உங்கள் ஓட்டு யாருக்கு? ஃபேஸ்புக் vs ட்விட்டர்

By குமார்

கலகலவென எப்போதும் மொக்கை போடும் நண்பர்களும் இருப்பார்கள். எஸ்.எம்.எஸ் மாதிரி ஷார்ட் அண்ட் சுவீட்டாகப் பேசும் நண்பர்களும் இருப்பார்கள். அது போல் தான் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும். ஃபேஸ்புக்கிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் உங்கள் டியர் ப்ரெண்ட் மாதிரி கேட்டுக்கொள்ளும். ட்விட்டரில் எதைச் சொன்னாலும் 140 எழுத்துகளுக்குள் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் கேங் நண்பர்களிடம் இருப்பதுபோல் சின்னச் சின்ன வேறுபாடுகள் உண்டு. இதில் இது பெருசா, அது பெருசா? எனக் கேட்டோம். ஃபேஸ்புக் ஆதரவாளரும் ட்விட்டர் ஆதரவாளரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கினார்கள்.

மதுமிதா

என்னொட ஓட்டு ட்விட்டருக்குத்தான். ஏன்னா மனசுல நினைக்கிறத சொல்ல முடியுது. அதாவது க்ளோஸ் ப்ரெண்ட் கிட்ட பகிர்ந்துகொள்கிற மாதிரியான உணர்வைத் தருது. ஆனால் ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடும்போது ஓபன் ஸ்பேஸ்ல நின்னு பேசுற மாதிரி இருக்கும். நான் ஸ்ரேயா கோஷலோட பெரிய ஃபேன். ட்விட்டரில் இருக்கிறதால அவங்க ஸ்டேட்டஸைப் படிக்க முடியுது. அதைப் படிக்கிறபோது அவங்ககூடயே ஃப்ரெண்ட் ஆன மாதிரி இருக்குது.

ஸ்ரீகாந்த் கிருஷ்ணா

ட்விட்டருக்கு முன்னாடியே ஃபேஸ்புக் வந்துட்டாலும் இன்றைக்கு ட்விட்டர்தான் வளர்ச்சியில முதல்ல இருக்கு. உலகத்தோட எந்த மூலையில் என்ன நடந்தாலும் ட்விட்டர் மூலம் தெரிஞ்சுக்க முடியுது. ஆனா ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பெரும்பாலும் ஃபேமிலி, ப்ரெண்ட்ஸ்க்குள்ளேயே முடிஞ்சு போயிரும். அதுபோல ஃபேஸ்புக்கில் பார்த்தீங்கன்னா பக்கம் பக்கமாக எழுதுவாங்க. ஆனால் ட்விட்டரில் இன்றைக்குள்ள தேவைக்கு ஏற்றபடி சிம்பிளாத்தான் எழுத முடியும். அதுனாலதான் சொல்றேன் ட்விட்டர்தான் இன்றைக்குள்ள உலகத்திற்கு ஏற்ற சோஷியல் நெட்வொர்க்.

தருண் குமார்

ட்விட்டரில் ஃபேக் (Fake) அக்கவுண்ட் கிடையாது. அதுனால நீங்க நம்பி பிரபலங்களோட ட்விட்டரை ஃபாலோ செய்யலாம். அதுபோல 140 எழுத்துக்குள்ள ட்வீட் பண்ணனும் அப்படிங்கிறதால சும்மா கதை அடிக்காமல் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்வாங்க. நொடிக்கு நொடி நடக்கிற உலக விஷயங்களைத் தெரிஞ்சுக்க, ட்விட்டர்தான் ஃபெஸ்ட்.

லஷ்மி ப்ரியா

ஃபேஸ்புக் பற்றி இந்தப் பசங்க சொல்றது மட்டும் உண்மையில்ல. ஃபேஸ்புக்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. ட்விட்டரைப் பொறுத்தவரை அது பிரபலங்களுக்கானதுதான். அவுங்க போடுற ஸ்டேட்ஸ், போட்டோ எல்லாம் ஹிட் ஆகும். ஆனால் ஃபேஸ்புக்ல பார்த்தீங்கன்னா, நம்மள மாதிரி சாதாரணமானவங்க போடுற கமெண்ட், போட்டோக்களும்கூட ஹிட் ஆகும். அதுபோல ஃபேஸ்புக் நம்ம திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல மேடை. முகம் தெரியாதவங்ககூட நம்மைப் பாராட்டும்போது உற்சாகமாக இருக்கும். நம்மைச் சுத்தி உள்ளவங்கள பத்தி தெரிஞ்சுக்கவும் ஃபேஸ்புக்தான் சிறந்த மீடியம்.

மனோஜ்குமார்

இருக்குற சோஷியல் நெட்வொர்க்ல ஃபேஸ்புக்தான் பெஸ்ட்ன்னு சொல்வேன். ப்ரெண்ட்ஸ்கூட பேசுறதுக்கு, அவுங்களப் பற்றிப் புரிஞ்சுக்க ஃபேஸ்புக்தான் சரியான வழி. அது மட்டுமில்லாம இப்ப பல கம்பெனிகளுக்கும் பிஸ்னஸுக்கும் ஃபேஸ்புக்கதான் பயன்படுத்துறாங்க. நம்ம உணர்வுகள உடனே ஈஸியாக ஃபேஸ்புக்ல வெளிப்படுத்த முடியுது. ஆரம்பிச்ச ஆறு வருஷத்துல 1 பில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறத பார்த்தாலே தெரியும் ஃபேஸ்புக் பவர் என்னான்னு.

ஷரண்.ஜி

ஃபேஸ்புக் மாடர்ன் வேர்ல்டோட தொடக்கம்னு சொல்லுவேன். ஃபேஸ்புக் என்றால் லைக், ஷேர் மட்டும் கிடையாது. அதுல பிரயோஜனமான நிறைய விஷயங்கள் இருக்கு. என்னோட திறமையெல்லாம் ஃபேஸ்புக் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறேன். அதுனால நிறைய பாராட்டுகள் வந்துச்சு. ஃபேஸ்புக் மூலமா நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. ஃபேஸ்புக் என்றால் வெட்டி வேலை மட்டுமில்ல. நம்ம கேரியருக்கும் (career) அது உதவும்.

ஆர். கார்த்திகா உதவியுடன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்