மொய் வைக்கனும்... மொக்கை போடனும்...

By குமார்

காட், அதாங்க கடவுள் இப்ப உங்க முன்னாடி வந்து, “உனக்கொரு வரம் தாறேன். இன்னா வேணும்”னு கேட்டா பட்டுன்னு என்ன கேப்பீங்க. காரு, பைக்கு, செம்ல பாஸ் மார்க் இதெல்லாம்விட நீங்க இப்ப லேட்டஸ்ட்டா போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு லைக்ஸ்தான் கேப்பீங்க இல்லையா? ஊர்ல உள்ளவன் எல்லாம் எக்கச்சக்கமா ஸ்டேட்டஸ் போட்டு லைக்குகளை அள்ளும்போது ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போடுறவன் படுற அவஸ்தை! அய்யய்யோ!

லைக்ஸ் அள்ளி அள்ளி ஒண்டே மேச்சுல எல்லா ரன்னையும் நாம ஒருத்தனே அடிக்கணுங்கிற மாதிரி கோடிக்கணக்குல லைக்ஸ் வாங்கணும். பிபிசில இருந்து வந்து பேட்டியெடுக்கணும். நம்ம ஃபேஸ்புக் பேஜை லைக்ஸ் பேஜா மாத்தணும். கின்னஸ் ரெக்கார்டுல பேர் வரணும். இப்டியெல்லாம் நிறைய ஆசை இருக்கும் உங்களுக்கு. பட் யூ நோ, எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கு. உங்களுக்கு லைக் வரலைன்னு கவலைப்பட்டு உக்கார்ந்திருக்கிறத விட்டுட்டு முதல்ல அடுத்தவங்க ஸ்டேட்டஸை லைக் பண்ண ஆரம்பிங்க.

நாம அவுங்க வீட்டுக் கல்யாணத்துக்கு கிஃப்ட் கொடுத்தாதானே அவுங்க நம்ம வீட்டு கல்யாணத்துக்கு மொய் வைப்பாங்க. இது ஒரு சிம்பிள் லாஜிக். இது மாதிரி பல ரூட்டுல போனாதான் லைக்ஸைக் கூட்ட முடியும். மொய் வைக்கணும், மொக்கை போடணும், பல்புகள் வாங்கணும், செல்ஃபிகள் பிடிக்கணும். பல மேட்டர்ஸ் இருக்கு மச்சீஸ். ஹெவி காம்படிஷன் மச்சி! ஹெவி காம்படிஷன்! ஸோ கீப் ஆன் ட்ரையிங்...

இந்த லைக் மேட்டர் எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா ட்யூட்? தொடர்ந்து படிங்க. ஃபேமஸ் பாப் சிங்கர் ஷகிரா (Shakira) அண்ட் ரிஹானா (Rihanna). இந்த ஷகிராவோட ‘வென்னவர், வேரவர்(Whenever, Wherever) கேட்டிருக்கீங்களா? சரி அவுங்கள விடுங்க. ரிஹானா (Rihanna) பாட்டு கண்டிப்பா கேட்டிருப்பீங்க. ப்ளாக் ப்யூட்டியான ரிஹானாவோட Unfaithful பாட்டு பயங்கர ஹிட். நம்ம மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனி ஃபேவர்ல தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் ரிஹானா பாட்டு ஃபேமஸ் ஆச்சு. ‘காதலில் விழுந்தேன்’ படத்துல வர்ற ‘உனக்கென நான் எனக்கென நீ...’ பாட்டு மெட்டு அப்படியே ரிஹானாவோட ‘Story of my life Searching for the right...’லருந்து அப்டியே சுட்டது. அதனால இன்னா இப்போ? ஃப்ரீயா விடு.

மேட்டர் என்னானா, இப்ப ஃபேஸ்புக் லைக்குல இவுங்க ரெண்டு பேருக்கும்தான் காம்படிஷன். இவுங்க ரெண்டு பேரும் அள்ளுன லைக் எவ்ளோனு கேட்குறீங்களா? நமக்கு தெரிஞ்ச மேத்ஸ் வச்சு பட்டுனு சொல்ல முடியாலம்மா. அவ்ளோ லைக்ஸ்!

ரிஹானா அள்ளுனது 8.6 கோடி லைக்ஸ்! சான்ஸே இல்ல. ஷகிராவோ அதவிடக் கூடுதலா 8.7 கோடி லைக்ஸ் அள்ளிருக்காங்க. யூடியுப் பேஜ், கோகோ கோலா பேஜ், புட்பால் ப்ளேயர் ரொனால்டோ, பாப் மார்லி பேஜ், மைக்கேல் ஜாக்ஸன் பேஜ் எல்லாம் இவுங்களுக்கு ரொம்ப ரொம்ப பின்னாடி. அவுங்கல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் சிங்கர்ஸ். ஆனா நான்? அப்டினு நீங்க ஃபீல் பண்ணாதீங்க. கீப் ஆன் ட்ரையிங்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

மேலும்