உ
ங்கள் காதலரை பெற்றோருக்கு எப்படி அறிமுகம் செய்துவைப்பது என யோசிக்கிறீர்களா? அப்படி யோசிக்கத் தொடங்கிவிட்டாலே உங்கள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நீங்கள் தயாராகிவீட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், காதலரை அறிமுகம் செய்து வைக்கும்போது பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் பெரும்பாலானோருக்கு இருக்கும். இரு தரப்பும் சந்திக்கும்போது சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றினாலே அந்தச் சூழ்நிலையைச் சமாளித்துவிடலாம். காதலரைப் பெற்றோரிடம் அறிமுகம் செய்துவைப்பதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?
சரியான நேரம்தானா?
இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்த பிறகுதான் உங்கள் காதலரைப் பெற்றோரிடம் அறிமுகம் செய்துவைக்க வேண்டும். உங்கள் காதலர் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கத் தகுதியானவர்தானா, தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த நபரின் முகத்தில்தான் விழிக்க விரும்புகிறீர்களா, இந்த நீண்ட கால உறவின் நன்மை, தீமைகள் எவை? இப்படி உங்கள் ரிலேஷன்ஷிப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்த பிறகும், உங்கள் காதலர் சரியான நபர்தான் என்று தோன்றினால், நிச்சயமாக நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.
தயார்படுத்துங்கள்
சந்திப்புக்கு முன்னதாகவே உங்கள் காதலரைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் தெளிவாகப் பேசிவிடுங்கள். எந்த அளவுக்கு உங்கள் காதலரைப் பற்றித் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். உங்கள் காதலரின் வேலை, குடும்பப் பின்னணி என உங்கள் பெற்றோர் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகவும் நேர்மையாகவும் பதிலளியுங்கள்.
சந்திப்புக்கு முன்னர் உங்கள் பெற்றோரின் குணநலன்கள், விருப்பு, வெறுப்புகள் போன்றவற்றை உங்கள் காதலருக்கும் தெரிவித்து விடுங்கள். இதனால் சந்திப்பின்போது பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உங்கள் பெற்றோருக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களைப் பற்றி உங்கள் காதலருக்குத் தெரிவிப்பதால் அவர்களின் உரையாடலில் சுவாரசியம் சேர்க்கலாம்.
எந்த இடம்?
உங்கள் பெற்றோர், காதலர் என இரு தரப்புக்கும் ஏற்ற இடத்தை முடிவுசெய்யுங்கள். அந்த இடம் எல்லாவிதத்திலும் சந்திப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டிலேயே சந்திப்பதற்கு உங்கள் காதலர் ஒப்புக்கொண்டால் அந்த இடத்தையே முடிவு செய்து விடுங்கள். ஒருவேளை, பொது இடத்தில் சந்திக்க விரும்பினால் ஏதாவது ஒரு நல்ல ரெஸ்டாரண்டைத் தேர்ந்தெடுங்கள்.
ஆடை, அலங்காரம்
ஆள் பாதி, ஆடை பாதி என்பதை மறக்க வேண்டாம். உங்கள் ஆடை ஸ்டைல்தான் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் முதல் அம்சம். அதனால் உங்கள் காதலரின் ஆடை விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆடை, அலங்காரமாக இருந்தாலும் அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகமான அலங்காரத்தைத் தவிர்த்துவிடுங்கள். ஆண்கள் ஷார்ட்ஸ், பேகி ஜீன்ஸ், ஸ்லிப்பர்களைத் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை, ‘ஃபார்மல்’ ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
பரிசு முக்கியம்
உங்கள் காதலரின் பெற்றோரைச் சந்திப்பதற்கு முன் நிச்சயமாக ஒரு சிறப்பான பரிசுப் பொருளை வாங்கி வைத்துவிடுங்கள். இந்த விஷயம் நீங்கள் காதலில் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். ஓர் அழகான பூங்கொத்து, பழைய பாடல்களின் இசை ஆல்பம், சாக்லெட்டுகள் என அந்தப் பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் சந்திக்கும் இடம் வீடாக இருந்தாலும் சரி, ரெஸ்டாரண்டாக இருந்தாலும் சரி, கட்டாயம் பரிசுப் பொருளைக் கொடுக்க மறந்துவிடக் கூடாது.
சந்திப்புக்கான தருணம்
எல்லாத் தயாரிப்பு முயற்சிகளும் முடிந்து, உங்கள் காதலரின் பெற்றோரைச் சந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வாங்கி வந்த பரிசுப் பொருளை இன்முகத்துடன் கொடுத்து உங்களை அறிமுகம் செய்துகொள்ளலாம். உரையாடலை ஏதாவது பொதுவான விஷயத்திலிருந்து தொடங்கலாம். உங்கள் பெற்றோர் கேட்கக்கூடிய கடுமையான கேள்விகளைப் பற்றி முன்கூட்டியே காதலரிடம் தெரியப்படுத்திவிடுங்கள். இதனால், கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது உங்கள் காதலருக்கு ஏற்படும் தடுமாற்றத்தைத் தவிர்க்கலாம். உரையாடல் மோசமான திசையில் சென்றாலும் இருதரப்பில் யாரையும் தனிப்பட்ட முறையில் ஆதரிக்காதீர்கள். அவர்களை முழுமையாகப் பேச விட்டுவிடுங்கள்.
உங்கள் பெற்றோரிடம் உங்கள் காதலரை அறிமுகம் செய்தாகிவிட்டது. உங்கள் ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதைப் பெற்றோருக்கு தெரியப்படுத்திவிட்டீர்கள். இதற்குமேல், முடிவெடுக்க வேண்டியது உங்கள் பெற்றோர்தான். முடிவெடுக்க போதிய அவகாசத்தை அவர்களுக்குக் கொடுங்கள். பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.
உங்கள் காதலர் மீது உங்களுக்கு ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் பெற்றோருக்கும் ஏற்பட்டால் நிச்சயமாக உங்கள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு அவர்களே எடுத்துச்செல்வார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago