ஒளி பாயுதே!

By ம.சுசித்ரா

 

ரட்டை அடிப்பதற்கு மட்டுமல்ல அறப் போராட்டத்தை முன்னெடுக்கவும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என்று கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் துடிப்போடு திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் ஒளியேற்றிக் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். சத்தம் இன்றி ரத்தம் இன்றி ‘மொபைல் ஃப்ளாஷ் லைட்’ அடித்து ‘ஃப்ளாஷ் நியூஸ்’-க்கு உள்ளடக்கம் தந்தார்கள்.

இப்படியாக, அமைதிப் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம், கூடி நின்று கோஷம் போடுவதோடு தொழில்நுட்ப வளர்ச்சியையும் துணைச் சேர்த்துக்கொண்டார்கள் புதிய தலைமுறையினர். இதே உத்தியை தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திலும் அம்மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில், இந்தப் போக்கின் ‘ஃப்ளாஷ்பேக்’கைத் தேடிச் செல்வோமா?

பச்சை நிறமே பச்சை நிறமே

2012-ல் உலகை அதிரவைத்தது எகிப்து புரட்சி. ‘இதுக்கு வேறொரு பெயர் இருக்கு’. அதுதான், ‘இளைஞர் புரட்சி’. அதுவும் ஜனவரி மாதத்தில்தான் தொடங்கியது! வேலையில்லா திண்டாட்டம், கருத்துரிமைக்குத் தடை உள்ளிட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்நாட்டு அதிபர் முகமது மோர்சியை வீட்டுக்கு அனுப்பியது அந்த இளைஞர் படை.

ஆட்சி முறியடிக்கப்பட்ட அன்று எகிப்தின் கெய்ரோ நகரின் இரவை வண்ணமயமாக்கியது வாணவேடிக்கையும், வெற்றி கூவலும் மட்டுமல்ல, பச்சை ஒளிக்கீற்றைப் பாய்ச்சும் லேசர் பேனாக்களும்தான். இருள் படர்ந்திருந்த விண்ணை லட்சக்கணக்கான லேசர் பேனாக்கள் கொண்டு, ‘பச்சை நிறமே பச்சை நிறமே’வாக மாற்றினார்கள் கெய்ரோ நகர இளைஞர்கள்.

அதிலும் வானில் வட்டமிட்ட ராணுவ ஹெலிகாப்டரைக் குறிவைத்துக் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் ஒளி பாய்ச்சினார்கள். எகிப்திய அதிபரைக் கவிழ்த்த ராணுவத்துக்கு ஆதரவாக அன்று கெய்ரோ இளைஞர்களின் லேசர் பேனாக்கள் ஜொலித்தன.

லைட் பாய்ஸ்

சரி, எப்போதுமே ‘புரட்சி ஓங்குக!’ என்ற குரலோடுதான் இந்தத் தொழில்நுட்ப ஒளி பாய்ந்துகொண்டிருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. அமெரிக்காவின் ஏஞ்சல் விளையாட்டு அரங்கத்தில் 2014-ல் பேஸ்பால் மேட்ச் நடைபெற்றுக்கொண்டிருந்த இரவு அது. ஆட்டம் தொய்வடைந்தபோது ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பான ரசிகர்களில் 40 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் ஃப்ளாஷ் லைட்-ஐ ஆன் செய்தார்கள். அதுவரை ஆட்டக்காரர்களைச் சுற்றிவந்த கேமராக்கள் அதன் பிறகு இந்த ‘ஒளி வீசியவர்க’ளைச் சுற்றிவர ஆரம்பித்தன.

அதிலிருந்து கிரிக்கெட், டென்னிஸ் என வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஃப்ளாஷ் அடித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவது அல்லது கேலி செய்வது என்கிற புதிய போக்கு தொடங்கி அரக்கேறிவருகிறது. சமீபகாலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மேடை கச்சேரி செய்தபோதெல்லாம் இசை மழையில் நனைந்தபடியே ஆயிரக்கணக்கான இளம் ரசிகர்கள் ஃப்ளாஷ் லைட் அடித்து நளினமாக அசைந்தாடியதையும் சொல்லியாக வேண்டும்.

கொண்டாட்டமோ, ஆர்ப்பாட்டமோ இனிமேல் எது நடந்தாலும், ‘ஃப்ளாஷ் லைட்’டோடு இந்த ‘ஃப்ளாஷ்பேக்’கும் நினைவுக்கு வரும்தானே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்