புதிய அறிமுகங்களால் ஸ்மார்ட் போன் துறையில் போட்டி அதிகமாகி, சந்தையும் பரந்து விரியத் தொடங்கியிருக்கிறது. ஸ்மார்ட் போன்கள் போலவே இப்போது ஸ்மார்ட் வாட்ச் சந்தையும் புதிய அறிமுகங்களால் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது. இணையவாசிகள் நிதி திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் அறிமுகமான பெப்பிள் ஸ்மார்ட் வாட்சைத் தொடர்ந்து இந்தச் சந்தையில் பெரிய நிறுவனங்களும் கால் பதித்து வருகின்றன.
ஜிவாட்ச் 2
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சமீபத்திய தகவல் எல்.ஜி. நிறுவனம் ஜி வாட்ச்2 எனும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே அறிமுகமான ஜிவாட்சின் மேம்பட்ட வடிவாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் பெர்லினில் நடைபெறும் ஐ.எப்.ஏ தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாட்சில் கூகுளின் குரல் உணரும் வசதியும் இணைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் டிஸ்பிளேவும் மேம்பட்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனமும் அடுத்த மாதம் புதிய அறிமுகங்களுக்குத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது. 2 புதிய ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சும் இதில் அடங்கும். இந்த மோட்டோ 360 ஆண்ட்ராய்டு வியர் ஸ்மார்ட் வாட்ச் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அதன் புகைப்படம் மற்றும் விலைவிவரம் மின்வணிக தளம் மூலம் வெளியாகி விட்டது.
உடனே அந்த இணையப் பக்கம் நீக்கப்பட்டு விட்டாலும் விலை ( 249.99 டாலர்) மற்றும் வாட்ச் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கசிந்துவிட்டன. மணிக்கட்டை அசைப்பது மூலம் போனில் அழைப்பது யார் அல்லது என்ன மெயில் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இவை தவிர ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் என்று நம்பப்படும் ஐவாட்ச் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஜிவாட்ச் 2
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சமீபத்திய தகவல் எல்.ஜி. நிறுவனம் ஜி வாட்ச்2 எனும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே அறிமுகமான ஜிவாட்சின் மேம்பட்ட வடிவாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் பெர்லினில் நடைபெறும் ஐ.எப்.ஏ தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாட்சில் கூகுளின் குரல் உணரும் வசதியும் இணைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் டிஸ்பிளேவும் மேம்பட்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனமும் அடுத்த மாதம் புதிய அறிமுகங்களுக்குத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது. 2 புதிய ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சும் இதில் அடங்கும். இந்த மோட்டோ 360 ஆண்ட்ராய்டு வியர் ஸ்மார்ட் வாட்ச் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அதன் புகைப்படம் மற்றும் விலைவிவரம் மின்வணிக தளம் மூலம் வெளியாகி விட்டது.
உடனே அந்த இணையப் பக்கம் நீக்கப்பட்டு விட்டாலும் விலை ( 249.99 டாலர்) மற்றும் வாட்ச் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கசிந்துவிட்டன. மணிக்கட்டை அசைப்பது மூலம் போனில் அழைப்பது யார் அல்லது என்ன மெயில் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இவை தவிர ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் என்று நம்பப்படும் ஐவாட்ச் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஐபோன் 6 எல்
இதே போல ஆப்பிளின் அடுத்த ஐபோன் பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் 9- ம் தேதி வெளியாகலாம் எனச் சொல்லப்படும் ஐபோன் இரு வடிவங்களில் இரு அளவுகளில் வெளியாகும் என்பதைப் பல தொழில்நுட்ப தளங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த போன்களின் ஒன்று ஐபோன் 6 என்றும் மற்றொன்று ஐபோன் 6 எல் என்றும் குறிப்பிடப்பட இருப்பதாக ஆப்பிள் டெய்லி எனும் தளம் தெரிவிக்கிறது.
இந்த போன்கள் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் கொண்டதாக இருக்கும் என்றும் அந்தத் தளம் தெரிவிக்கிறது. ஐபோன் 6 தொடர்பாகக் கசிந்துள்ள புதிய புகைப்படம் இதன் பேட்டரியும் சற்றுப் பெரிதாக இருக்கும் என உணர்த்துகிறது. ஆக, டிஸ்பிளேவும் பெரிதாகத் தான் இருக்கும். ஆப்பிள் அப்டேட்களுக்குப் புகழ்பெற்ற பிரெஞ்சு வலைப்பதிவு மூலம் இந்தப் புகைப்படம் கசிந்துள்ளது.
இந்தத் தகவல்களை எல்லாம் மீறி ஆப்பிள் ஐபோன் 6-ல் வியக்க வைக்குமா? என்று பார்க்கலாம்.
குறைந்த விலை போன்கள்
புதிய அறிமுகங்கள் பற்றிய பரபரப்பு ஒரு புறம் இருக்க, ஸ்மார்ட் போன் சந்தையில் குறைந்த விலையிலான போன்களே செல்வாக்கு பெற்று வருவதாக ஐ.டி.சி. (இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் ) தெரிவிக்கிறது. இந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கைப் படி மார்ச் முதல் ஜூன் வரையான காலத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் உலக ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆண்ட்ராய்டு போன்கள் 84.7 சதவீதமாக இருந்திருக்கிறது. இதற்குக் காரணம் 200 டாலருக்கும் கீழான குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை போன்கள் ஆண்ட்ராய்டு போன்களில் 58.6 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் முன்னிலை வகிப்பதாகவும் மைக்ரோமேக்ஸ் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரும் மாதங்களில் முன்னணி ஐந்து நிறுவனங்களிடையே இடங்கள் மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான ஒரு ஆய்வு சாம்சங்கை மைக்ரோமேக்ஸ் முந்தி விட்டதாகத் தெரிவித்தது.
நோபோன்
ஐபோன் போன்ற போன்கள் இருக்கட்டும்; ,நோபோன் பற்றித் தெரியுமா? நீர்புகாதத் தன்மை கொண்டது, என்.எஸ்.ஏ. போன்ற அமைப்புகள் உளவு பார்க்க முடியாதது என்றெல்லாம் இந்த போன் பற்றிச் சொல்லப்படுகிறது. இதில் வை-ஃபையும் கிடையாது. புளுடூத்தும் இல்லை. பேட்டரியும் கிடையாது . பிறகு எப்படிப் பேசுவது? இந்த போன் பேசுவதற்கு அல்ல; இந்த போனைக் கையில் வைத்துக்கொண்டால் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் உணர்வைப் பெறலாம்.
அதே நேரத்தில் போனை விடச் சுற்றிலும் உள்ளவர்களோடு அதிகமான முறையில் தொடர்பு கொள்ளலாம் என்று நோபோனுக்கான இணையதளம் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்மோன் மோகத்துக்கு அழகான விமர்சனமாக அமைந்துள்ள இந்த நோபோன் நிஜத் தயாரிப்பா அல்லது முழுவதும் நையாண்டியா எனத்தெரியவில்லை . ஆனால் நோபோன் தளத்தில் இதன் சிறப்பம்சங்கள்(!) மற்றும் செயல்பாடு பற்றிய சுவாரஸ்யமான வீடியோவைப் பார்க்கலம். >(http://www.nophone.eu/).
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago