ரக ரகமான ஸ்மார்ட் போன்கள் போலவே அதற்கென உருவாக்கப்படும் ஆப்ஸும் செம ஸ்மார்ட். புதுப் புது மொபைல் ஆப்ஸை டவுன்லோட் செய்து மாடர்ன் ஆளா காட்டிக்கிட எல்லோருக்குமே ஆசை. ஃபோர் ட்வெண்டி டாட் காம் என்னும் இணையதளத்தில் யூத்ஃபுல்லான ஸ்மார்ட் போன் ஆப்ஸ் கொட்டிக்கிடக்கின்றன.
எல்லாமே ஃப்ரீதான். இந்த வெப்சைட்டில் அதிக அளவில் டவுன்லோடு செய்யப்படும் சில ஆப்ஸைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள் என்றால் அவற்றை டவுன்லோடு செய்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பீர்கள்?
நாட் ரீச்சபிள் அப்ளிகேஷன்
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன் இது. இதன் ஸ்பெஷாலிட்டிதான் இந்த அப்ளிகேஷன் விரைவாகப் பரவக் காரணம். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, ஆன் செய்து வைத்துக்கொண்டால் போதும் உங்களது போனுக்கு யார் ட்ரை பண்ணினாலும் ‘த கஸ்டமர் இஸ் நாட் ரீச்சபிள் அட் த மொமண்ட்’ என்பதே திரும்பத் திரும்ப ஒலிக்கும்.
காலேஜ் கட் அடிச்சிட்டுப் படத்துக்குப் போனாலோ, ஃப்ரண்ட்ஸோட ஊர் சுத்தினாலோ இந்த அப்ளிகேஷனை ஆன் செய்து வைத்துக்கொண்டால் போதும் நீங்க எங்க இருக்கீங்கன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. எந்த விதத் தொந்தரவும் இல்லாம நீங்க ஜாலியா டைம் பாஸ் பண்ணலாம்.
ஃபோட்டோ ஹைடிங் அப்ளிகேஷன்
யங்ஸ்டர்ஸின் ஒட்டுமொத்த ஆதரவு இதற்கு இருக்கிறது. இது உங்கள் பாய்ஃப்ரண்ட்டுடன் அல்லது கேர்ள்ஃப்ரண்டுடன் நீங்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபிய ரகசியமாப் பாதுகாக்க ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இந்த அப்ளிகேஷன ஆன் பண்ணி வச்சிட்டாப் போதும் உங்கள் மொபைலில் உள்ள எந்த ஃபோட்டோவையும் யாரும் பார்க்க முடியாது. காலரியே எம்ப்ட்டின்னு காட்டும். அதனால க்ளோஸ் ஃப்ரண்ட்ஸுங்கிற பேரில் உங்கள் மொபைல நோட்டம் போடுபவர்களிடமிருந்து உங்கள் ரகசியத்தைக் காப்பாற்றும் அப்ளிகேஷன் இது.
காதலிப்பவர்களுக்கான ஸ்பெஷல் அப்ளிகேஷன் இதுவென இந்த இணையதளம் இதை புரோமேட் செய்கிறது.
கிரேட் எஸ்கேப் அப்ளிகேஷன்
சரியான மொக்கை கேஸுகளிடம் மாட்டிக்கொண்டு தப்பித்துக்கொள்ள வழி தெரியாமல் பல சந்தர்ப்பங்களில் தலையைப் பிய்த்துக் கொள்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். ஆப்ஸ் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். கிரேட்
எஸ்கேப் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள். மொக்கை கேஸ்கள் பேசத் தொடங்கும்போது இந்த அப்ளிகேஷனை
ஆன் செய்துவிடுங்கள். சரியாக 30 விநாடிகளில் தொடர்ந்து உங்கள் செல்ஃபோனுக்கு இன் கம்மிங் கால் வந்துகொண்டேயிருக்கும். போன்
வருதுன்னு சொல்லி நீங்க ஈஸியா எஸ்கேப் ஆகிடலாம். பிறகென்ன மொக்கைகளிடமிருந்து தப்பிக்க இந்த அப்ளிகேஷனை லேட் பண்ணாமல் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷன் காலேஜ் ஸ்டூடண்ஸைவிட ஆபீஸ்கோயர்களிடம் செம பாப்புலராம்.
143 அப்ளிகேஷன்
உங்க ஹார்ட்பீட்ட எப்போதும் நார்மல்சிக்கு கொண்டுவராத ஒரு விஷயம், சிரிச்சி சிரிச்சு பேசுற பையனோ பெண்ணோ ஃப்ரண்டா அல்லது லவ்வராங்கிறது. இந்த ப்ராப்ளத்தை ஈஸியாத் தீர்த்துவச்சிரும் இந்த அப்ளிகேஷன்.
இதன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கணும்னு டெல்லியில் பெற்றோர்கள் முறையிடுற அளவுக்கு பெற்றோர்கள் வயித்தில் அமிலத்தையே கரைக்கிற அப்ளிகேஷன் இது.
ஆனால் இளவட்டங்களின் இதயத்தை அப்படியே கபளீகரம் செய்த அப்ளிகேஷனும் இதுதான். இந்த அப்ளிகேஷன் உங்களோட காதல் பிரச்சினையத் தீர்க்கும் டாக்டர்னே சொல்லலாம்.
இதை முதலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அந்த நபரின் மொபைல் நம்பர் கண்டிப்பாக உங்களிடம் இருக்கும். இல்லையென்றாலும் அதை வாங்கி ஸ்மார்ட் ஃபோனில் ஸ்டோர் பண்ணிக்கங்க.
இப்ப அப்ளிகேஷனை ஆன் பண்ணி அதில் உங்க ஆளோட மொபைல் நம்பர் என்கேஜ் பண்ணிக்கங்க. இதைத் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாகப் பதில் சொல்லுங்க. அதனடிப் படையில் அப்ளிகேஷன், உங்க ஆளு உங்கள் ஃப்ரண்டா நினைக்கிறாங்களா லவ்வரா நினைக்கிறாங்களாங்கிறதைச் சொல்லிரும்.
அமெரிக்கக் கல்லூரிகளில் இந்த அப்ளிகேஷன் உதவியால் தங்கள் லவ்வரைக் கண்டறிந்துள்ளதாக மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக உட்டோபியா யுனிவர்சிடியின் பேராசிரியர் மிஸ்டர் ஃப்ராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மறந்துராதீங்க.
இந்த அப்ளிகேஷன்கள் உங்களுக்குப் பிடித்துள்ளதா? இதை கூகுள் ஸ்டோரிலோ நோக்கியா ஸ்டோரிலோ தேடினால் கிடைக்காது. ஃபோர் ட்வெண்டி டாட் காமில் மட்டுமே கிடைக்கும். அந்த இணையதளத்தில் பக்கத்திற்குச் சென்று, தேவையான அப்ளிகேஷனை க்ளிக் பண்ணுங்க.
அதில் ஸ்லோகன் எனத் தெரியும் விண்டோவைத் திறந்து, ஆசை, தோசை, அப்பளம், வடை என்னும் மந்திரத்தை ஆயிரம் முறை டைப் செய்துவிட்டு கடைசியாக உங்கள் மொபைல் எண்ணை அதில் டைப் பண்ணுங்க. அவ்வளவுதான், இப்போ உங்க மொபைலில் அந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். ஓகேவா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago