிறது. மணப்பெண்ணோ மணமகனோ ஒரு சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது, குடும்பத்தினர், நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்க விரும்பினால் அவர்களையும் தங்கள் புரோஃபைலில் இணைத்துக்கொள்ளலாம். இவர்களுடைய ‘வெட் மீ குட்’ செயலியும் இப்போது பிரபலம்.
மேலும் தகவல்களுக்கு: >www.wedmegood.com
வெட்டிங்ஸ் (weddingz)
ஆரம்பித்து ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்களை நடத்தியிருக்கிறது ‘வெட்டிங்ஸ்’. திருமணச் சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி போர்ட்டலாக இந்தத் தளமும் வேகமாக வளர்ந்துவருகிறது. தற்போது மும்பை, டெல்லி பெங்களூரு, புனே, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் தன் சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. விரைவில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் தன் சேவைகளை விரிவாக்கம் செய்யவிருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு: >http://weddingz.in/
தமிழ் பிரைட்ஸ் கைட் (Tamil Brides Guide)
தமிழ்நாட்டு மணப்பெண்களுக்காகப் பிரத்தியேகமாகச் செயல்படும் ‘ஆன்லைன் போர்ட்டல்’ இது. ‘மேக்-அப்’கலைஞர்கள், பேஷன் டிசைனர்கள், அழகுக் கலை நிபுணர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், மெஹந்தி, பூஞ்சடை, சிகை அலங்காரம், பூமாலை வடிவமைப்பு, உணவு ஆலோசகர்கள் எனப் பல சேவைகளை இந்த இணையதளம் வழங்குகிறது. தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ‘டிபிஜி’ செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: >http://tamilbridesguide.com/
ஃபார் மை ஷாதி (For my Shaadi)
இந்த இணையதளம், மணமக்களுக்கான பரிசு வழங்கும் தளம். இந்தத் தளத்தில் மணமக்கள் தங்களுக்கு விருப்பமான பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தப் பட்டியலை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். அந்தப் பரிசுப் பொருட்களின் பட்டியலிலிருந்து தங்களுக்குப் பிடித்ததை உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு வாங்கிக் கொடுக்கலாம். திருமணத்துக்குத் தேவையில்லாத பரிசுப் பொருட்கள் வழங்குவதை இதன் மூலம் பெரிய அளவில் தடுக்கலாம். வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் ஒரு திருமண டிரெண்டை இந்தியாவில் பிரபலப்படுத்தத் தொடங்கியிருக்கிறது இந்தத் தளம்.
மேலும் தகவல்களுக்கு: > http://formyshaadi.com/
‘பிக் இந்தியன் வெட்டிங்’ (Big Indian Wedding)
திருமணத் திட்டமிடலுக்கான இந்தியாவின் மாபெரும் இணையதளம் இது. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் விற்பனையாளர்களைப் பல்வேறு பிரிவுகளில் இந்தத் தளம் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சேவைகளை இந்தத் தளம் வழங்குகிறது. அத்துடன், திருமண திட்டமிடல் பற்றிய பல்வேறு கட்டுரைகளும் இந்தத் தளத்தின் சிறப்பம்சம்.
மேலும் விவரங்களுக்கு: >http://www.bigindianwedding.com/
‘வெட்டிங் பிளீஸ்’ (weddingplz)
சோதிடர்கள் முதல் துப்பறியும் நிறுவனங்களின் தகவல்வரை திருமணத்துக்குத் தேவைப்படும் எல்லாச் சேவைகளையும் இந்தத் தளம் வழங்குகிறது. ஆனால், இப்போதைக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில்தான் இந்தத் தளம் செயல்படுகிறது. இன்னும், சென்னையில் அதன் சேவைகள் தொடங்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 mins ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago