தினமும் பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் பயணத்தில் எல்லாரும் குனிந்த தலையாகத் திறன்பேசிகளை (ஸ்மார்ட் போன்) நோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்று எல்லாருமே பயணங்களில் வயது வித்தியாசமின்றி திறன்பேசியோடு பிஸியாகிவிடுகிறோம்.
பயணத்தில் ஒரு பொருளோடு லயித்து, வேறோர் உலகத்துக்குச் செல்லும்போது இயல்பாகவே நம் ஞாபகத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுகிறது. திறன்பேசியில் மூழ்கிவிட்டு, திடீரென ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது அல்லவா? அந்த நேரத்தில் ஒரு சிறு குழப்பமும் ஏற்படுகிறதல்லவா? அதனால் என்ன? கூகுள் ‘லொகேஷன் மேப்’பைப் பார்த்துவிட்டால் போதும் என்று நீங்கள் சொல்வீர்களானால், எப்போதுதான் திறன்பேசியிலிருந்து விடுபடுவீர்கள்?
நம் அருகில் அமர்ந்து பயணிக்கும் புதியவர்கள், ‘அடுத்த ஸ்டாப் என்ன?’ என்று கேட்டுவிட்டால் திடீரென என்ன சொல்வதென்றே தெரியாமல் தடுமாறிவிடுகிறோம். கைபேசி மட்டுமே உலகம் அல்ல. பயணத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்வும் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்கக்கூடியதுதான்.
திறன்பேசியைத் தாண்டிப் பயணங்களின்போது சக மனிதர்களைக் கொஞ்சம் கவனியுங்கள். பயணத்தில் வரும் வழியில் நடக்கும் நிகழ்வுகளையும் உற்று நோக்குங்கள். அவை எல்லாம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அதை விடுத்து, கவனத்தைத் திசை திருப்பிக் கட்டளைகளுக்குப் பழக்கப்பட்ட ரோபாட்
மாதிரிப் பயணிப்பதால் என்ன பயன்?
உதட்டில் முளைத்த கார்ட்டூன்! - லண்டனைச் சேர்ந்த 30 வயதான மேக்கப் கலை நிபுணர் லோரா ஜென்கின் மேக்கப்பில் ஒரு புதுமை விரும்பி. மேக்கப்பில் எவ்வளவு ஆர்வமோ அதே அளவுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மீதும் அவருக்கு அதிக ஆர்வம். இந்த இரண்டையும் ஒன்றாக்கி, புதுமையை உண்டாக்க நினைத்தார் அவர். அந்தச் சிந்தனையில் உதித்ததுதான் ‘கார்ட்டூன் லிப் ஆர்ட்’.
உதடுகளில் விதவிதமான சாயத்தைப் பூசும் பெண்களுக்கு மத்தியில், உதட்டில் அழகான கார்ட்டூன்களை வரைந்து அசத்திவருகிறார் இவர். மிக்கி மவுஸ், அலாவுதீன், ப்ளூ டோ என இவருடைய உதட்டில் உருவான கார்ட்டூன்கள் ஏராளம். உதட்டில் அவர் வரைந்த கார்ட்டூன்களையும் அதை உதட்டில் வரைவதையும், யூடியூபிலும் இன்ஸ்டகிராமிலும் பகிர்ந்துவருகிறார். இவரது லிப் ஆர்ட் உலக அளவில் பிரபலமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் இவருடைய வீடியோக்கள் லைக்ஸைக் குவிக்கின்றன.
ரயில் பித்தர்: ரயிலில் பயணம் செய்ய விரும்பலாம். ஆனால், ரயிலிலேயே வாழ்க்கையை நகர்த்த முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த 18 வயது இளைஞர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரயிலிலேயே வாழ்க்கையைக் கழித்துவருகிறார் இவர்.
லாஸ் ஸ்டோலி என்கிற அந்த இளைஞருக்கு 15 வயது ஆனபோது ரயிலில் வாழ வேண்டும் என ஆசை வந்துள்ளது. ஆசை வந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். ஆனால், பெற்றோருக்குச் சுத்தமாக இதில் விருப்பமில்லை. ஸ்டோலியின் தொடர் பிடிவாதத்தால் ஒருகட்டத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து ரயிலில் வாழ்க்கைப் பயணத்தை ஸ்டோலி தொடங்கினார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முதல் வகுப்பு பெட்டியில் பயணிக்கத் தொடங்கிய இவர், தினசரி சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் ரயிலில் கழித்துவருகிறார். தினமும் விரும்பும் இடத்துக்கு ரயிலில் சென்றுவருகிறார். சாப்பாடு, தூக்கம் என எல்லாமே ரயிலில்தான்.
தினமும் பயணம் செய்ய அதிக செலவு ஆனபோதும். தன்னுடைய முயற்சியை அவர் கைவிடவில்லை. இதற்காகவே ஜெர்மனி ரயில்வே வழங்கும் வருடாந்திர ரயில் டிக்கெட்டை வாங்கி வைத்திருக்கிறார் ஸ்டோலி. இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி ஓராண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் முதல் வகுப்பில் எங்கும் பயணிக்கலாம்.
இதற்கு இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சத்தைச் செலவு செய்திருக்கிறார். இவருடைய செலவுக்கான பணத்தை ஈட்ட லெஸ் என்கிற வலைப்பதிவில் ‘Life On The Train’ என்கிற பெயரில் தினமும் பயண வீடியோக்களைப் பகிர்ந்துவருகிறார். இதன்மூலம் வருவாயும் ஈட்டிவருகிறார். இப்படியும் ஓர் இளைஞர்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago