கவர்மெண்ட் ஜாப் பற்றி என்ன நினைக்கிறீங்க? கவர்மெண்ட் ஜாப் கிடைப்பது லேசுப்பட்ட விஷயமல்ல. அதுக்கு நாம ரொம்ப மெனக்கட வேண்டும். அப்ஜெக்டிவ் டைப் எக்ஸாம் வைப்பாங்க. ரவுண்ட் ரவுண்டான வட்டத்தை மார்க் பண்ணி, பாஸ் பண்ணுவது ரொம்ப கஷ்டம் பாஸ். இப்படியெல்லாம் நினைப்பீங்க.
இந்த மாதிரி எக்ஸாமில் பொதுவாக நமது ப்ரைன் பவர சோதிக்க ப்ரில்லியன்டா கொஸ்டின் பண்ணுவாங்க. ‘சூரியனின் கருந்துளையில் என்ன மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?’ என்பது போன்ற நமது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தேடித் தேடிக் கேட்டிருப்பாங்க. நாம என்னதான் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுத் தேடினாலும் புத்தகங்களில் சாதாரணமாக அகப்படாத
தகவலை எல்லாம் அடிப்படையாக வைத்து தருமி போல் கேள்விகளாகக் கேப்பாங்க. பட்டதாரிகளை இப்படிப் பாடாய்ப்படுத்துவதில் ஆபீஸர்மாருக்கு அல்ப
சந்தோஷம். இப்படித்தான் நமது எண்ணம் வளையம் வளையமாய்ச் சுழலும்.
ஆனால் இப்படி எல்லாம் இளைஞர்களைச் சோதிக்க விரும்பவில்லை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன். அதன் கேரளப் பிரிவு சமீபத்தில் நடத்திய ஒரு தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு கொஸ்டின் செம க்யூட். யங்க்ஸ்டரின் ஐக்யூவை அங்குலம் அங்குலமாக அலசும் கொஸ்டின் அது. ஆனால் நம்ம சொஸைட்டிக்கு நல்ல விஷயமே பிடிக்காதே. அந்த கொஸ்டின கேட்ட தேர்வாணையத்தை மக்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இணையதளம் போன்றவற்றின் மூலமா பிடி பிடின்னு பிடிச்சிட்டாங்க. வேறு வழியில்லாம தேர்வாணையமும் அந்த நல்ல கொஸ்டினக் கேட்டது தங்கள் தவறுன்னு சொல்ல வேண்டியதாப் போச்சு.
எல்லாம் சரிதாம்... பா கொஸ்டினச் சொல்லுன்னு சொல்றீங்களா? ரெகுலரா வெப்பயே சுத்தி வர்றவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவர்கள், அந்த கொஸ்டினின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பாருங்க:
கீழே கொடுக்கப்பட்டுள்ள நடிகைகளில் மிக உயரமானவர் யார்?
அ) ஹ்யூமா குரேஷி
ஆ) காத்ரினா கைப்
இ) தீபிகா படுகோன்
ஈ) ப்ரீத்தி ஜிந்தா
வாரே வாவ். பார்க்க ஈஸியாக இருந்தாலும் இது ஒரு டஃப் கொஸ்டின்தான். கிராஜுவேட்ஸ் கொஞ்சம் டீப்பா திங் பண்ணினா ஆன்சரக் கண்டுபிடிச்சிரலாம். இதே கொஸ்டின் பேப்பரில் கேட்கப்பட்டிருந்த மற்றொரு கொஸ்டின், லவ்வர்ஸ் டே எப்போது செலிபரேட் பண்ணப்படுகிறது என்பது. இந்த எக்ஸாம எழுதியிருந்தா ஈஸியா பாஸ் பண்ணியிருக்கலாமே, வட போச்சேன்னு வருத்தப்படுறீங்களா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago