மிஸ் மேட்ச் உடைகள் அணிந்து உங்களுக்கு அலுப்பாகிவிட்டதா? அப்படியென்றால், கிங்ஹாம் (Gingham) வகை ஆடைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஏற்கெனவே நமக்கு நன்கு பரிச்சயமான கட்டம் போட்ட செக்டு, ஸ்ட்ரைப் டிசைன்கள் கொண்ட ஆடைகளைத்தான் கிங்ஹாம் வகை ஆடைகள் என்கிறார்கள். பழைய ஃபேஷன் வகைச் சுழற்சி முறையில் மறு டிரெண்டிங்காக உருவெடுப்பதைப் போல இந்த ஆடையும் இப்போது இளையோரை ஈர்த்துவருகிறது. அதை இன்றைய நவீன ஸ்டைலுக்கு ஏற்ப அணிந்து ஃபேஷன் உலகைக் கலக்கிவருகிறார்கள் இளையோர்.
இது ஆண்களுக்கானது
செக்டு சட்டைகள் என்றாலே அது பழைய ஃபேஷனாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய டிரெண்டிலும் இந்த செக்டு சட்டைகளும் பேண்டுகளும்தான் ஃபேஷன். ‘வேண்டாம்’ என உங்கள் வீட்டு அலமாரியில் நீங்கள் ஒதுக்கிவைத்த செக்டு பேண்டுகள், சட்டைகள் போன்றவற்றைத் தற்போது ஃபேஷனாக அணிந்துகொண்டு மற்றவர்களின் பார்வையை உங்கள் பக்கம் திருப்பும் நேரம் வந்துவிட்டது.
செக்டு டிசைன்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கிங்ஹாம் பேண்டுகள் கறுப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆன்லைன் விற்பனையிலும் இந்த ஆடைகள் பிரசித்திமாக உள்ளன. இந்த கிங்ஹாம் பேண்டுகளை அணியும்போது அதை மேட்சிங் செய்யும் வகையில் வெள்ளை நிற டிஷர்ட், சட்டை போன்றவற்றை அணியலாம்.
இது பெண்களுக்கானது
கிங்ஹாம் வகை ஆடைகளை அணிவதில் ஆண்களைவிடப் பெண்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களுக்குதான் வெவ்வேறு வடிவங்களில் கிங்ஹாம் ஆடைகள் சந்தையில் அதிகம் கிடைக்கின்றன. சினிமா பிரபலங்கள்வரை இந்த கிங்ஹாம் ஆடைகளை அணிந்துகொண்டு வலம் வருகிறார்கள்.
அதிக வெப்பம் கொண்ட நம்முடைய நாட்டுக்கு ஏற்ற வகையில் பருத்தித் துணியில் கிங்ஹாம் ஆடைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு எளிமையாகவும் வசதியாகவும் உணரும் வகையிலும் இந்த ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. வயது வித்தியாசமில்லாமல் எல்லாப் பெண்களும் கிங்ஹாம் வகை ஆடைகளை அணியலாம்.
மேல் கோட், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டாப், பென்சில் ஸ்கர்ட் எனப் பலவகையான கிங்ஹாம் ஆடைகள் பெண்களுக்காகச் சந்தைகளில் வலம்வருகின்றன. கிங்ஹாம் ஸ்கர்ட்டும் டாப்ஸையும் ஒன்றாக அணியக் கூடாது. இது உங்களுடைய ஆடை அணியும் முறையைத் தவறாக எடுத்துக்காட்டும். கிங்ஹாம் டாப்ஸ் போடும்போது அதை மேட்சிங் செய்யும் வகையில் ஜீன்ஸும் சாதாரண ஸ்கர்ட்டும் போடலாம்.
இதேபோல ஸ்ட்ரைப் வகை ஆடைகளும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உயரம் குறைவாக உள்ள பெண்கள் செங்குத்தான ஸ்ட்ரைப் ஆடை அணிந்தால், பார்ப்பதற்கு உயரமாகவும் அழகாகவும் தெரிவார்கள். ஒரு வேளை நீங்கள் உயரமானவராக இருந்தால், எல்லா வகையான ஸ்ட்ரைப் ஆடைகளையும் அணியலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago