பதினான்கு வயதே நிரம்பிய விசாலினி, தன் வயதுக்கே உரிய உற்சாகத்துடன் தோழிகளோடு தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள்.
இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார்.
உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் முறியடித்து, 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் விசாலினியின் பெயர் இடம்பெற வில்லை. பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை இடம்பெற முடியும். இதனால் தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.
போதிய ஊடக கவனம் கிடைக்காமல் இருக்கிறார் இந்த அறிவுச்சுடர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸின் ஐ.க்யூ. திறன் 160தான், உலக செஸ் சாம்பியன் பாலி பிஸ்சரின் ஐ.க்யூ திறன் 180தான் எனில் விசாலினியின் 225ஐ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
விசாலினியின் சாதனைகள் பத்து வயதிலேயே தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையைப் பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
பதினான்கு வயதிற்குள் பள்ளிப் படிப்பிலும் இருமுறை டபுள் புரமோஷன் வாங்கியிருக்கும் இவள் படிப்பது பாளையங்கோட்டையில் உள்ள லட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்.
கடந்த ஆண்டு மங்களூரில் நடைபெற்ற NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, பன்னாட்டு அறிஞர்களோடு கணினியில் நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினாள்.
விசாலினியின் அறிவுத்திறன் கண்டு வியப்புற்ற அவர்கள், நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பத்தில் இவளுக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதுவரை இதேபோன்ற ஏழு உலக தகவல் தொழில்நுட்ப மாநாடுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு ‘கீ ஸ்பீச்’ கொடுத்திருக்கிறாள்.
சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அழைப்பை ஏற்று, அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் ’ கவுரவப் பேரா சிரியராகக் கலந்து கொண்டு ‘கான்செப்ட் ஆஃப் நெட் ஒர்க்கிங் அண்ட் க்ளவுட் கம்ப் யூட்டிங்’ என்ற தலைப்பில் 2 மணி நேர விரிவுரையாற்றி வியக்க வைத்திருக்கிறார்.
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இவர் ஒருவயது வரை ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சிரமப்பட்டி ருக்கிறாள். விசாலினியின் தாய் திருமதி.
சேதுராகமாலிகா, குழந்தை மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, அவளுடன் இடைவிடாமல் பேசி, கதைகள் சொல்லி, ஸ்லோகங்கள் பாடிக் காட்டி விசாலினியின் பேசும் திறனை வளர்த்திருக்கிறார்.
இன்று விசாலினியின் நுண்ணறிவுத் திறனைக் கண்டு அறிஞர்கள் உலகம் வியந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாதனைச் சிறுமியின் தந்தை கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிஷியன்.
இதுவரை விசாலினி MCP (Microsoft Certified Professional) CCNA (Cisco Certified Network Associate), CCNA Security(Cisco Certified Network Associate Security), OCJP (Oracle Certified Java Professional) ஆகிய தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
தனக்கான இணைய தளத்தை யும் தனது மடிக்கணினி கொண்டு தானே வடிவமைத்திருக்கிறார். இவர் சாதனைகள் இப்போதைக்கு நிற்காது என்பது மட்டும் நிச்சயம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago