பாரிஸ் ஒலிம்பிக் 2024 | நினைவலைகள்

By தொகுப்பு: மிது

# 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில், சுதந்திர இந்தியாவிலிருந்து முதல் முறையாகப் பங்கேற்ற பெண் என்கிற சிறப்பைத் தடகள வீராங்கனை நிலிமா கோஷ் பெற்றார்.

# 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி ஒட்டுமொத்தமாக 38 கோல்களை அடித்தது. எதிர்த்து விளையாடிய எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக கோல் அடிக்கவில்லை. ஒலிம்பிக்கில் இந்தச் சாதனை இன்றுவரை நீடிக்கிறது.

# 1956 ஒலிம்பிக்கில் இந்தியக்கால்பந்து அணி வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து நான்காமிடம் பிடித்தது.

# 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் 400 மீ. தடைத் தாண்டும் ஓட்டப் போட்டியில் நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனை பி.டி. உஷா இழந்தார்.

# 1984 (லாஸ் ஏஞ்சலஸ்), 1988 (சியோல்), 1992 (பார்சிலோனா) ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் எதுவும் பெறவில்லை.

# 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க வறட்சி தீர்ந்தது.

# 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சாதனையைப் படைத்தார்.

# 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றதுதான் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்