தூக்கிப் போட்டுப்பிடி யோ-யோ பாய்ஸ்

By ம.சுசித்ரா

‘வாட்ஸ் அப் டியூட்', 'கிவ் மீ ஃபை', 'யோ! யோ!' போன்ற வார்த்தைகளை நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்வது இளமையின் அடையாளம். இப்படி பலரும் உற்சாகத்துடன் யோ!யோ! சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் 'யோ! யோ!' விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்கள்.

உலக சாம்பியன்ஷிப்

யோ யோவை வச்சு அப்படி என்ன போட்டி? உலகெங்கும் உள்ள 14 முதல் 25 வயதுவரை உள்ள இளைஞர்கள் மட்டுமே விளையாடும் ஒரு பரபரப்பான கேம்தான் யோ-யோ. செக் நாட்டிலுள்ள பிராக் நகரில் '2014 யோ-யோ' உலக சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருடம் போட்டியை வென்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜென்ட்ரி ஸ்டீன் (18)வயது இளைஞர்.

யோ-யோங்குறது அப்படி என்ன வித்தியாசமான போட்டி? நம்ம ஊர்ல குடுகுப்பைக்காரங்க கைல உடுக்கை இருக்கும்ல? உடுக்கையோட மினியேச்சர்தான் யோ-யோ. இந்த பொருளை எந்த சப்போர்ட்டும் இல்லாம கயிற்றில் சுத்தி, தரையில் விழாம, காற்றிலேயே அநாயாசமாகச் சுற்றிச்சுற்றி சாகசம் பண்ணுவதுதான் யோ-யோ போட்டி. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

காற்றில் சாகசம்

சரி, கொஞ்சம் இந்த விளையாட்டோட வீடியோ காட்சிகளைப் பாருங்களேன். வாவ்! கண்ணிமைக்கும் நேரத்தில் உருளையான ஒரு பொருளை கயிற்றில் பறக்கவிட்டு, பின்னணி இசைக்கு ஏற்ற மாதிரி சுழற்றி சுழற்றி எப்படி இவங்களால விளையாட முடியுதுன்னு த்ரில் ஆயிடுவீங்க. ஒரு மேஜிக் ஷோவைப் போல யோ-யோ விளையாட்டு பார்வையாளர்களை கட்டிப்போட்டு, ஆச்சரியப்படுத்துது.

யோயோயிங்.காம்

1932-ல் லண்டன் நகரில்தான் முதன்முதலில் உலகளவிலான யோ-யோ விளையாட்டு நடத்தப்பட்டது. பெரிய ஸ்பான்சர்ஸ் இல்லாத காரணத்தால், பின்னர் தொய்வடைந்தது. 1992 வரை யோ-யோ விளையாட்டுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. பின்னர் 1992ல் டேல் ஆலிவர் என்பவர்தான் யோ-யோ போட்டிக்கு புதிய வண்ணத்தைக் கொடுத்து மீட்டெடுத்தார்.

இந்த நிலையில், கிரேக் கோஹன் என்பவர் யோ-யோ விளையாட்டை உலகெங்கும் பரவலாக்க முடிவெடுத்தார். ஜக்லிங் (juggling) வித்தைக்கான பொருட்களை கிரேக் விற்பனை செய்து வந்தவர். (ஒரே நேரத்தில் நாலு, ஐந்து பந்துகளை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு சுழற்சியாக தூக்கிப்போட்டு விளையாடும் வித்தைதான் ஜக்லிங்).

யோ-யோவும் கிட்டத்தட்ட ஜக்லிங்கை ஒத்த விளையாட்டு என்பதால், யோ-யோ சாகசப் பொருட்களையும் யோயோயிங்.காம் (YoYoing.com) என்ற இணையதளத்தின் மூலம் விற்க அவர் தொடங்கினார்.

அடுத்து யோ-யோ விளையாட்டுப் போட்டிகளை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என பல்வேறு கண்டங்களில் அவரே நடத்தத் தொடங்கினார். கிரேகின் முயற்சியால் இளைஞர்களிடையே யோ-யோ அதிக வரவேற்பை பெறத் தொடங்கியது.

கிறிஸ்துமஸ் பரிசு

அப்படித்தான் இந்த வருடம் பிராக் நகரில் ஆக்ஸ்ட் மாதம் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் யோ-யோ உலக சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இதன் யூ டியூப் வீடியோவை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.

இந்த வருடம் வெற்றி வாகை சூடிய ஜென்ட்ரி ஸ்டீன், “எனக்கு பத்து வயதானபோது, யோ-யோ தொழிற்சாலையிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசாக யோ-யோ வந்தது. ஆர்வத்தில் சில வருடங்கள் அதை கையில் சுழற்றிக்கொண்டே திரிந்தேன்.

பிறகு அந்த விளையாட்டு மறந்தே போனது. ஒரு நாள் யோ-யோ போட்டிகள் பற்றிய செய்தி கேட்டு, பயிற்சியில் இறங்கினேன். இன்றைக்கு வெற்றி பெற்ற பின், அன்று கிறிஸ்துமஸ் பரிசு அளித்த அதே யோ-யோ தொழிற்சாலை எனக்கு ஸ்பான்ஸர் செய்துவருகிறது” என்கிறார் உற்சாகத் துள்ளலுடன். கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிப் போட்டு பிடிக்கும் ஆளா நீங்கள்? நீங்களும் ஒரு நாள் யோ-யோ சாம்பியன் ஆகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்