‘என் வழி இசை வழி’ என ஸ்டாண்டப் காமெடியில் தனக்கெனத் தனிப் பாணி கொண்டவர் ஜகன் கிருஷ்ணன்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை பாணி எப்படிப்பட்டது, இளையராஜாவின் இசை ரசிகர்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ரசிகர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, தமிழில் காதல் பாடல் எழுதும் வித்தை என்ன… இப்படி இசையை மையமாக வைத்துப் பல ஸ்டாண்டப் காமெடிகளையும் இசை வீடியோ காமெடிகளையும் செய்துவருகிறார்.
வெயிலின் தகிப்பிலும் தேர்வின் திகிலிலும் மாணவர்கள் தவித்துக்கொண்டிருந்தபோது, ‘What if A.R.Rahman is your Maths Teacher’ என்ற இசை வீடியோ காமெடியைச் சில மாதங்களுக்கு முன்னால் கொடுத்தார்.
அதே வரிசையில், ‘What if Illayaraja is your Chemistry Teacher?’ என்று ஒரு வீடியோ பாடலை அண்மையில் பாடியிருக்கிறார். விஜயகாந்த், பானுப்ரியா நடிப்பில் 1990-ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான ‘சத்ரியன்’-ல் இடம்பெற்ற ‘பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று’ பாடலின் டியூனில் வேதியியல் தனிமங்களின் பட்டியலைப் பாட்டாகவே பாடி அசத்தியிருக்கிறார் ஜெகஜாலக்கில்லாடி ஜகன். பாட நல்லா வருது ஆனா படிப்பு நல்லா வரலையே என்ற கவலை இனி வேண்டாம் நண்பாஸ்!
சுட்டி:
இளையராஜா வேதியியல் ஆசிரியரானால்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago