பட்ஜெட் ஹெட்போன்கள்

By செய்திப்பிரிவு

நீங்கள் தீவிரமான இசைப் பிரியர் என்றால் ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும் ஹெட்போன்களை வைத்து மட்டும் உங்கள் இசை தாகத்தைத் தணிக்க முடியாது. பல்வேறு விதமான ஹெட்போன்கள் அவசியம். அப்படிப்பட்ட ‘இசைத் தீவிரவாதியான’ உங்கள் ரசனைக்காகச் சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ஹெட்போன்களின் லிஸ்ட்...

பனாசோனிக் எர்கோ ஆர்பி-டிசிஎம் 125 (Panasonic Ergo RP-TCM 125)

பனாசோனிக் எர்கோ ஹெட்செட்டின் விலை ரூ. 799. அமேசான் தளத்தில் தற்போது 15 சதவீத தள்ளுபடியில் 679 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எர்கோ கம்ப்ஃபோர்ட் மைக்ரோபோனும், ஆக்டாரிப் ஸ்பீக்கரும் இதன் சிறப்பம்சம்.

சென்ஹைசர் சிஎக்ஸ் 180 (Senheiser CX 180)

சென்ஹைசர் சிஎக்ஸ் 180 சிறந்த ஆடியோ பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் இன்-இயர் ஹெட்போன். இதன் ஃபிங்கர்-கான்ட்ர்ட் டிசைன் பலதரப்பினிரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது 849 ரூபாய்க்குக் கிடைக்கும் சென்ஹைசர் சிஎக்ஸ் 180தான் அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற தளங்களில் அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஹெட்போன்.

கோவான் இஎம்1 (Cowon EM1)

கோவான் இஎம்1 தெளிவான துல்லியமான ஆடியோவை வழங்கக்கூடியது. சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போனின் விலை ரு. 799. இதன் எர்கோனாமிக் டிசைனிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சோனி எம்டிஆர் இசட்எக்ஸ் - 100ஏ

(Sony MDR-ZX-100A)

சோனி எம்டிஆர் இசட்எக்ஸ் - 100ஏயின் ஹெட்பேண்ட் ஸ்டைல், ஆடியோ தரம் மிகவும் ஹிட். 700 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ஹெட்போனில் தடையின்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாட்டு கேட்டு உங்கள் இசை ரசனையைத் தணிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்