செல்போன்கள் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் செய்வதற்கும் தான் என்ற காலம் மலையேறிவிட்டது. இப்போது கம்ப்யூட்டர்களைவிடத் திறமையாகச் செயல்படும் செல்போன்கள் வந்துவிட்டன. அந்த வகையில், உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களால் உங்கள் பயணங்களை எளிமையானதாக அமைத்துக்கொள்ளலாம். பயண விரும்பிகளுக்காகவே ஸ்பெஷலாகச் சில ட்ராவல் ஆப்ஸ் இதோ...
எக்ஸ்இ கரன்சி (xe Currency)
ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பிளாட்ஃபார்மில் செயல்படும் இந்த ஆப்ஸ், வெளிநாட்டு பயணங்களின்போது உங்களுக்கு உற்ற நண்பனாய் உதவும். உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் கரன்சி மதிப்பை இந்த எக்ஸ்இ கரன்சி ஆப்ஸ் உடனடியாகச் சொல்லிவிடும். 180க்கும் மேற்பட்ட கரன்சிகளைப் பற்றி இந்த இலவச ஆப்ஸ் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உலகில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்நிய செலாவணி ஆப்ஸில் இதற்குதான் முதலிடம்.
ஸ்கை ஸ்கேனர் (Sky Scanner)
இருந்த இடத்திலேயே அலட்டிக்கொள்ளாமல் வேலையை முடிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்குத்தான் இந்த ஸ்கை ஸ்கேனர் ஆப்ஸ். உலகில் உள்ள ஆயிரக்கணக்கான விமான சேவை நிறுவனங்களின் விமானங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் இந்த ஆப்ஸ் உதவியால் நீங்கள் விரல் நுனியில் வைத்திருக்கலாம். உங்கள் விமான டிக்கெட்களை ஒப்பிட்டுப்பார்த்து நீங்கள் இந்த ஆப்ஸ் வாயிலாகவே டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.
வேர்ட் லென்ஸ் டிரான்ஸ்லெட்டர் (Word Lens Translator)
மொழி தெரியாமல் ஒரு நாட்டிற்கு எப்படிப் பயணம் செய்வது என்று இனிமேல் பயப்பட வேண்டாம். வேர்ட் லென்ஸ் டிரான்ஸ்லெட்டர் ஆப்ஸ் உதவியால் உலகின் எந்த நாட்டுக்கும் மொழிப் பிரச்சினை இல்லாமல் ஜாலியாகப் பயணம் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் ஸ்மார்ட் போன் கேமராவை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய அறிவிப்பின் அருகே எடுத்துச் செல்ல வேண்டியதுதான். இந்த ஆப்ஸ் அதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிடும். அதிகமாகப் பயணம் செய்பவர்களுக்கு ஏற்றது இது. இதன் மற்றொரு ஸ்பெஷாலிட்டி இன்டர்நெட் கனெக் ஷன் இல்லாமல் இயங்குவது.
லேட்ரூம்ஸ்.காம் (Laterooms.com)
பயண ஏற்பாடுகளைக் கடைசி நிமிடத்தில் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த லேட்ரூம்ஸ்.காம் ஆப்ஸ் உங்களுக்கானதுதான். உங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு ஒரு நாளுக்கு முன்னர் இந்த ஆப்ஸ் மூலம் ஹோட்டல் ரூம்களை நிறைய சலுகைகளுடன் புக் செய்யலாம். கூகுள் மேப்களுடன் இணைந்து செயல்படுமாறு இது வடிவமைக்கப்பட்டிருப்பதால் எளிமையாக நீங்கள் தங்கும் இடத்தைத் தேர்வு செய்யலாம். உலகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் இதன் மூலம் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒனாவோ எக்ஸ்டென்ட் (Onavo Extend)
பயணங்களின்போது இன்டர்நெட் ரோமிங் கட்டணம் பற்றி இனிக் கவலைப்பட வேண்டாம். ஒனாவோ எக்ஸ்டென்ட் ஆப்ஸ் உங்கள் பயணங்களின் போது இன்ட்ர்நெட் டேட்டா பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் எப்போதும்போலவே பேஸ்புக், சாட்டிங் என அனைத்தையும் தொடரலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago