சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு பக்கம் தரவுகள் பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாக விமர்சனங்களைச் சந்தித்தது. இன்னொரு பக்கம் இணைய வசதி இல்லாத பகுதிகளுக்குச் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியைக் கொண்டு செல்வதற்கான திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைய வசதியை அளிக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயற்கைக் கோள் திட்டம் தொடர்பான செய்திகள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
இணையம் அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இணைய வசதி இன்னமும் உலகம் முழுவதும் பரவலாகவில்லை. இணைய வசதி பெறாத பகுதிகள் உலகில் இன்னும் பல இருக்கின்றன. உலகம் முழுவதும் இணைய வசதியை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கம் இருந்தாலும் அதை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
‘ஆப்டிகல் கேபிள்’ எனப்படும் ‘கண்ணாடி இழை’ கம்பிகள் இணைய இணைப்புக்கான சிறந்த வழியாகக் கருதப்படுகின்றன. கடலுக்கு அடியில்கூட இவை பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றைப் பதிப்பது செலவுமிக்க பணி. குறிப்பாக மலைப்பாங்கான இடங்கள், பனிப் பகுதியில் அமைப்பது செலவுமிக்கது. மிகவும் கடிமானது.
செயற்கைக்கோள் வசதி
எனவேதான் இணைய வசதியை அளிப்பதற்கு வேறு பல மாற்று வழிகள் நாடப்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான் செயற்கைக்கோள் பயன்பாடு. செயற்கைக்கோள்கள் வாயிலாகப் பூமிக்கு இணைய வசதியை அளிக்கலாம் என்றாலும், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை. செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 16 ஆயிரம் முதல் 32 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருப்பதால், அவை அளிக்கும் இணைய இணைப்பு வசதி வேகம் குறைந்ததாக இருக்கும்.
அதனால்தான், பூமிக்கு அருகே செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் கூட்டம் மூலம் இணைய வசதி அளிக்கும் யோசனை முன்வைக்கப்படுகிறது. பூமியைச் சுற்றி 160 முதல் 2414 கி.மீ. வட்டப்பாதையில் செயற்கைக் கோள்களைச் செலுத்துவதன் மூலம் இது சாத்தியமாகலாம். பல பகுதிகளுக்கு இணையத்தைக் கொண்டுசெல்லக் கூட்டமாகச் செயற்கைக் கோள்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த யோசனையை நடைமுறைப் படுத்தும் முயற்சியில் ஏற்கெனவே ‘ஸ்பேஸ் எக்ஸ்’, ‘ஒன்வெப்’ ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. இந்தப் பட்டியலில் மார்க் ஸக்கர்பர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஏதெனா’ எனும் பெயரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
கைவிடப்பட்ட திட்டம்
“இந்தத் திட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்கள் பற்றிய தகவல்களை இப்போது பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால், பிராட்பேண்ட் இணைய வசதியை அடுத்த தலைமுறையினருக்குச் சாத்தியமாக்குவதில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதாகவும், இதன்மூலம் இப்போது இணைய வசதி இல்லாமல் இருக்கும் கிராமப்புறப் பகுதிகளுக்கு பிராட்பேண்ட் வசதியை அளிக்க முடியும் என நம்புவதாக” ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் செயற்கைக் கோள் திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. ஃபேஸ்புக் கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன்கள் மூலம் இணைய வசதியை அளிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுவந்தது. இதற்காக ‘அக்விலா’ எனும் சூரிய சக்தி ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது. எனினும், இந்தத் திட்டத்தை கைவிடு வதாக அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் இணைய வசதிக்காக செயற்கைக்கோள்களைச் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஃபேஸ்புக் ஆர்வம்
இணைய வசதியை விரிவாக்கு வதில் ஃபேஸ்புக் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. ‘இண்டெர்நெட்.ஆர்க்’ எனும் திட்டம் மூலம், இணைய வசதி இல்லாத இடங்களில் இணைய இணைப்பை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. எனினும், இதன் ஒரு அங்கமான பிரீபேஸிக்ஸ் திட்டம் இணைய சமநிலைக்கு எதிராக அமையும் எனக் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இந்தியாவில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், அமெரிக்கத் தொழிலதிபர் எலன் மஸ்கின் ’ஸ்பேஸ் எக்ஸ்’, ஜப்பானின் சாப்ட்பேங்கின் ’ஒன் வெப்’ ஆகிய நிறுவனங்கள் செயற்கைக்கோள் இணைய வசதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் ஏற்கெனவே சோதனை முறையில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்திய நிலையில் அடுத்த ஆண்டு மேலும் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்த உள்ளது. தொடர்ந்து செயற்கைக் கோள்களைச் செலுத்தி ஒரு வலைப்பின்னலை உருவாக்குவதே அதன் நோக்கம்.
இதற்கு முன்னரேகூடப் பல நிறுவனங்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவை தோல்வி அடைந்தன. அதேபோல மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் ஆதரவு பெற்ற ‘டெலிடெஸிக்’ நிறுவனமும் தோல்வியைத் தழுவியது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago