‘கா
லத்தால் அழியாதது காதல்’ என்று சொல்வார்கள். முற்காலத்தில் காதலை வெளிப்படுத்த கடிதங்கள் மட்டுமே ஊடகமாய் இருந்தன. அது காதல் கடிதங்களால்தான் சாத்தியமானது. காதலுக்கு எப்படி அழிவில்லையோ, வரலாற்றில் பதிந்த காதல் கடிதங்களுக்கும் அழிவில்லை. அவை நூற்றாண்டுகள் கடந்தும் காதலைப் போற்றும் சாட்சிகளாக விளங்குகின்றன. அந்த வகையில், இந்தக் காதலர் தினத்தில் சில பிரபல காதல் கடிதங்களின் தொகுப்பு:
6chgow_Johnny Cash_June Carter Cash ஜானி கேஷ்rightஜானி கேஷ்
அமெரிக்க பாடகர் ஜானி கேஷ் தன் மனைவி ஜூன் கார்ட்டருக்கு 65வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதம். இந்தக் கடிதம், ‘தி டெலிகிராஃப்’ இணையதளம் 2015-ம் ஆண்டு நடத்திய வாக்கெடுப்பில் ‘எக்காலத்திலும் சிறந்த காதல் கடித’மாக நெட்டிசன்களால் தேர்வானது.
பிறந்தநாள் வாழ்த்துகள் இளவரசி,
23, ஜூன் 1994
நமக்கு வயதாகிவிட்டது. நாம் ஒருவருக்கொருவர் மிகவும் தெரிந்தவராகிவிட்டோம். நாம் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறோம். நாம் பரஸ்பரம் மனங்களை வாசிக்கிறோம். நம் தேவைகளை பேசிக்கொள்ளாமலேயே அறிந்துவைத்திருக்கிறோம். சில நேரம் நாம் ஒருவரையொருவர் சிறிது வெறுப்பேற்றவும் செய்கிறோம். சில நேரம் அதீத உரிமையும் எடுத்துகொள்கிறோம்.
ஆனால், எப்போதாவது ஒருமுறை, நான் இந்த உலகிலேயே சிறந்த பெண்ணுடன் என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டிருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்பதை உணர்கிறேன். இன்றும் நீ என்னைக் கவர்கிறாய். எனக்கு ஊக்கமாக இருக்கிறாய். மேலும் சிறந்தவன் ஆவதற்கான தாக்கத்தை என் மீது செலுத்துகிறாய். நீ என் ஆசைக்குரியவள் . இந்தப் பூமியில் நான் வாழ்வதற்கான காரணம் நீ. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துகள் இளவரசி!
- ஜான்
பீத்தோவன்
இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் தன் ‘அழிவற்ற காதலி’க்கு எழுதிய கடிதம். இவருடைய காதலியின் அடையாளம் வரலாற்றில் புதிராகவே பதிவாகியிருக்கிறது.
7 ஜூலை 1812
நான் உன்னுடன் சேர்ந்துதான் வாழமுடியும்; அல்லது என்னால் வாழவே முடியாது. ஆம், நான் உன் கரங்களுக்குள் நிம்மதியாக அடைக்கலாமாகும்வரை, வெகு தூரம் அலைந்து திரிய முடிவு செய்திருக்கிறேன். என் ஆன்மாவை உன் ஆன்மாவால் போர்த்தி, ஆத்மாக்களின் பிரதேசத்துக்கு என்னால் அனுப்ப முடியும். ஆம், அதற்காக வருந்துகிறேன். அது அப்படித்தான். உன் மீதான என் விசுவாசத்தை நீ அறியவரும் போது அந்தச் சந்தேகத்தைக் கடந்து விடுவாய்.
என் இதயத்தில் இன்னொருவருக்கு ஒருபோதும் இடம் கிடையவே கிடையாது. அத்துணை அளவு நேசிப்பவரை விட்டு ஒருவர் ஏன் விலக வேண்டும், உனது காதல் என்னை அதீத மகிழ்ச்சிக்கும் சோகத்துக்கும் ஒரேநேரத்தில் இட்டுச் செல்கிறது. எனக்கொரு தொடர்ச்சியும் சமநிலையும் தேவைப்படும் வயது இது. நமது சூழ்நிலைகளில் இது சாத்தியமா? அமைதியாக இரு - காதலி- இன்றும்- நாளையும். உனக்காக விடும் கண்ணீர் எதற்காக ஏங்குகிறது. என்னை என்றைக்கும் காதலி- மிக மிக விசுவாசமிக்க இதயத்தை ஒரு போதும் சந்தேகிக்காதே!
6chgow_beethoven பீத்தோவன்
அன்புடன்
- எல்
எப்போதும் உன்னுடையது!
எப்போதும் என்னுடையது!
எப்போதும் நம்முடையது!
ஜான் கீட்ஸ்
கவிஞர் ஜான் கீட்ஸ், தன் காதலி ஃபேன்னி பிரானுக்கு எழுதிய கடிதம்.
13 அக்டோபர் 1819
என் உயிருக்குயிரான குட்டிப்பெண்ணே!
என் காதல் என்னை சுயநலமானவனாக ஆக்கிவிட்டது. நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது- உன்னைப் பார்க்கும்போது எல்லாமே மறந்துபோய் வாழ்க்கை அங்கேயே உறைந்துவிடுமென்று உணர்கிறேன். நீ என்னை முழுக்க ஆட்கொண்டுவிட்டாய். இந்தக் கணத்திலேயே நான் அமிழ்ந்து போனாலும் உன்னைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்லாவிடில் மிகப் பரிதாபகரமானவன் ஆகிவிடுவேன். உன்னைப் பிரிந்து தூரமாகச் செல்வதற்குப் பயம்கொள்கிறேன்.
என் இனிய ஃபேன்னி, உன் மனம் மாறவே மாறாதா? என் அன்பே, அது மாறுமா? என் காதலுக்கு எந்த எல்லையும் இல்லை. உன்னைப் பிரிந்து என்னால் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியாது. வேடிக்கையாகக்கூட என்னை பயமுறுத்தாதே! ஆண்கள் மதத்திற்காக உயிர்த் துறக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. இதைக் கேட்டு நடுங்கியிருக்கிறேன். இனி நடுங்கப்போவதில்லை. நான் என் மதத்துக்காக உயிர்த் துறப்பேன்.
காதலே என் மதம். என்னால் அதற்காக உயிர்த் துறக்க முடியும். என்னால் உனக்காக உயிர்த் துறக்க முடியும். என் மதம் காதல்தான். அதன் ஒரே ஒழுக்க நெறி நீதான். என் காதல் சுயநலமானது. நீ இல்லாமல் என்னால் சுவாசிக்க முடியாது.
என்றும் உன்னுடையவன்
- ஜான் கீட்ஸ்
கியூரி
இயற்பியலாளர் பியரி கியூரி, திருமணத்துக்குமுன் இயற்பியலாளர் மேரி கியூரிக்கு எழுதிய கடிதம்
ஆகஸ்ட் 10, 1894
உன்னைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்வதைவிட வேறு எதுவும் எனக்கு இத்தனை மகிழ்ச்சியை அளிப்பதில்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இருக்கப்போவதை என்னால் சற்றும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
நீ அக்டோபரில் திரும்பி வந்துவிடுவாய் என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை, நான் எங்கேயும் செல்வதாக இல்லை. என் வீட்டின் திறந்த ஜன்னலுக்கு அருகேயோ அல்லது தோட்டத்திலோ முழு நாளையும் கழிக்கப் போகிறேன்.
சிறந்த நண்பர்களாகவாவது இருப்போம் என்று நாம் ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்திருக்கிறோம், அப்படித்தானே? ஒருவேளை, நீ உன் மனதை மாற்றிக்கொள்ளாவிட்டால்? ஆனால், அதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை.
இத்தகைய விஷயங்களை ஒருவர் விருப்பத்துக்கேற்ப உத்தரவாகப் போட முடியாது. நம்முடைய மனிதாபிமானமிக்க, விஞ்ஞானக் கனவுகளால் வசியப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை நாம் ஒருவருக்கொருவர் அருகாமையில் கழித்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதை நம்ப முடியவில்லை.
உன்னை ‘ஃப்ரிபோர்க்’கில் ஒரு முறை சந்திப்பதற்கு அனுமதி கேட்க நினைத்திருக்கிறேன். நீ தவறாக நினைக்காவிட்டால், ஒரே ஒரு நாள் உன்னைச் சந்திக்கலாம் என்றிருக்கிறேன்.
அர்ப்பணிப்புடன் உன்னுடைய
- பியரி கியூரி
ஃபிரீடா காலோ
ஓவியர் ஃபிரீடா காலோ, ஓவியர் டியேகோ ரிவேராவுக்கு எழுதிய கடிதம்.
டியகோ, என் அன்பே,
1940
இந்த ஃப்ரெஸ்கோ ஓவியத்தை முடித்தவுடன் நாம் இருவரும் என்றென்றும் ஒன்றாக இருக்கபோகிறோம் என்பதை நினைவில் வைத்துகொள். எந்த வாக்குவாதங்களும் வேறு எந்த பிரச்சினைகளும் இல்லாமல் ஒருவரையொருவர் நேசிப்பதற்காக மட்டும் ஒன்றிணைவோம்.
6chgow_Frieda Diego1 ஃபிரீடா காலோ
எப்போதையும்விட உன்னை அதிகமாக ஆராதிக்கிறேன்.
உன்னுடைய காதலி,
- ஃபிரீடா
மர்லின் மன்ரோ
நடிகை மர்லின் மன்ரோ ஜோ டிமாகியோவுக்கு எழுதிய கடிதம்
1954
நீ இல்லாதது என்னை எந்தளவு பாதிக்கிறது என்றெனக்குச் சொல்லத் தெரியவில்லை. என் இதயம் தகர்ந்துபோகும் அளவுக்கு நேசிக்கிறேன். நான் விரும்புவது, எனக்கு வேண்டியது, எல்லாம் எப்போதும் நீயேதான். நீ எங்கே இருக்கிறாயோ, அங்கிருக்கவே விரும்புகிறேன்.
நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி இருப்பேன். எப்போதுமே தாமதமாக என்னை வெளிப்படுத்துவது என்னுடைய தவறான பண்பு என்றெனக்குத் தெரியும். அதைத் தவிர்க்க லட்சம் முறை முயல்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
அன்புடன்
மர்லின்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago