மேஷ ராசி நேயர்ஸ்!
இன்றைக்கு உங்களுக்கு பேட் டைம் மச்சிஸ்! சத்யம் தியேட்டர்க்கு எதிரில் நின்னு குஸ்கா சாப்டாலும், காலேஜ் கட்டடிச்சிட்டு பிக்சர் போனதா ‘எனிமீஸ்’ வீட்ல போட்டுக்கொடுத்துருவாங்க. இன்னைக்குப் பார்த்து சின்சியரா கிளாஸ் கவனிச்சாலும் மேம் ஸ்கூல் பையன் மாதிரி அஸைன்ட்மெண்ட் கொடுத்து அசிங்கப்படுத்துவாங்க. தேசியக் கொடி வேற கலர்ல கிடைக்குமான்னு கடைக்காரங்கட்ட கேட்டு அசிங்கப்படுவீங்க.
ராசியான கலர்: ஊதா கலரு ரிப்பன்
ராசியான திசை: ‘கிழக்கு கடற்கரை சாலை’
ரிஷப ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இல்லை எனக் கட்டம் சொல்கிறது. அதாவது மூணாவது வீட்ல இருந்த குரு நாலாவது வீட்டுக்குக் குடிபோய்ட்டதால சனி வீடில்லாம சுத்துது. அதனால உங்க வீட்டை யாருக்கும் உள் வாடகைக்கு விடாதீங்க. சனி இப்ப முன்ன மாதிரியெல்லாம் இல்லை. வைரஸ் மாதிரி உங்க பென்ட்ரைவ், போன்ல கூட பரவிரும். அதுனால யார்ட்டயும் போனயும், பென்ட்ரைவையும் கொடுக்காதீங்க.
ராசியில்லாத கலர்: விடாது கருப்பு
ராசியில்லாத திசை: சனி திசை
மிதுன ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு அப்படிக்கா இப்படிக்கா இருக்கும். அதாவது காலேஜ்க்குப் போறப்ப அம்மா திடீர்னு 50 ரூபாய் கொடுப்பாங்க. இத நம்பி அப்பாட்ட கை நீட்டு ‘அர்ச்சனை’கிடைக்கும். சுமார ட்ரெஸ் பண்ணிட்டுப் போனாலும் ‘சூப்பர் மச்சி’ம்பாங்க. அதுக்காக ஓவரா சீன் போட்டா, கேன்டீன் பில்ல உங்க தலைல கட்டிருவாங்க. பி கேர் புல்.
ராசியான கலர்: பச்ச மஞ்ச கருப்பு தமிழன்டா
ராசியான திசை: வெஸ்ட் போணும் நினைச்சா ஈஸ்ட், ஈஸ்ட் போணும் நினைச்சா வெஸ்ட்
கடக ராசி நேயர்ஸ்!
உங்களுக்குக் கைகூடாத பல விஷயங்கள் இன்றைய நாளில் கைகூடும். அதுக்காக காலைல எழுந்து ‘ஏ டவல் கம்மிங்’ன்னு கூப்டா டவல் வராது. நீங்கதான் கைல எடுக்கணும். கைல பிகில் அடிக்கணும், நோட்ட சுத்தணும் நெனக்கிற உங்க ரொம்ப நாள் கனவு கைகூடும். ஆனால் பைக்கை, ஸ்கூட்டர கை விட்டு ஓட்டிராதீங்க. கையே போயிரும்.
ராசியான கலர்: மஞ்ச மஞ்ச...
ராசியான திசை: நார்த் வேஸ்ட் ஈஸ்ட் நாமெல்லாம் சவுத்
சிம்ம ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். குவாட்டர் ப்ளேட் குஸ்கா வாங்கிச் சாப் பிட்டாலும் லெக் பீஸும், முட்டையும் கிடைக்கும். இன்னைக்கு ரிலீஸ் ஆகிற சூப்பர் படத்திற்கு டிக்கெட் ஈஸியா கிடைக்கும். மொக்கையா கமெண்ட் அடிச்சாலும் ‘செம காமெடி’ அப்படிம்பாங்க. குளிக்காம போன ‘ஸ்பிரே சூப்பர்ருக்கு. எங்க வாங்கினேன்’னு கேப்பாங்க.
ராசியான கலர்: புழுதி பறக்கும் கலரு...
ராசியான திசை: ஆல் ஏரியாஸ்
கன்னி ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். ஆனால் அதுக்குக் காலை எழுந்ததும் பல் விளக்கணும். ரொம்ப மாசமா துவைக்காத ஜீன்ஸை துவச்சுப் போடுவீங்க. கேண்ட் கர்சீப்புக்கு ஃப்ரீடம் கொடுப்பீங்க. நீங்க எதிர்பார்த்த மாதிரி மொக்கை போடுற ப்ரபசர்ஸ்/டீச்சர்ஸ் ஃபிவர்னு இன்னைக்கு லீவ் போட்டிருவாங்க.
ராசியான கலர்: பச்சை நிறமே
ராசியான திசை: ஹேர்பின் பேண்ட்
துலாம் ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு பாவ நாளாக அமையும். சின்ன வயசுல உங்க கிட்ட அடிபட்ட பையன் கனவுல ஹாலிவுட் பட ஏலியன் மாதிரி வந்து பயமுறுத்துவான். பொய் சொல்ல மாட்டேனு நீங்க ஏக்கர் கணக்கா சொன்ன பொய்யெல்லாம் டைனோசரா கனவுல வந்து துரத்த, தமிழ் டப்பிங் ஜுராசிக் பார்க்ல சாம் நெய்ல் மாதிரி ‘அதுங்க நம்மளத் துறத்துதுங்க’ அப்படின்னு சொல்லிட்டு ஓடுவீங்க. ஸோ இனி பொய் சொல்லமாட்டேன்னு பொய் சொல்லாதீங்க.
ராசியான கலர்: ப்ளூ(கு)
ராசியான திசை: கரடுமுறடான திசை
விருச்சிகம் ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு பல்பு நாளாக அமையும். கூலாக போய்கிட்டு இருக்கிற க்ளாஸ் அவர்ஸ்ல குறுக்கே எழுந்து ‘பருப்பு’மாதிரி கேள்வி கேட்டு ‘பல்பு’ வாங்குவீங்க. ப்ரண்ட்ஸ் காமெடி அடிச்சு முடிக்கிறதுக்குள்ள, ‘சுமார் மூஞ்சிக் குமார்/குமாரி’ மாதிரி கொஸ்டின் ரைஸ் பண்ணி பல்புகளை டஜன் கணக்கா பீஸ் பண்ணுவீங்க.
ராசியான கலர்: என்னமோ ஏதோ
ராசியான திசை: மென் அட் ஒர்க்
தனுசு ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு டெஸ்ட்டிங் டே. அதாவது மேஜர் பாணியில சோதனை நாள். சூர்யா படத்துக்கு டிக்கெட் கிடைக்காம பார்த்திபன் படத்துக்குப் போக வேண்டி வரும். 100 ரூபாய் பாக்கெட் மணிக்காக அப்பாவோட, ‘அந்தக் காலத்துல நாங்கெல்லாம்...’ ஒன் அவர் லெக்சர கேட்க வேண்டி வரும். பிரியாணிக்கு ஆசைப்பட்டு புளியோதரை சாப்பிட வேண்டி வரும்.
ராசியான கலர்: கறுப்புதான்
ராசியான திசை: எங்கேயும் எப்போதும்
மகர ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. FBல ஒரே நாள்ல 500 ப்ரெண்ட் ரிகொஸ்ட் வந்து குவியும் (முந்துன நாள் ப்ரைபல்ல இருக்கிற உங்க போட்டோ எடுத்ததாலன்னு மனம் உடைஞ்சிரக் கூடாது). ஐடியா மணியா தீயா வேல செஞ்சு ஷேம்லெஸ் கையா மாறுவீங்க. 5000 ப்ரெண்ட்ஸ் சேர்த்து நீங்க தமிழ்நாட்டின் வி.ஐ.பியா மாறுவீங்க. டிவி பேட்டி
எடுப்பாங்க. மேகஸின்ல அர்டிக்கல் கேப்பாங்க. ‘ஃபேஸ்புக்புராணம்’னு நாவல் எழுதி விருதெல்லாம் வாங்குவீங்க.
ராசியான கலர்: ஒயிட்டு ஒயிட்டு
ராசியான திசை: ஃபேஸ்புக்குப் போற ரூட்டு
கும்ப ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப ராசியான நாள். ‘காலைல சாப்ட இட்லிக்குச் சட்னி சரியில்ல’ன்னு ஃபேஸ் புக்ல மொக்கை ஸ்டேட்டஸ் போட்டாலும். லைக்குஸும் ஷேர்ஸ்ஷும் அள்ளும். என்.டி.ஆர். மாதிரி மிட்டாய் கலர்ல சட்டை போட்டுப் போனாலும், ‘ஹேய் டூயுட் உன் டி-ஸர்ட் மாஸ்’ அப்படினு சொல்வாங்க.
ராசியான கலர்: பஞ்சு மிட்டாய் சட்ட போட்டு...
ராசியான திசை: எல்லா ரூட்டுக்கும் நீதான் தல!
மீனம் ராசி நேயர்ஸ்!
இன்றைய நாள் உங்களுக்கு டெரிபிக்காக இருக்கும். டிவி பார்க் கலாம்னு ஆசையா சேனல் திருப்புனா டி.ஆர். வந்து பரத நாட்டியம் ஆடுவார். நியூஸ் படிக்கலான்னு பேப்பரைத் திறந்த சாம் ஆண்டர்சன் புதுப் படத்துக்கு பூஜை போட்டிருக்கும் விளம்பரம் வந்திருக்கும். பிடிச்ச பிகர்ஸ் மஞ்சள் கலர் பேண்ட், செவப்பு கலர் சட்டை போட்டு வந்து பயமுறுத்துவாங்க.
ராசியான கலர்: டண்டணக்கா டணக்குணக்கா
ராசியான திசை: நீங்க போறதுக்கு எதிர் திசை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago