க
ல்லூரி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. விடுமுறையை எப்படிக் கழிப்பது, சுற்றுலாவுக்கு எங்கே செல்வது போன்ற கேள்விகளுக்கு மத்தியில் தொழில்முறை வாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்பு பற்றிய கேள்விகளும் மாணவர்களிடையே எழும். இந்த இரண்டுக்கும் உதவும் வகையில் விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க ‘இண்டெர்ன்ஷிப்’ எனப்படும் பயிற்சி நிலைப் பணி வாய்ப்புகள் அமைகின்றன.
மாணவர்கள் தங்கள் துறையில் பணி அனுபவம் பெறுவதற்குத் தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலம் பயிற்சி நிலைப் பணியாளர்களாகப் பணியாற்ற வாய்ப்பளிப்பது வழக்கம். இந்த வகைப் பயிற்சி நிலைப் பணிகளே ‘இண்டெர்ன்ஷிப்’. இருவழிப் போக்குவரத்து என்று சொல்வதைப் போல, தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் என இருதரப்புக்குமே உதவக் கூடியது இது.
உங்களுக்கு ஏற்ற பயிற்சி நிலை வாய்ப்புகளைத் தெரிந்துகொள்வது எப்படி எனும் கேள்வி உங்கள் மனதில் எழுகிறது என்றால், அதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில தளங்கள்:
இண்டெர்ன்ஷாலா
பயிற்சி நிலைப் பணி வாய்ப்புகளை வழங்கும் தொழில் நிறுவனங்களை எளிதாகக் கண்டறிய வழி செய்கிறது இந்த இணையதளம். பணி வாய்ப்புகளை இரண்டு விதமாகத் தேடலாம். முதலில் மாணவர்கள் தாங்கள் எந்த நகரில் பயிற்சி நிலைப் பணிகளைப் பெற விரும்புகின்றனரோ அந்த நகரங்களைக் கண்டறிந்து தேடலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக, மாணவர்கள் தாங்கள் பணியாற்ற விரும்பும் துறைகளின் அடிப்படையிலும் வாய்ப்புகளைத் தேடலாம். பொறியியல், அறிவியல், வடிவமைப்பு, மேலாண்மை உள்ளிட்ட துறைகளிலிருந்து விரும்பிய துறையைத் தேர்வுசெய்து வாய்ப்புகளைத் தேடலாம்.
இவை தவிர, முதன்மையாகத் தேடல் வசதியும் இருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த பணி அல்லது துறையைத் தேடலாம். உதாரணத்துக்கு ‘ஆண்ட்ராய்டு டெவலப்பர்’ எனத் தேடினால் எந்தெந்த நிறுவனத்தில் அத்தகைய பயிற்சிப் பணி வாய்ப்பு இருக்கிறது எனும் பட்டியலைப் பார்க்கலாம். பயிற்சிக் காலம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களையும் அறியலாம்.
கோடைக் காலம் என்பதால், முகப்புப் பக்கத்திலேயே பலவிதமான கோடைக் கால முகாம்கள் பற்றிய தகவல்களையும் இந்தத் தளம் தெரிவிக்கிறது. இந்த இணையதளமே பலவிதமான பயிற்சிகளையும் அளிக்கிறது. வீட்டிலிருந்தே மேற்கொள்ளக்கூடிய பயிற்சி வாய்ப்புகளும் இருக்கின்றன. சர்வதேசப் பயிற்சி வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தத் தளத்தில் பதிவுசெய்துகொண்டால் விரும்பிய துறையில் புதிய பயிற்சி வாய்ப்புகள் பற்றிய தகவலை இமெயிலில் பெறலாம். https://internshala.com/
லெட்ஸ் இண்டெர்ன்
இந்தத் தளத்திலும் பயிற்சி வாய்ப்புகளைப் பணி வகை அல்லது பணிபுரிய விரும்பும் நகரங்களின் அடிப்படையில் தேடலாம். பொறியியல், மார்க்கெட்டிங், மீடியா, வடிவமைப்பு, நிதி, கல்வி, ஐ.டி. எனப் பல்வேறு துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. விரும்பிய துறையைத் தேர்வுசெய்து அதில் உள்ள வாய்ப்புகளை அறியலாம். அதற்கு அருகிலேயே அவற்றுக்கு விண்ணப்பிக்கவும் செய்யலாம்.
நகரங்களைத் தேர்வுசெய்தும் இதே முறையில் தேடலாம். பணி வாய்ப்பு அறிவிப்பு எப்போது வெளியானது என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. இவை தவிர நேரடியாகத் தேடல் கட்டத்தைப் பயன்படுத்தியும் தேடலாம். உதாரணமாக, மீடியா எனத் தேடினால் சமூக ஊடக மார்க்கெட்டிங் உள்ளிட்ட வாய்ப்புகள் வரிசையாக வருகின்றன.
இந்தத் தளத்தின் மற்றொரு சிறப்பம்சம், பயிற்சிப் பணி வாய்ப்புகள் தொடர்பான வலைப் பதிவு. இந்தப் பகுதியில் பயிற்சி நிலைப் பணிகள் குறித்த வழிகாட்டுதல் கட்டுரைகளையும் வாசிக்கலாம். பயிற்சி நிலைப் பணிகளின் முக்கியத்துவம், தேவையான திறன்கள் ஆகிய விஷயங்களைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளும் இருக்கின்றன. https://www.letsintern.com/
ஹலோ இண்டெர்ன்
இந்தத் தளம் எளிமையான வடிவமைப்புடன் பயிற்சிப் பணி வாய்ப்புகளை எளிதாகத் தேட வழி செய்கிறது. பயிற்சிப் பணிகளை துறைகள் அல்லது நகரங்களின் அடிப்படையில் தேடலாம். வர்த்தக நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வாய்ப்புகளைத் தேர்வு செய்யலாம். சர்வதேச அளவிலான வாய்ப்புகளையும் நாடலாம். அண்மையில் வெளியான வாய்ப்புகள், அதிகம் முன்னிலை பெறும் வாய்ப்புகள் என்றும் தனியே பயிற்சிப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் வழங்கும் வாய்ப்பும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இந்தத் தளமே பல கூட்டு முயற்சி வாய்ப்புகளையும் அளிக்கிறது. (https://www.hellointern.com/)
டுவெண்டி19
பயிற்சி நிலைப் பணி வாய்ப்புகளுக்கான வலைவாசல்போல அமைந்துள்ளது இந்த இணையதளம். பயிற்சி நிலைப் பணி வாய்ப்புகளுடன் இணையப் பயிற்சி வாய்ப்புகள், கல்லூரி நிகழ்வுகளையும் இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது. கல்லூரி நிகழ்வுகள் பகுதியிலேயே நகரங்கள், படிப்பு வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாய்ப்புகளைத் தேடலாம். நிறுவனங்களுக்கான பகுதியும் இருக்கிறது. தனியே தேடல் வசதியும் உண்டு. பயிற்சி நிலைப் பணிகள் தொடர்பான வலைப் பதிவும் இருக்கிறது. இதில் வழிகாட்டுதல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. http://www.twenty19.com/
இந்தப் பட்டியலில் மேக் இண்டெர்ன் (http://www.makeintern.com/), இண்டெர்ண்டெஸ்க் (http://www.interndesk.com/), இண்டெர்ன்தியரி (https://www.interntheory.com/) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இண்டெர்ன் பீல் (http://internfeel.com/) தளத்தைக் குறித்து வைத்துக்கொள்வதும் நல்லது. இந்தத் தளம் பயிற்சி நிலைப் பணியைப் பெற்ற மாணவர்கள் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வழி செய்கிறது. இந்த அனுபவக் குறிப்புகளை வாசிப்பதன் மூலம் பயிற்சி நிலைப் பணி அளிக்கக்கூடிய பயன்களை நேரடியாக அறியலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago