இளமை.நெட்: கூகுள் இருபதும் இருபது நகரங்களும்

By சைபர் சிம்மன்

கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காகப் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது கூகுள். ‘ஏரியா 120 டிவிஷன்’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், பயண வழிகாட்டி இணையதளமான ‘டூரிங் பேர்டு’ தளம் அறிமுகமாகியுள்ளது.

முதல் கட்டமாக 20 நகரங்களுடன் அறிமுகமாகி யுள்ள இந்தச் சேவையில் சுற்றுலா நகரங்கள் தொடர்பான தகவல்களை அறியலாம். பயணத் திட்டமிடலுக்கும் பயன்படுத்தலாம். சுற்றுலா இடங் களைக் கண்டறிவதோடு, பயண சேவைகளை ஒப்பிட்டுப் பதிவுசெய்வதற்கான வசதியையும் இது அளிக்கிறது. இவை எல்லாம் ஒரே இடத்தில் வழங்கப்படுவதுதான் இந்தத் தளத்தின் சிறப்பம்சம்.

நகரங்களின் பட்டியல்

இந்தத் தளத்தின் முகப்பில், வழிகாட்டி தகவல்கள் இடம்பெற்றுள்ள நகரங்கள் வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலும் காட்சி வடிவில் அமைந்துள்ளது. பார்சிலோனா, மாட்ரிட், லண்டன், சிகாகோ, மியாமி, நியூயார்க், டெல்லி, ரோம், பாரீஸ், வாஷிங்டன் என நீளும் இந்தக் காட்சிப் பட்டியலிலிருந்து விரும்பிய நகரை ‘கிளிக்’ செய்தால், அந்த நகருக்கான தகவல்கள் காட்சிப் பட்டியலாக விரிகின்றன.

முதலில் நகரில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தோன்றுகிறது. இதில் இடம்பெறும் ஒளிப்படத்தை ‘கிளிக்’ செய்தால், அந்த இடம் தொடர்பான தகவல்கள் விரிகின்றன. சுவாரசியம் அளிக்கும் வகையில் அந்த இடம் பற்றிய பொதுவான தகவல்களோடு, அங்குள்ள ஆச்சரியமளிக்கும் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளன. உதாரணத்துக்கு, மியாமி நகரை ‘கிளிக்’ செய்தால், அங்குள்ள கடற்கரைப் பகுதி உலகின் நீளமான பவளத்திட்டைக் கொண்டி ருக்கும் தகவலை அறிய முடிகிறது. இடத்தைச் சுற்றிப் பார்ப்பது தொடர்பான பயணத் தகவல்களை அறிவதோடு, தொடர்புடைய இடங்கள் குறித்த விவரங்களையும் தனித்தனியே அறியலாம்.

உள்ளூர்க் குறிப்புகள்

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் தவிர, நகரில் மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகள் பற்றிய தகவல்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நடவடிக்கையையும் ‘கிளிக்’ செய்து கூடுதல் தகவல்களை அறியலாம். ஒவ்வொரு நடவடிக்கை தொடர்பான தகவல்களும் ஒளிப்படங் களுடன் விரிவாகத் தரப்பட்டுள்ளன. தவிர உள்ளூர் மக்களின் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் வழிகாட்டிகள் பார்வையில் இந்தக் குறிப்புகள் உள்ளன. பயணிகள் தங்கள் விருப்பம், ரசனை சார்ந்த இடங்களையும் தேர்வு செய்துகொள்ளலாம். 

உதாரணமாக, குடும்பத்துடன் சுற்றிப் பார்க்கக்கூடிய இடங்களை மட்டும் பார்வையிடலாம். இதேபோல, வழக்கமாகப் பலரும் செல்லாத இடங்களை அறிந்து கொள்ளலாம். உள்ளூர் உணவுச்சுவை அடிப்படை யிலான இடங்களையும் தெரிந்துகொள்ளலாம். இது இணைய யுகம் அல்லவா? அதற்கேற்ப, எழில் கொஞ்சும் காட்சிகளைப் படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர வசதியான இடங்களையும் தனியே பார்வையிடலாம்.

இவ்வாறு ஒவ்வொரு நகரமாகப் பார்வையிட லாம். வெறும் தகவல்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நகரிலும் என்ன செய்யலாம் என்பது தொடர்பான தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள் ளன. இந்தத் தகவல்களைப் பார்க்கும்போதே உங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் ஏற்படலாம். ஏற்கெனவே பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களுக்குப் பொருத்தமான நகரைத் தேர்வு செய்யவும், அந்த நகரில் விடுமுறையைக் கழிக்கத் திட்டமிடவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயண வழிகாட்டி

பயணங்களைத் திட்டமிடுவதற்கு நாட்காட்டி யுடன் இணைந்த திட்டமிடல் வசதியும் இருக்கிறது. பயண நாட்களை அதில் குறிப்பிட்டால், தொடர்புடைய நிகழ்ச்சிகள் அடையாளம் காட்டப்படுகின்றன. நிகழ்ச்சிகளைத் தேடும்போது பட்ஜெட்டுக்கேற்பத் தேடும் வசதியும் இருக்கிறது. பயணம் தொடர்பாகத் தேவைப்படக்கூடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதோடு, சேவைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

முதல் கட்டமாக 20 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் படிப்படியாக மேலும் பல நகரங்கள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதோடு இதில் பங்கேற்கவும் செய்யலாம். இதில் இணைந்து பயண வழிகாட்டியாக உங்களுக்கான சொந்தப் பக்கத்தை உருவாக்கிக் குறிப்புகளை வழங்கலாம். உங்கள் வலைப்பதிவு அல்லது சமூக வலைத்தளங்களுக்கான இணைப்பையும் அளிக்கலாம். உங்கள் பயண அனுபவங்களையும் பகிரலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://www.touringbird.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்