இளமை புதுமை

தமிழில் பிடித்த வார்த்தை ‘நன்றி’! | காபி வித் அசல் கோலார்

இந்து குணசேகர்

‘நான்தான் அந்தப் பையன்..’,
‘என்ன சண்டைக்குக் கூப்டா..'

உள்ளிட்ட பாடல்கள் மூலம் இன்றைய தலைமுறையினரை வசீகரித்திருப்பவர், பாடகர் அசல் கோலார். தமிழ், மலையாள மொழிகளில் பரபரப்பான பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கானா இசை, ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான அசல் கோலாருடன் ஓர் உரையாடல்.

சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - நிறைய நேரம் தூங்கணும்னு நினைக்கிற ஆளு நான். இதுதான் தூங்கி எழுந்திருக்கிற நேரம்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வேலையைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாறும்.

தனித்துவமான குணம்? - மற்றவர்களிடம் ஏதாவது நல்ல விஷயம் பார்த்தால், அது எனக்குப் பிடிச்சிருந்தா, அதை ஃபாலோ பண்ண டிரை பண்ணுவேன்.

இந்த வேலை இல்லை என்றால்..? - என்ன தடை வந்திருந்தாலும், எப்படியாவது முயற்சி செய்து பாடகர் ஆகியிருப்பேன். அப்படிக் கஷ்டப்பட்டும் அமையவில்லை என்றால் பிசினஸ் பண்ணியிருப்பேன்.

பாடல்களில் உங்களுக்கு விருப்பமான ஜானர் எது? - மற்றவர்கள் என்னை ராப்பர்னு அடையாளப்படுத்துறாங்க. எல்லா ஜானர்லையும் பாட விருப்பம் இருக்கு. பாடகர் என்கிற அடையாளத்தைவிட, ஓர் இசைக் கலைஞராக நான் அறியப்படணும். அதுதான், என் விருப்பம்.

பாடலை எழுத பிடித்த சூழல்… எந்தச் சூழ்நிலையிலும் பாட்டு எழுதணும்னு நினைச்சிட்டா, இந்த ‘அசல்’ எழுதிடுவான்..!

புத்தக வாசிப்பா, சினிமா அனுபவமா? - இரண்டுமே..! 50 – 50ன்னு வெச்சுக்கலாம்.

உறங்கவிடாமல் செய்கிற விஷயம் என்ன? - லைஃப்ல இதைப் பண்ணியே ஆகணுங்கிற இலக்கெல்லாம் எதுவும் எனக்குக் கிடையாது. ஆனால், வாழ்க்கையில் சில விஷயங்களைச் செய்யணுங்கிற ஆசைகள் சின்ன வயதிலிருந்தே இருக்கு. அதை நோக்கி ஓடணும்னு யோசிப்பேன். அந்த விஷயங்கள் எல்லாம் என்னைத் தூங்கவிடாது.

மனதில் பதிந்த சொல்? - மனதில் பதிந்த சொல் என்று எதுவும் இல்லை. ஆனால், பிடித்த சொல் இருக்கு. தமிழ்ல ‘நன்றி’ங்கிற சொல் ரொம்பப் பிடிக்கும்.

மறக்க முடியாத நபர்? - எனக்குப் பிடிச்சவங்க, மறக்க முடியாத நபர் எல்லாமே எப்பவும் பக்கத்தில்தான் இருப்பாங்க.

நினைவில் கொள்ளும் பாராட்டு? - ‘லியோ’ படத்தில் வரும் ’நான் ரெடிதான்’ பாடலை நானும் பாடினேன். நான் பாடியதை இசையமைப்பாளர் அனிருத் பாராட்டியதை மறக்க முடியாது.

திரும்பத் திரும்ப போக விரும்பும் இடம்..? - தனியா புறப்பட்டு பீச்சுக்குப் போயிடுவன். நான் போற இடத்தில் பெரும்பாலும் கூட்டமே இருக்காது. கடலைப் பார்க்கப் போறது ஒருவித ரீசார்ஜ் செய்வதுபோல புத்துணர்ச்சியா இருக்கும்.

வாழ்க்கையில் நீங்க ஃபாலோ பண்ற தத்துவம்? - ஜாலியா இருக்கணும், அவ்வளவுதான்!

உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளும் மோட்டிவேஷன்? - ‘Hustle over everything’.

SCROLL FOR NEXT