இன்றைய இளைஞர்களிடம் “ஸ்மார்ட் போன்களின்” உபயோகமும், அவற்றைக் கையாளும் திறனும் அதிகமாகிவிட்டன. மற்ற போன்களில் இருந்து ஸ்மார்ட் போன்கள் மாறுபட்டிருப்பதற்கும், இளைஞர்கள் அதனை மிகவும் விரும்புவதற்கும் அவற்றின் அப்ளிகேஷன்களே காரணம். இன்டர்நெட் வசதியுடன் இவற்றை டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்றைய இளைய தலைமுறையினர் விதவிதமாகப் பயன்படுத்தும் சில “ஆப்ஸ்”
ஆண்ட்டி மஸ்கிட்டோ (Anti Mosquito)
கொசு கடிக்காமல் இருப்பதற்காக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதை ஆன் செய்தவுடன் போனிலிருந்து ஒருவகையான சத்தம் வரும். அந்தச் சத்தத்தால் கொசுகள் பக்கத்தில் வராமல் ஒதுங்கி ஓடிவிடும். பொதுவாக நம்மைப் பெண் கொசுகள் தான் கடிக்கின்றன. கொசுகளுக்கு ஒருசில அதிர்வெண்கள் அலர்ஜி. அத்தகைய அதிர்வெண்களையே இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கோ பெண்களுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை என்கிறார்கள்.
இன்ஸெப்ஷன் (Inception)
ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலனின் ‘இன்ஸெப்ஷன்’ படத்தின் அடிப்படையில் இதனை வடிவமைத்துள்ளனர். அப்படத்திற்கு ஹேன்ஸ் ஜிம்மர் அமைத்த இசையைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ளனர். ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில் நுட்பத்தின் மூலம் இசையை இயக்கியுள்ளனர்.
இந்த அப்ளிகேஷனின் சிறப்பு என்னவென்றால் போனில் உள்ள மைக்ரோபோன் சுற்றுப்புறத்தை உற்று நோக்கி அதற்கேற்றார் போல் இசையமைக்கும்.அந்த இசைக்கேற்றார் போல் நமக்கு கனவு வரும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றில் தான் செயல்படும். அதற்குரிய ஹெட் போன் போட்டுக் கேட்டால் எஃபக்ட் தூக்கலாக இருக்கும்.
இன்ஸ்டண்ட் ஹார்ட் ரேட்
இந்த அப்ளிகேஷனில் மற்ற நிறுவனங்களின் ஆப்ஸ் இருக்கும் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் அவற்றின் மூலம் நம்முடைய மொபைலுக்கு டாக்டைம் பணம் சேர்ந்துவிடும். இவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஆப்ஸே இருக்கும். தமது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் அல்லது மற்ற அப்ளிகேஷன் மூலம் அழைப்பு அனுப்பி அதன் மூலமும் எண்ணிற்கு டாக்டைம் பணம் சேர்த்து கொள்கின்றனர்.
உடற்பயிற்சி அப்ளிகேஷன்
இன்றைய நாட்களில் அனைத்து வயதினரும் அதிகமாக ஜிம்முக்குச் செல்கின்றனர். இந்த அப்ளிகேஷனை டவுண்லோடு செய்து, இதன் மூலமே எப்படி உடற்பயிற்சி செய்வது என்று கற்றுக் கொள்ளலாம். உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே, பயிற்சியாளர் உதவியில்லாமல் அதனைக் கவனித்தே கற்றுக்கொள்ளலாம். இவற்றில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இந்த அப்ளிகேஷன் உள்ளது. ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் ஒவ்வொரு அப்ளிகேஷன் உள்ளது.
இன்ஸ்டண்ட் ஹார்ட் ரேட்
இந்த அப்ளிகேஷன் மூலம் நம்முடைய இதயத்துடிப்பை அறியலாம். இதை ஆன் செய்துவிட்டு ரியர் கேமராவின் லென்ஸில் விரலை வைத்துக்கொண்டால் சில நொடிகளில் நமது இதயத்துடிப்பைச் சொல்லிவிடும். இதன் மூலம் நாம் நமது உடல் நலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இவை நோயாளிகளுக்கு மிகவும் பயன்படுபவையாக உள்ளன.
லவ் மீட்டர்
லவ் மீட்டர் என்ற வகையிலே கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட ஆப்ஸ் உள்ளன. இவற்றில், அவர்களது ஜோடியினரது பெயரை டைப் செய்தால் அவர்களது காதலின் சதவிகிதம் வந்துவிடும். இந்த ஆப்ஸை நிறைய இளைஞர்கள் வைத்துள்ளனர். அதிலும், சில இளைஞர்கள் தனது பெயருடன் நடிகைகளின் பெயரை டைப் செய்துவிட்டு கனவு கண்டுகொண்டு அலைகிறார்கள்.
விழுப்புரம் ரன்-1 மற்றும் 2
நடிகர் விஜயை வைத்து விழுப்புரம் ரன்-1 மற்றும் 2 என்ற விளையாட்டை உருவாக்கியுள்ளனர். இந்த விளையாட்டு டெம்பிள் ரன் போல் வடிவமைத்துள்ளனர். விளையாட்டில் நடிகர் விஜய் அவர் இரயில் மேல் ஓடுகிறார், விழுப்புரம் சந்திப்பிலிருந்து ஓடத் தொடங்குகிறார். இந்த அப்ளிகேஷனில் ‘குருவி ஜம்ப்’ மற்றும் ‘சுறா ஸ்லைட்’ என்ற இரு விருப்பத்தின் மூலம் விளையாட வேண்டும். இந்த விளையாட்டுக்குப் பின்னணியாக ‘வேட்டைக்காரன்’ திரைப்பட இசையைப் பயன்படுத்தியுள்ளனர்.
லை டிடெக்டர்
லை டிடெக்டர் என்ற அப்ளிகேஷன் மூலம் ஒருவர் பொய் பேசுகிறாரா உண்மை பேசுகிறாரா என்று தெரிந்துகொள்ளலாம். இதனை அவர்களது நண்பர்களுக்குள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் பேசும் பொழுது, அவர்களது விரலை ஸ்கிரீனில் வைத்து பேச வேண்டும். அந்த ஆப்ஸ் விரலை ஸ்கேன் செய்துவிட்டு அதன் முடிவை வெளியிடும்.
இதுபோல் மன அழுத்த தளர்வு மற்றும் தியானம் போன்றவைக்கும் ஆப்ஸ் உள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago